பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இப்பயிற்சி வகுப்பு ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது.
பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள்
Published on

சேலம்:

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் டாக்டர் மணி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், வரலாறு, புவியியல் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் B.Ed மற்றும் TNTET Paper – II தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்கள் www.trb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2023 ஆகும்.

இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் வழிகாட்டுதல், சேலம் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது. இப்பயிற்சி வகுப்பு ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சார்ந்த பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள் ளப்படுகிறது.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com