search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாட்கோ"

    • தாட்கோ வணிக வளாக கட்டிடத்தை இடிக்க வேண்டும் என சுரண்டை நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருந்தது.
    • சுரண்டை பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கூட்டுறவு பண்டகசாலை பொருட்கள் பாதுகாப்பு குடோன் கட்டுவதற்கான இடத்தையும் ஆய்வு செய்தனர்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சிக் குட்பட்ட சங்கரன்கோவில் ரோட்டில் அமைந்துள்ள தாட்கோ வணிக வளாகம் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் பயன்பாடு இல்லாமல் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    பொது மக்களுக்கு ஆபத்து ஏதும் ஏற்படும் முன் அந்த கட்டிடத்தை இடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் தாட்கோ வணிக வளாக கட்டிடத்தை இடிக்க வேண்டும் என சுரண்டை நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருந்தது.

    அதைத்தொடர்ந்து சுரண்டைக்கு வந்த தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப் பாளர் ஜெயபாலன், தனுஷ் குமார் எம்.பி., ராஜா எம்.எல்.ஏ., சுரண்டை சேர்மன் வள்ளிமுருகன், நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் (பொறுப்பு) ஆகியோர் தாட்கோ வணிக வளாக கட்டிடத்தின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து பங்களா சுரண்டை பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கூட்டுறவு பண்டகசாலை பொருட்கள் பாதுகாப்பு குடோன் கட்டுவதற்கான இடத்தையும் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது சுரண்டை நகராட்சி பொறி யாளர் முகைதீன், பணி மேற்பார்வையாளர் வினோத் கண்ணன், கவுன்சிலர் வேல்முத்து, மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி அமைப்பாளர் முத்துக்குமார், சுரண்டை நகர தி.மு.க. அவைத்தலைவர் சுப்பிரமணியன், கூட்டுறவு சங்க துணை தலைவர் கணேசன், சுரண்டை வார்டு செயலாளர் முத்துக்குமார், மாவட்ட பிரதிநிதி பொன் செல்வன், மாணவர் அணி ரமேஷ், சுந்தரபாண்டியபுரம் பேரூர் முன்னாள் செய லாளர் மாரியப்பன், டான் கணேசன், ராஜன் மற்றும் ஏராளமான தி.மு.க., காங்கி ரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • பழங்குடியின வகுப்பை சார்ந்த நபர்களுக்கு தாட்கோ மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்.
    • அலுவலக மாநில திட்ட மேலாளரை (திட்டங்கள்) செல்போன் எண்ணில் 7358489990 தொடர்பு கொள்ளலாம்

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்கள் பெட்ரோல் நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம்(தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த நபர்களுக்கு தாட்கோ மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்.

    இத்திட்டத்தில் பயன்பெற www.petrolpumpdealerchayan.in என்ற இணையதளத்தில் 18 வயது முதல் 60 வயது உள்ள ஆண்/பெண் அனைவரும் 27.9.2023க்குள் விண்ணப்பிக்கலாம். பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் முதல் முறையாக கொள்முதல் செய்யும் பெட்ரோல்- டீசல் (ஒரு டேங்கர்) தொகையினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு குறைந்த வட்டியில் தாட்கோ மூலமாக கடனாக வழங்கப்படும். பாரத் பெட்ரோலியம் லிமிடெட் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் தாட்கோ தலைமை அலுவலக மாநில திட்ட மேலாளரை (திட்டங்கள்) செல்போன் எண்ணில் 7358489990 தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண்:501(ம) 503, 5 வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர்-641 604 என்ற முகவரியிலும், 94450 29552, 0421-2971112 என்ற செல்போன்-தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    • தாட்கோ மூலம் துரித மின் இணைப்பு பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கூறி உள்ளார்.
    • மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2022-23-ம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கான துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.

