search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free Coaching"

    • தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • இப்பயிற்சி வகுப்பு ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் டாக்டர் மணி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், வரலாறு, புவியியல் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் B.Ed மற்றும் TNTET Paper – II தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்கள் www.trb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2023 ஆகும்.

    இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் வழிகாட்டுதல், சேலம் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது. இப்பயிற்சி வகுப்பு ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது.

    சேலம் மாவட்டத்தைச் சார்ந்த பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள் ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • சட்டப்படிப்பு பயில அகில இந்திய அளவில் நடத்த ப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது.
    • திண்டுக்கல் மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களில் 18 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட 12-ஆம் வகுப்பு முடித்த மற்றும் நடப்பு ஆண்டில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 லட்சத்திற்குள் உள்ள மாணவர்களுக்கு சட்ட பல்கலைக்கழகங்களில் சட்டப்படிப்பு பயில அகில இந்திய அளவில் நடத்த ப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள இணைய தளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டும்.

    சட்டப்ப டிப்பு நுழைவு தேர்விற்கான பயிற்சியினை முடிக்கும் மாணவர்க ளுக்கு 2ம் கட்ட நேர்காண லுக்கான குழு விவாதம் மற்றும் எழுத்து தேர்வு களுக்கான பயிற்சிகளும் வழங்கப்படும்.

    மேலும் விவரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    • ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.
    • மேலும் விபரங்களுக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2023-ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வுத்தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுகளுக்கான அறிவிப்பு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவசப் பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் சிறந்த வல்லுனர்களைக் கொண்டு நேரடி பயிற்சி வகுப்புகள் நாளை (30-ந் தேதி) முதல் தொடங்கப்பட உள்ளது.

    இப்பயிற்சி வகுப்புகள் வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் நடைபெறும். இப்பயிற்சியின் போது ஒவ்வொரு பாடத்திற்கும் மாதிரி தேர்வுகள், வினாடி வினா மற்றும் குழு விவாதங்களும் நடத்தப்படும்.

    ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 ஆகிய தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் போட்டித் தேர்வர்கள் நேரடி பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம். இது தொடர்பான விபரங்களுக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • 2000 துணை மேலாளா் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
    • முதற்கட்ட தோ்வு, முதன்மை, நோ்காணல் மற்றும் குழுப்பயிற்சி என 3 நிலைகளில் நடைபெறவுள்ளது.

    திருப்பூா்,செப்.26-

    எஸ்பிஐ., வங்கியின் துணை மேலாளா் பதவிக்கான தோ்வில் வெற்றிபெற ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களுக்கு தாட்கோ நிறுவனம் மூலம் இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:-

    எஸ்பிஐ., வங்கியின் துணை மேலாளா் பணிக்கான அதிகாரப்பூா்வமான அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 2000 துணை மேலாளா் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

    இத்தோ்வில் பங்கேற்க 21 முதல் 35 வயது வரை உள்ள ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் வரும் செப்டம்பா் 27 -ந் தேதிக்குள் இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம்.

    இந்த தோ்வு முதற்கட்ட தோ்வு, முதன்மை, நோ்காணல் மற்றும் குழுப்பயிற்சி என 3 நிலைகளில் நடைபெறவுள்ளது. இந்தப்பதவிக்கான ஆரம்பகால மாத ஊதியம் ரூ.41,960 ஆகும்.இந்தத் தோ்வில் வெற்றி பெற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு பயிற்சி நிலையத்தின் மூலமாக இலவச பயிற்சியை வழங்க தட்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த பயிற்சியை பெற விரும்பும் மாணவா்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94450-29552, 0421-2971112 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எஸ்.பி.ஐ. வங்கி மூலம் துணை மேலாளர் பணிக்கான அதிகார பூர்வமான அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    • இதில் 21 வயது முதல் 35 வயது வரை உள்ள ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த அனைத்து ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பட்டதாரி மாணவர்கள் வருகிற 27-ந் தேதிக்குள் இணையதள த்தின் வழியாக விண்ண ப்பிக்கலாம்.

    தேனி:

    தாட்கோ நிறுவனத்தின் மூலம் எஸ்.பி.ஐ. வங்கியில் துணை மேலாளர் பதவி க்கான தேர்வில் வெற்றி பெற பயிற்சி நிலையத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.

