மத்திய அரசு பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

மத்திய அரசு பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
Published on

விருதுநகர்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் எஸ்.எஸ்.சி. (ஜி.டி.) மற்றும் எஸ்.எஸ்.சி. (சி.எஸ்.எஸ்.எல்.) ஆகியவற்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 45000 பணிக்காலி யிடங்களுக்கான எழுத்து தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு குறித்து மேலும் www.ssc.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இத்தேர்வுக்குரிய இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் வருகிற 5-ந் தேதி அன்று காலை 10.30 மணிக்கு ஆரம்ப வகுப்புகள் நடைபெற உள்ளது.

மேலும் இப்போட்டி தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை நேரில் அணுகலாம் என கேட்டுக்கொள்ள ப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு 04562 - 293613 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com