search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாட்கோ திட்டத்தில் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்
    X

    கோப்புபடம்

    தாட்கோ திட்டத்தில் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்

    • மலைவாழ் மக்களுக்கு தனிநபர் வன உரிமை ஆவணம் வழங்கப்பட்டுள்ளது.
    • திட்ட அறிக்கை ஆகியவற்றுடன் இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மாணவர்களுக்கு சிறப்பு கட்டணம் செலுத்தும் திட்டத்தில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பழங்குடியினர் பெண் கல்வி ஊக்குவிப்புத்தொகை, உண்டு, உறைவிடப்பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மலைவாழ் மக்களுக்கு தனிநபர் வன உரிமை ஆவணம் வழங்கப்பட்டுள்ளது.

    தாட்கோ திட்டத்தின் மூலமாக இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மானிய உதவி வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது.

    தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்காக செயல்படுத்தும் திட்டங்கள், தொழில்முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டம், நில மேம்பாட்டு திட்டம், நிலம் வாங்கும் திட்டம் (மகளிர் மட்டும்), துரித மின் இணைப்பு திட்டம் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 65 வயது வரை இருக்க வேண்டும்.

    குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தாட்கோ இணையதள முகவரியில் www.application.tahdco.com பதிவு செய்ய வேண்டும். தேவைப்படும் ஆவணங்களான புகைப்படம், சாதிச்சான்று, வருமானச்சான்று, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, விலைப்புள்ளி, திட்ட அறிக்கை ஆகியவற்றுடன் இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×