    அதன்படி எஸ்.பி.ஐ. வங்கி மூலம் துணை மேலாளர் பணிக்கான அதிகார பூர்வமான அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி எஸ்.பி.ஐ. வங்கியில் துணை மேலாள ருக்கான 2000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 21 வயது முதல் 35 வயது வரை உள்ள ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த அனைத்து ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பட்டதாரி மாணவர்கள் வருகிற 27-ந் தேதிக்குள் இணையதள த்தின் வழியாக விண்ண ப்பிக்கலாம்.

    இத்தேர்வுக்கு விண்ண ப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணை யதளம் வழியாக நடை பெறும். முதற்கட்டத்தேர்வு, முதன்மை, நேர்காணல் மற்றும் குழுப் பயிற்சிகள் என 3 நிலைகளில் தேர்வு நடைபெற உள்ளது. முதற்கட்டத் தேர்வு 2023 டிசம்பர் மற்றும் 2024 ஜனவரியிலும், நேர்காணல் மற்றும் குழு பயிற்சிகளு க்கான அழைப்பு 2024 ஜனவரி மற்றும் பிப்ரவரியி லும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    துணை மேலாளர் பதவி க்கான தேர்வில் வெற்றி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்க ளுக்கு பயிற்சி நிலையத்தின் மூலம் இலவச பயிற்சியை வழங்க தாட்கோ நிறுவனம் முடிவு செய்து ள்ளது. இப்பயிற்சியினைப் பெற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ மூலமாக ஏற்க ப்படும் என தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

    • சார்பு-ஆய்வாளர், இரண்டாம் நிலை காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
    • முன்னணி பயிற்சி நிலையங்களிலுள்ள ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை அஞ்சல், முகமதியா நகரில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள இந்திய ராணுவத்திற்கான அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாமில் தேர்வு செய்யப்படவுள்ள பல்வேறு வகையான ராணுவப்பணி யிடங்களுக்கு, மத்திய துணை ராணுவப்படையால் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான தலைமை காவலர் –, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்படவுள்ள சார்பு-ஆய்வாளர், இரண்டாம் நிலை காவலர் ஆகிய பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு இன்று முதல் அலுவலகத்தில் நடத்தப்படுகிறது.

    போட்டித்தேர்விற்கு தயாராகும் ஆர்வலர்கள் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறது. இலவச பயிற்சி வகுப்புகளில் வாரம் ஒருமுறை மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. முன்னணி பயிற்சி நிலையங்களிலுள்ள ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக தமிழக அரசால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் சுய விவரங்களை உள்ளீடு செய்து அனைத்து ஆன்லைன் தேர்வு எழுதுதல், பாடக்குறிப்புகள் மற்றும் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற மாதிரி வினாத்தாள்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.

    மேற்காணும் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்கள் புகைப்படம் மற்றும் ஆதார் எண்ணுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை, அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது 6381552624 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டு பயனடையுமாறு கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • பல்வேறு தேர்வுகளுக்கான 11,000 காலியான அரசு பணியிடங்கள்தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளது.
    • 18 முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர்/பழங்குடியின மாணவர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் பல்வேறு பணிகளுக்கான தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    இது குறித்து கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)மூலமாக ஆதிதிராவிடர்/பழங்குடியின பிரிவினைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் பணியாளர் அரசு தேர்வு ஆணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான தேர்வு நாட்காட்டி அதிகாரபூர்வ இணையதளத்தில் http://ssc.nic.in_வெளியிடப்பட்டுள்ளது. இப்பல்வேறு தேர்வுகளுக்கான 11,000 காலியான அரசு பணியிடங்கள்தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளது.

    இத்தேர்வில் ஆதிதிராவிடர் - பழங்குடியின மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற தாட்கோ மூலமாக இலவச பயிற்சி தனியார் நிறுவனத்தின் மூலம் அளிக்கப்பட உள்ளது. இதில் 18 முதல் 32 வயது வரை உள்ள பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு,ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்த மாண வர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும். இப்பதவிக்கான தேர்வு முறையானது 3முறைகளில் நடைபெற உள்ளது.

    இப்போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதிகேற்ப ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.22,000 வரை பணியமர்த்தப்படுவார்கள். மேற்கண்ட தேர்வில் ஆதிதிராவிடர்/பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் தாட்கோவால் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.  

