search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை பொருளாதார நெருக்கடி"

    • சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசு பேச்சு வார்த்தை நடத்தி வந்தது.
    • முதல் தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படுகிறது.

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து, தட்டுப்பாடும் நிலவியது.

    அன்றைய செலாவணி இருப்பு குறைந்ததால் அரசு திணறியது. மக்கள் போராட்டத்தால் ஆட்சி அதிகாரத்தில் இருந்து ராஜபக்சே குடும்பத்தினர் ராஜினாமா செய்த பிறகு புதிய அதிபராக பதவியேற்ற ரணில் விக்ரம சிங்கே பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார். இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவிகள் செய்தன.

    பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கடனுதவி கேட்டது. இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசு பேச்சு வார்த்தை நடத்தி வந்தது.

    இந்த நிலையில் இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.24 ஆயிரம் கோடி) கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்து அறிவித்து உள்ளது.

    முதல் தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படுகிறது. 2027-ம் ஆண்டு வரை பல தவணைகளாக கடன் அளிக்கப்படும்.

    இதுதொடர்பாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறும்போது, "பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பாதையை எதிர் நோக்கி நாங்கள் இருக்கும் நிலையில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் நட்பு நாடுகள் வழங்கிய ஆதரவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.

    சர்வதேச நாணய நிதியம் கூறும்போது, "நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மீண்டுவர இந்த நிதி உதவும்" என்று கூறியுள்ளது.

    • இலங்கையில் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
    • வரி உயர்வை உடனே திரும்ப வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள்.

    கொழும்பு:

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பொதுமக்கள் ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அந்நாட்டு அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றார்.

    அதன் பிறகு அவர் பொருளாதார சரிவில் இருந்து மீள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அத்தியாவசிய பொருட்கள் மீது புதிய வரியை விதித்தார். இதற்கு பொதுமக்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஏற்கனவே விலைவாசி உயர்வால் தத்தளித்து கொண்டிருக்கும் போது புதிய வரிகளை விதிப்பதா? என கண்டனம் தெரிவித்தனர். மேலும் வரிவிதிப்புக்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    இந்த நிலையில் வரி உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் எனக்கோரி இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்து இருந்தன.

    இந்த போராட்டத்துக்கு வங்கி ஊழியர்கள், ஆசிரியர் சங்கத்தினர், டாக்டர்கள் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. இந்த போராட்டத்துக்கு தடையும் விதிக்கப்பட்டது. ஆனாலும் தடையை மீறி இன்று (1-ந்தேதி) தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இலங்கையில் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. தொழிற்சங்கத்தினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

    அவர்கள் வரி உயர்வை உடனே திரும்ப வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள். அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டனர்.

    • போலீஸ் தடையை மீறி கொழும்புவில் பேரணியாக சென்றனர்.
    • எதிர்கட்சியினர் மீது கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தண்ணீரை பீய்ச்சியடித்து போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர்.

    கொழும்பு:

    பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கையில் கடந்த ஜூலை மாதம் பல்லாயிரக்கணக்கான மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடத்தினர்.

    தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் உணவு பொருள், எரிபொருள், சமையல் கியாஸ், மருந்து பொருட்கள் உள்ளிட்டவைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது.

    இந்நிலையில் புதிய ஜனாதிபதியாக ரணில்விக்ரமசிங்கே பொறுப்பேற்ற பிறகு கடனில் இருந்து மீள்வதற்காக சர்வதேச நிதிபெறும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.எனினும் தொடர்ந்து பொருளாதார நெருக்கடி நிலவிவருவதால் அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைப்பதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை தலைநகர் கொழும்புவில் எதிர்கட்சிகள் சார்பில் நேற்று பிரமாண்ட போராட்டம் நடைபெற்றது.

    எதிர்கட்சியான தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஆயிரகணக்கான தொண்டர்கள் அதிபர் மாளிகை, அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். இந்த போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்திருந்தனர்.

    எனினும் போலீஸ் தடையை மீறி கொழும்புவில் பேரணியாக சென்றனர். அப்போது எதிர்கட்சியினர் மீது கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தண்ணீரை பீய்ச்சியடித்து போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர்.

    இதில் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • தேர்தல் ஆணைய அதிகாரிகளிடையே நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • போதுமான பணம் இல்லாததால் தேர்தலுக்கு நிதி ஒதுக்க முடியாத சூழல் நிலவுகிறது.

