search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Govt Competitive Exam"

    • சார்பு-ஆய்வாளர், இரண்டாம் நிலை காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
    • முன்னணி பயிற்சி நிலையங்களிலுள்ள ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை அஞ்சல், முகமதியா நகரில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள இந்திய ராணுவத்திற்கான அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாமில் தேர்வு செய்யப்படவுள்ள பல்வேறு வகையான ராணுவப்பணி யிடங்களுக்கு, மத்திய துணை ராணுவப்படையால் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான தலைமை காவலர் –, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்படவுள்ள சார்பு-ஆய்வாளர், இரண்டாம் நிலை காவலர் ஆகிய பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு இன்று முதல் அலுவலகத்தில் நடத்தப்படுகிறது.

    போட்டித்தேர்விற்கு தயாராகும் ஆர்வலர்கள் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறது. இலவச பயிற்சி வகுப்புகளில் வாரம் ஒருமுறை மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. முன்னணி பயிற்சி நிலையங்களிலுள்ள ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக தமிழக அரசால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் சுய விவரங்களை உள்ளீடு செய்து அனைத்து ஆன்லைன் தேர்வு எழுதுதல், பாடக்குறிப்புகள் மற்றும் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற மாதிரி வினாத்தாள்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.

    மேற்காணும் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்கள் புகைப்படம் மற்றும் ஆதார் எண்ணுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை, அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது 6381552624 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டு பயனடையுமாறு கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    ×