    • விருதுநகரில் மத்திய அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
    • தேர்வு குறித்து மேலும் அறிந்து கொள்ள www.ssc.nic.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

    விருதுநகர்

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் எஸ்.எஸ்.சி., சி.எச்.எஸ்.எல். தேர்விற்கு அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 4500 பணி காலியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு குறித்து மேலும் அறிந்து கொள்ள www.ssc.nic.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

    விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற ஜனவரி மாதம் 4-ந்தேதி ஆகும். இந்த தேர்வுக்குரிய இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் கடந்த 6-ந் தேதி முதல் நேரடியாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

    போட்டித்தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை நேரில் அணுகலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு 04562 - 293613 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    • மத்திய அரசு பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.
    • கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் எஸ்.எஸ்.சி. (ஜி.டி.) மற்றும் எஸ்.எஸ்.சி. (சி.எஸ்.எஸ்.எல்.) ஆகியவற்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 45000 பணிக்காலி யிடங்களுக்கான எழுத்து தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு குறித்து மேலும் www.ssc.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

    இத்தேர்வுக்குரிய இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் வருகிற 5-ந் தேதி அன்று காலை 10.30 மணிக்கு ஆரம்ப வகுப்புகள் நடைபெற உள்ளது.

    மேலும் இப்போட்டி தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை நேரில் அணுகலாம் என கேட்டுக்கொள்ள ப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு 04562 - 293613 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    • குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
    • கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் குரூப்-2 தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் வாயிலாக கட்டணமில்லா போட்டித் தோ்வுக்கான பயிற்சி வகுப்பு அனுபவம் வாய்ந்த பயிற்றுநா்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-2 காலி பணியிடங்களுக்கான முதன்மை தோ்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தோ்வுகள் புதன்கிழமை (நவ.30) முதல் அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடை பெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவா்கள் சுயவிவரகுறிப்புகளுடன் அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம்.

    • தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் 60 அடி ரோடு சக்தி நகர் தென்காசி என்ற முகவரியில் இந்த ஆண்டு ஜனவரி 25-ந்தேதி முதல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
    • இலவச பயிற்சி வகுப்புகள், வாரம் ஒருமுறை மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. முன்னணி பயிற்சி நிலையங்களில் உள்ள ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் 60 அடி ரோடு சக்தி நகர் தென்காசி என்ற முகவரியில் இந்த ஆண்டு ஜனவரி 25-ந்தேதி முதல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்ட வாயிலாக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையத்தின் அறிவிக்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1, குரூப்-2 முதன்மைத் தேர்வு மற்றும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கிரேடு-2 ஆகிய தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து திங்கள் முதல் வெள்ளி வரை அலுவலகத்தில் வைத்து நடத்தப்படுகிறது.

    போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன டையுமாறு கேட்டுக் கொள்ள ப்படுகிறது.

    பயிற்சி வகுப்பின் சிறப்பு அம்சங்கள்:

    முற்றிலும் இலவச பயிற்சி வகுப்புகள், வாரம் ஒருமுறை மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. முன்னணி பயிற்சி நிலையங்களில் உள்ள ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக தமிழக அரசால் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட https:// tamilnaducareerservices. tn. gov. in என்ற இணையதளத்தில் தங்கள் சுய விவரங்களை உள்ளீடு செய்து அனைத்து ஆன்லைன் தேர்வு எழுதுதல் பாடக்குறிப்புகள் மட்டும் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற மாதிரி வினாத்தாள்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து பயன் பெறலாம்.

    மேற்காணும் தேர்வுக்கு விண்ணப்பித்து இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்கள் புகைப்படம் மற்றும் ஆதார் எண்ணுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது 9092554182 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

    • மத்திய அரசு பணியிடங்களுக்கான தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
    • மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.

    அரியலூர்

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) மற்றும் பாரத ஸ்டேட் வங்கியால் அறிவிக்கப்பட்டுள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு வருகிற 26-ந்தேதி முதல் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் தொடங்க உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மேற்குறிப்பிட்ட பணிக்காலியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல்களுடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவரக்குறிப்புகளுடன் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேற்காணும் பணிக்காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள இளைஞர்கள் https://ssc.nic.in, www.sbi.co.in/careers என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம். இந்த தகவல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×