மத்திய அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

விருதுநகரில் மத்திய அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தேர்வு குறித்து மேலும் அறிந்து கொள்ள www.ssc.nic.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.
மத்திய அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
Published on

விருதுநகர்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் எஸ்.எஸ்.சி., சி.எச்.எஸ்.எல். தேர்விற்கு அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 4500 பணி காலியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு குறித்து மேலும் அறிந்து கொள்ள www.ssc.nic.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற ஜனவரி மாதம் 4-ந்தேதி ஆகும். இந்த தேர்வுக்குரிய இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் கடந்த 6-ந் தேதி முதல் நேரடியாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

போட்டித்தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை நேரில் அணுகலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு 04562 - 293613 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com