    கொழும்பு:

    இலங்கை நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டால் மக்கள் அவதியடைந்து உள்ளனர். இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கடன் உதவி பெற்று இலங்கை அரசு நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளித்து வருகிறது.

    இதற்கிடையே இலங்கையில் வருகிற மார்ச் 9-ந்தேதி உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. வாக்கு சீட்டு அச்சடிக்கவும், வாகனங்களுக்கு எரிபொருள் மற்றும் வாக்குசாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புக்கு நிதி வழங்க கருவூலம் மறுத்து விட்டது. போதுமான பணம் இல்லாததால் தேர்தலுக்கு நிதி ஒதுக்க முடியாத சூழல் நிலவுகிறது.

    உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பொருளாதார நெருக்கடியுடன் தொடர்புடைய பல்வேறு காரணங்களால் மார்ச் 9 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது கடினம் என்று இந்த மாத தொடக்கத்தில் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

    இந்நிலையில், தேர்தலை தள்ளி வைப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தும் தேதி குறித்த அறிவிப்பாணை வரும் மார்ச் 3ம் தேதி வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. தேர்தல் ஆணைய அதிகாரிகளிடையே இன்று நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இனி தேர்தல் நடத்துவது தொடர்பாக பாராளுமன்ற சபாநாயகரிடம் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தும். தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை ஒதுக்குவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தேர்தல் ஆணையம் கேட்க உள்ளது.

    ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று பேசுகையில், பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்வதே ஜனாதிபதியாக தனது பணி என்றும், இப்போது உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது கூடுதல் அழுத்தத்தையே தரும் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இலங்கையில் போராட்டங்கள் கட்டுக்குள் வந்ததையடுத்து கோத்தபய ராஜபக்சே நாடு திரும்பினார்.
    • ஜனாதிபதி மாளிகையில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக கோத்தபய ராஜபக்சேவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    கொழும்பு:

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது.

    இதையடுத்து ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினர்தான் காரணம் என்று பொது மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர்.

    பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே, மற்ற பதவிகளில் ராஜபக்சே குடும்பத்தினரும் விலகினர். ஆனால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலக மறுத்ததால் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு அதனை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதையடுத்து கோத்தபய ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். அங்கிருந்து அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். ஜனாதிபதி மாளிகைக்குள் குவிந்திருந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த ஏராளமான பணங்களை எடுத்தனர். அதை அவர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இலங்கையில் போராட்டங்கள் கட்டுக்குள் வந்ததையடுத்து கோத்தபய ராஜபக்சே நாடு திரும்பினார்.

    இந்த நிலையில் ஜனாதிபதி மாளிகையில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக கோத்தபய ராஜபக்சேவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கோர்ட்டு உத்தரவின்படி குற்றபுலனாய்வு பிரிவு அதிகாரிகள், கோத்தபய ராஜபக்சே வீட்டுக்கு சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். ஜனாதிபதி மாளிகையில் பணம் இருந்தது தொடர்பாக சுமார் 3 மணி நேரம் கோத்தபய ராஜபக்சேவிடம் விசாரணை நடந்தது.

    இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு கோத்தபய ராஜபக்சே, அவரது குடும்பத்தினர்தான் காரணம் என்று கூறி அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • தனுஷ்கோடி கடலோர பகுதிக்கு இலங்கை அகதிகள் சிலர் வந்திருப்பதாக மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் தனியாக தவித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை மீட்டு அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடலோர பகுதிக்கு இலங்கை அகதிகள் சிலர் வந்திருப்பதாக மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் தனியாக தவித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை மீட்டு அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    இதில், அவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் புங்குடு தீவு பகுதியை சேர்ந்த ஜெயபரமேஸ்வரன், அவரது மனைவி வேலு மாலினி தேவி, அவர்களது மகள் தமிழினி, மகன் மாதவன் என தெரிய வந்தது.

    அவர்கள் 4 பேரும் தலா ஒருவருக்கு ரூ.1 லட்சம் வீதம் கொடுத்து தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் அருகே உள்ள ஒத்தப்பட்டி தெற்கு கடற்கரை பகுதிக்கு கள்ளத்தோணி மூலம் வந்ததாக தெரிவித்தனர்.

    அவர்கள் 4 பேரையும் போலீசார் மண்டபம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இன்று காலை 4 பேரையும் மண்டபம் முகாமுக்கு அழைத்து சென்று தங்கவைத்தனர்.