    இந்த திட்டத்தில் மின் மோட்டார் குதிரை திறனுக்கு ஏற்ப 90 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.60 லட்சம் மானியத்தில் ஆதி திராவிடர்களுக்கு 900 எண்ணிக்கையும் பழங்குடியினருக்கு 100 எண்ணிக்கையில் மொத்தம் 1,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு தாட்கோவின் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களாகவும் விவசாய நிலம் மற்றும் நிலப்பட்டா அவர்களின் பெயரில் இருப்பவர்கள் மட்டும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் நிலத்தில் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பத்திருக்க வேண்டும்.

    துரித மின் இணைப்பு திட்டத்தில் தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 5 எச்.பி.குதிரைத்திறன் மின் இணைப்பு கட்டணம் ரூ.2.50 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.25 ஆயிரம், 7.5 எச்.பி.குதிரை திறன் மின் இணைப்புகட்டணம் ரூ.2.75 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.27 ஆயிரத்து 500-ம், 10 எச்.பி. குதிரை திறன் மின் இணைப்பு கட்டணம் ரூ. 3 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.30 ஆயிரம், 15 எச்.பி.குதிரை திறன் மின் இணைப்பு கட்டணம் ரூ.4 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ. 40 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலை அளிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    தகுதியில்லாத விண்ணப்பதாரர்கள் பங்குத்தொகை 10 சதவீதம் திருப்பி அளிக்கப்படும். கடந்த 2017 முதல் 2022 ஆண்டுகளில் மின் இணைப்பு வேண்டி மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளும் தற்போது மேம்படுத்தப்பட்ட தாட்கோ இணையதளத்தில் 10 சதவீத பயனாளி பங்குத்தொகையுடன் புதிதாக விண்ணப்பிக்கலாம்.

    ஏற்கனவே மின் இணைப்பு கோரி காத்திருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.

    இந்த திட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் நிலத்தின் சிட்டா, அடங்கல் நகல், அ-பதிவேடு நகல், கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்ட நிலத்தின் வரைபடம், சர்வே எண், மின் வாரியத்தில் பதிவு செய்த ரசீது நகல், புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு சிவகங்கை தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல்வேறு தேர்வுகளுக்கான 11,000 காலியான அரசு பணியிடங்கள்தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளது.
    • 18 முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர்/பழங்குடியின மாணவர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் பல்வேறு பணிகளுக்கான தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    இது குறித்து கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)மூலமாக ஆதிதிராவிடர்/பழங்குடியின பிரிவினைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் பணியாளர் அரசு தேர்வு ஆணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான தேர்வு நாட்காட்டி அதிகாரபூர்வ இணையதளத்தில் http://ssc.nic.in_வெளியிடப்பட்டுள்ளது. இப்பல்வேறு தேர்வுகளுக்கான 11,000 காலியான அரசு பணியிடங்கள்தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளது.

    இத்தேர்வில் ஆதிதிராவிடர் - பழங்குடியின மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற தாட்கோ மூலமாக இலவச பயிற்சி தனியார் நிறுவனத்தின் மூலம் அளிக்கப்பட உள்ளது. இதில் 18 முதல் 32 வயது வரை உள்ள பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு,ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்த மாண வர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும். இப்பதவிக்கான தேர்வு முறையானது 3முறைகளில் நடைபெற உள்ளது.

    இப்போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதிகேற்ப ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.22,000 வரை பணியமர்த்தப்படுவார்கள். மேற்கண்ட தேர்வில் ஆதிதிராவிடர்/பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் தாட்கோவால் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.  

    • விண்ணப்பதாரர் மற்றும் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் ஏதும் பெற்றிருக்க கூடாது.
    • விண்ணப்பதாரர் மற்றும் வணிகத்தை தொடர்வதற்கு முன் விண்ணப்பதாரர் நிறுவனத்திலிருந்து உணவு உரிமத்தை பெற வேண்டும்.

