search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாட்கோ திட்டங்களில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்
    X

    தாட்கோ திட்டங்களில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்

    • விருதுநகர் மாவட்டத்தில் தாட்கோ திட்டங்களில் பயன் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • மானியம் வழங்குவதற்கான அரசாணை வரப்பெற்றுள்ளது.

    விருதுநகர்,

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி விடுத்துள்ள செய்தி க்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு தேவைப்படும தீவனப்புல் வளர்க்க விதைத் தொகுப்பு மற்றும் புல்கறனைகள் வாங்குவதற்கு மானியம் வழங்குவதற்கான அரசாணை வரப்பெற்றுள்ளது.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் தீவனப்புல் மற்றும் புல்கறணைகள் வளர்க்க ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விதிமுறைகளின்படி விண்ணப்பதாரர்களை சம்மந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவர் பரிந்துரைப்பார்.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பி னர்களாக இருத்தல் வேண்டும் அல்லது உறுப்பினராக சேர வேண்டும்.பயனாளிகளுக்கு விதைத்தொகுப்பு புல்கறனைகளுடன் அத்தீவனங்களை வளர்க்க தேவையான பயிற்சி கையேடுகள் மற்றும் களப்பயிற்சி ஆகிய வற்றிற்கான செலவினங்கள் ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் மானியத் தொகைக்குட்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் இத்திட்டம் செயல்ப டுத்தப்படும்.தாட்கோ மாவட்ட மேலாளர் ஒவ்வொரு மாதமும் இத்திட்டத்தின் முன்னேற்றத்தை கண்டறி வதற்கு வழக்கமான கூட்டங்களை மாவட்ட அளவில் நடத்தி ஒவ்வொரு பயனாளியின் புகைப்பட ஆவணங்களை கட்டாயம் பராமரிக்க வேண்டும்.

    தீவன விதைகள் ஆவின் நிறுவனம், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×