search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "THADCO"

    • பல்வேறு தேர்வுகளுக்கான 11,000 காலியான அரசு பணியிடங்கள்தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளது.
    • 18 முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர்/பழங்குடியின மாணவர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் பல்வேறு பணிகளுக்கான தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    இது குறித்து கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)மூலமாக ஆதிதிராவிடர்/பழங்குடியின பிரிவினைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் பணியாளர் அரசு தேர்வு ஆணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான தேர்வு நாட்காட்டி அதிகாரபூர்வ இணையதளத்தில் http://ssc.nic.in_வெளியிடப்பட்டுள்ளது. இப்பல்வேறு தேர்வுகளுக்கான 11,000 காலியான அரசு பணியிடங்கள்தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளது.

    இத்தேர்வில் ஆதிதிராவிடர் - பழங்குடியின மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற தாட்கோ மூலமாக இலவச பயிற்சி தனியார் நிறுவனத்தின் மூலம் அளிக்கப்பட உள்ளது. இதில் 18 முதல் 32 வயது வரை உள்ள பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு,ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்த மாண வர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும். இப்பதவிக்கான தேர்வு முறையானது 3முறைகளில் நடைபெற உள்ளது.

    இப்போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதிகேற்ப ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.22,000 வரை பணியமர்த்தப்படுவார்கள். மேற்கண்ட தேர்வில் ஆதிதிராவிடர்/பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் தாட்கோவால் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.  

    • மலைவாழ் மக்களுக்கு தனிநபர் வன உரிமை ஆவணம் வழங்கப்பட்டுள்ளது.
    • திட்ட அறிக்கை ஆகியவற்றுடன் இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மாணவர்களுக்கு சிறப்பு கட்டணம் செலுத்தும் திட்டத்தில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பழங்குடியினர் பெண் கல்வி ஊக்குவிப்புத்தொகை, உண்டு, உறைவிடப்பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மலைவாழ் மக்களுக்கு தனிநபர் வன உரிமை ஆவணம் வழங்கப்பட்டுள்ளது.

    தாட்கோ திட்டத்தின் மூலமாக இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மானிய உதவி வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது.

    தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்காக செயல்படுத்தும் திட்டங்கள், தொழில்முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டம், நில மேம்பாட்டு திட்டம், நிலம் வாங்கும் திட்டம் (மகளிர் மட்டும்), துரித மின் இணைப்பு திட்டம் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 65 வயது வரை இருக்க வேண்டும்.

    குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தாட்கோ இணையதள முகவரியில் www.application.tahdco.com பதிவு செய்ய வேண்டும். தேவைப்படும் ஆவணங்களான புகைப்படம், சாதிச்சான்று, வருமானச்சான்று, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, விலைப்புள்ளி, திட்ட அறிக்கை ஆகியவற்றுடன் இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    ×