    கடலூர்:

    தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் தொழில் முனைவோர் திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஆவின் பாலகம் அமைக்க மின் வாகனம் , குளிர்விப்பான் மற்றும் உறைவிப்பான் கொள்முதல் தாட்கோ மானியம் ரூ.90 ஆயிரம் மானியத்துடன் திட்டம் செயல்படுத்த அரசாணையிடப்பட்டுள்ளது. இதில் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். 18 முதல் 65 வயதிற்குள்ளவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் ஏதும் பெற்றிருக்க கூடாது. கூடுதல் செலவினத்தை ஈடு செய்யவும் மற்றும் அதிக பட்ச மானியத் தொகை சென்றடைய ஆதிதிராவிட தனிநபர்களுக்கான திட்டத் தொகையில் 30 சதவீதம் விழுக்காடு அல்லது அதிகபட்சமாக 2.25 இலட்சம் மானியம் விடுவிக்கப்படும்.

    ஆவின் பாலகம் அமைக்க தேர்ந்தெடுக்கப்படும் கடையின் இடம் குறைந்த பட்சம் 100 சதுர அடியாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் அருகில் உள்ள மண்டல அலுவலகத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்தவுடன் அந்தந்த மண்டல அலுவலகத்தின் பொது மேலாளர் மற்றும் துணை பொது மேலாளர் கடையை மதிப்பீடு செய்து ஒதுக்கீட்டு உத்தரவை வழங்குவார்கள். விண்ணப்பதாரர் மற்றும் வணிகத்தை தொடர்வதற்கு முன் விண்ணப்பதாரர் நிறுவனத்திலிருந்து உணவு உரிமத்தை பெற வேண்டும். ஆவின் பொருட்கள் ஆவின் மூலம் விற்பனை நிலையத்திற்கே நேரடியாக சென்று விநியோகம் செய்யப்படும். அதற்கான பணத்தை உடனடியாக செலுத்த வேண்டும். இத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்திக தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என கலெக்டர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • விருதுநகர் மாவட்டத்தில் தாட்கோ திட்டங்களில் பயன் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • மானியம் வழங்குவதற்கான அரசாணை வரப்பெற்றுள்ளது.

    விருதுநகர்,

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி விடுத்துள்ள செய்தி க்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு தேவைப்படும தீவனப்புல் வளர்க்க விதைத் தொகுப்பு மற்றும் புல்கறனைகள் வாங்குவதற்கு மானியம் வழங்குவதற்கான அரசாணை வரப்பெற்றுள்ளது.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் தீவனப்புல் மற்றும் புல்கறணைகள் வளர்க்க ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விதிமுறைகளின்படி விண்ணப்பதாரர்களை சம்மந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவர் பரிந்துரைப்பார்.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பி னர்களாக இருத்தல் வேண்டும் அல்லது உறுப்பினராக சேர வேண்டும்.பயனாளிகளுக்கு விதைத்தொகுப்பு புல்கறனைகளுடன் அத்தீவனங்களை வளர்க்க தேவையான பயிற்சி கையேடுகள் மற்றும் களப்பயிற்சி ஆகிய வற்றிற்கான செலவினங்கள் ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் மானியத் தொகைக்குட்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் இத்திட்டம் செயல்ப டுத்தப்படும்.தாட்கோ மாவட்ட மேலாளர் ஒவ்வொரு மாதமும் இத்திட்டத்தின் முன்னேற்றத்தை கண்டறி வதற்கு வழக்கமான கூட்டங்களை மாவட்ட அளவில் நடத்தி ஒவ்வொரு பயனாளியின் புகைப்பட ஆவணங்களை கட்டாயம் பராமரிக்க வேண்டும்.

    தீவன விதைகள் ஆவின் நிறுவனம், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தாட்கோ மூலம் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும்.
    • வயது 18 முதல் 65 வயதுவரை இருக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் 500-ல் 450 ஆதிதிராவிடர்களுக்கும் மற்றும் 50 பழங்குடியினருக்கும் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் மானியம் ரூ.2.25 கோடி, வங்கி கடன் ரூ.4.87 கோடி என முடிவு செய்யப்பட்டு, கறவை மாடு வாங்க ஒதுக்கீடு அரசாணை வரப்பெற்றுள்ளது.

    இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்திற்கு 18 ஆதிதிராவிடர்களுக்கு மானியம் ரூ.45 ஆயிரம் வீதம் ரூ.8.10 லட்சம் ஆகவும், பழங்குடியினர் 3 பேருக்கு தலா 45,000 வீதம் ரூ.1.35 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும், வயது 18 முதல் 65 வயதுவரை இருக்க வேண்டும், குடும்ப ஆண்டு வருமானம் 3 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும், விவசாயம் சார்ந்த தொழில் செய்பவராக இருக்க வேண்டும், தாட்கோ திட்டத்தில் இதுவரை மானியம் பெற்றிருக்க கூடாது, இத்திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்படும் திட்டத் தொகை ரூ.1.50 லட்சத்தில் 30 சதவீத மான்யம் அதாவது ரூ.45 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.

    இந்த திட்டத்தில் பயன்பெற சம்பந்தப்பட்ட அரசு கால்நடை மருத்துவரிடம் உரிய காப்பீடு செய்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர் பயனாளிகள் http://application.tahdco.com, http://application.tahdco.com என்ற இணையதளத்திலும் மற்றும் பழங்குடியினர் http://fast.tahdco.com, http://fast.tahdco.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் இதுவரை 158 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
    • வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு திட்ட கழக(தாட்கோ)த்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி பிறமாநிலங்களுக்கு தமிழகம் முன்உதாரணமாக உள்ளது.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் மூலம் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் இதுவரை 158 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி, இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் 23 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.

    மேலும் மகளிர் சுயஉதவிக்குழு மற்றும் பழங்குடியின மக்களுக்கு பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தாட்கோ மூலம் பயனடைந்த ஆண்டிபட்டி மேக்கிழார்பட்டியை சேர்ந்த சரவணன் கூறுகையில்,

    நான் விவசாய கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் வருமானம் மூலம் குடும்பத்தை நடத்தி வருகின்றேன். சொந்தமாக தொழில் தொடங்க பொருளாதார வசதி இல்லை. இந்த நிலையில் தமிழக அரசின் தாட்கோ மூலம் சொந்தமாக டிராக்டர் வாங்க இணையதளத்தில் விண்ணப்பித்தேன். இதில் அரசு மானியத்துடன் கடனுதவி வழங்கியது.

    இதனால் தற்போது ஓரளவு பொருளாதாரம் மேம்பட்டுள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    பெரியகுளத்தை சேர்ந்த முருகன் கூறுகையில்,

    நான் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தேன். தாட்கோ திட்டத்தின்மூலம் சரக்கு வாகனம் வாங்க மானியத்துடன் கடனுதவி பெற்றேன். இதனால் தற்போது ஓரளவு பொருளாதார நிலை உயர்ந்துள்ளது. இதற்காக தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு திட்ட கழக(தாட்கோ)த்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி பிறமாநிலங்களுக்கு தமிழகம் முன்உதாரணமாக உள்ளது என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் தெரிவித்துள்ளனர்.

    • மலைவாழ் மக்களுக்கு தனிநபர் வன உரிமை ஆவணம் வழங்கப்பட்டுள்ளது.
    • திட்ட அறிக்கை ஆகியவற்றுடன் இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மாணவர்களுக்கு சிறப்பு கட்டணம் செலுத்தும் திட்டத்தில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பழங்குடியினர் பெண் கல்வி ஊக்குவிப்புத்தொகை, உண்டு, உறைவிடப்பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மலைவாழ் மக்களுக்கு தனிநபர் வன உரிமை ஆவணம் வழங்கப்பட்டுள்ளது.

    தாட்கோ திட்டத்தின் மூலமாக இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மானிய உதவி வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது.

    தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்காக செயல்படுத்தும் திட்டங்கள், தொழில்முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டம், நில மேம்பாட்டு திட்டம், நிலம் வாங்கும் திட்டம் (மகளிர் மட்டும்), துரித மின் இணைப்பு திட்டம் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 65 வயது வரை இருக்க வேண்டும்.

    குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தாட்கோ இணையதள முகவரியில் www.application.tahdco.com பதிவு செய்ய வேண்டும். தேவைப்படும் ஆவணங்களான புகைப்படம், சாதிச்சான்று, வருமானச்சான்று, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, விலைப்புள்ளி, திட்ட அறிக்கை ஆகியவற்றுடன் இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    ×