என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவசபயிற்சி"

    • இரண்டாம் நிலை காவலர் தேர்விற்கு இலவசபயிற்சி வகுப்பு நடைபெற்றது
    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில்

    கரூர்:

    தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சமுதாய நல மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்கள் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் உடற்பயிற்சி வகுப்புகள் காகித நிறுவன மனிதவள அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சமுதாய நலப்பணித் திட்டத்தின் ஒரு பகுதியாக, காகித நிறுவன குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு அரங்கத்தில் 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான இரண்டு மாத காலங்கள், தமிழ்நாடு அரசு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்கள் பணிக்கான போட்டித் தேர்வுகளில் கலந்து வெற்றி பெறுவதற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    இவ்வகுப்புகளில் ஆலை வளாகத்தைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்கள் மற்றும் பிற மாவட்டங்களை சார்ந்த 50 பேர் பயிற்சியில் சேர்ந்து பயின்று வருகின்றனர். இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயிற்சி பெறும் அனைவருக்கும் உணவு, தேநீர், பால் மற்றும் சத்துணவுகள் வழங்கப்படும் மேலும், உடல் தகுதித்திறன் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் அனைத்தும் சுல்வி வல்லுனர்களையும் உடற்கல்வி ஆசிரியர்களையும் கொண்டு சிறப்பான முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆசிரியர், ஆசிரியை பெருமக்களை பாராட்டும்வி தமாக அவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.

    • 2000 துணை மேலாளா் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
    • முதற்கட்ட தோ்வு, முதன்மை, நோ்காணல் மற்றும் குழுப்பயிற்சி என 3 நிலைகளில் நடைபெறவுள்ளது.

    திருப்பூா்,செப்.26-

    எஸ்பிஐ., வங்கியின் துணை மேலாளா் பதவிக்கான தோ்வில் வெற்றிபெற ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களுக்கு தாட்கோ நிறுவனம் மூலம் இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:-

    எஸ்பிஐ., வங்கியின் துணை மேலாளா் பணிக்கான அதிகாரப்பூா்வமான அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 2000 துணை மேலாளா் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

    இத்தோ்வில் பங்கேற்க 21 முதல் 35 வயது வரை உள்ள ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் வரும் செப்டம்பா் 27 -ந் தேதிக்குள் இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம்.

    இந்த தோ்வு முதற்கட்ட தோ்வு, முதன்மை, நோ்காணல் மற்றும் குழுப்பயிற்சி என 3 நிலைகளில் நடைபெறவுள்ளது. இந்தப்பதவிக்கான ஆரம்பகால மாத ஊதியம் ரூ.41,960 ஆகும்.இந்தத் தோ்வில் வெற்றி பெற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு பயிற்சி நிலையத்தின் மூலமாக இலவச பயிற்சியை வழங்க தட்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த பயிற்சியை பெற விரும்பும் மாணவா்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94450-29552, 0421-2971112 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×