    அவர்களிடம் மத்திய-மாநில போலீசார் மற்றும் புலனாய்வு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் தமிழ்நாட்டுக்கு வந்ததாக தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்து வருகிறது.
    • இலங்கையின் பெரிய ரக விமானங்கள் எரிபொருள் நிரப்பி தங்கள் நாட்டுக்கு கொண்டு செல்கின்றன.

    ஆலந்தூர்:

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. கடந்த ஆண்டு பொது மக்களின் போராட்டத்தையடுத்து அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ரனில் விக்ரமசிங்கே புதிய அதிபராக பொறுப்பேற்றார். எனினும் இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து நிலவிவருகிறது. இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்து வருகிறது.

    கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஜுன் இறுதிவரை இலங்கையில் விமானங்களுக்கான எரி பொருள் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது சென்னையில் இலங்கை விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது. பின்னர் நிலைமை ஓரளவு சீரானது.

    இந்த நிலையில் இலங்கையில் மீண்டும் விமானங்களுக்கான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு எரிபொருள் கையிருப்பு இல்லை. இதனால் இலங்கையில் இருந்து மெல்பேர்ன், சிட்னி, டோக்கியோ போன்ற தொலைதூர நாடுகளுக்கு செல்ல விமானங்களுக்கு போதுமான எரிபொருள் இல்லாத நிலை நீடித்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து இலங்கை விமானங்கள் மீண்டும் சென்னை, திருவனந்தபுரம், கொச்சின் ஆகிய விமான நிலையங்களுக்கு வரத் தொடங்கி உள்ளன.

    சென்னை விமான நிலையத்தில் இலங்கை விமானத்தின் பெரிய ரக ஏ330 விமானத்தில் எரிபொருள் நிரப்பப்படுகிறது. ஆளில்லாத இந்த பெரிய ரக விமானத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டு மீண்டும் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த பெரிய ரக விமானத்தில் இருந்து மற்ற இலங்கை விமானங்களுக்கு அது பயன்படுத்தப்படுகிறது. இதற்காக கடந்த ஆண்டு இலங்கை விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு ஒப்பந்தம் செய்தது போல இந்த முறையும் செய்யப்பட்டு இருக்கிறது.

    இதேபோல் இலங்கையின் அருகில் உள்ள திருவனந்தபுரம், கொச்சி ஆகிய விமான நிலையங்களில் இருந்தும் இலங்கையின் பெரிய ரக விமானங்கள் எரிபொருள் நிரப்பி தங்கள் நாட்டுக்கு கொண்டு செல்கின்றன.

    இதுபோன்ற எரிபொருள் தட்டுப்பாட்டை இதுவரை பார்த்தது இல்லை என்று 1988-ம் ஆண்டு முதல் 8 விமான நிறுவனங்களில் பணிசெய்த பிரிட்டிஷ் விமான நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • அகதிகளாக வந்த அனைவரும் மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
    • தமிழகத்திற்கு வந்ததற்கான காரணம் குறித்து பாரதிதாசனிடம் கடலோர பாதுகாப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது.

    இதனால் அங்கு நடுத்தர மற்றும் ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்பட்டனர். இலங்கையில் வாழ்ந்து வந்த தமிழர்களில் பலர், அங்கு வாழவழியின்றி தமிழகத்திற்கு அகதிகளாக வர தொடங்கினர்.

    கடந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இருந்தே பல தமிழர்கள் குடும்பம் குடும்பமாக இலங்கையில் இருந்து வெளியேறி கடல் மார்க்கமாக படகுகளின் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடிக்கு வந்தனர்.

    இலங்கையில் நிலவிய கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வாழவழியின்றி அகதிகளாக தமிழகத்திற்கு வந்ததாகவே அவர்கள் தெரிவித்தனர். அவர்களிடம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் 'கியூ' பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

    அகதிகளாக வந்த அனைவரும் மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில் இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் அகதிகளாக நேற்று இரவு தனுஷ்கோடி வந்தனர்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த அவர்கள் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் தவித்தப்படி நின்றதை மீனவர்கள் பார்த்து கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து அவர்கள் அரிச்சல் முனைக்கு சென்று அதில் நின்று கொண்டிருந்த 2 சிறுவர்கள், ஒரு சிறுமி, ஒரு மூதாட்டி உள்ளிட்ட 5 பேரையும் மீட்டு மண்டபம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் இலங்கை கிளிநொச்சி பாரதிபுரத்தை சேர்ந்த பாரதிதாசன்(வயது42), அவரது தாய் முனியம்மாள் (75), மகன்கள் பவனா புருசாந்தன் (17), பவனா அருள்(15), மகள் பவனா பிருந்திகா(10) என்பது தெரியவந்தது.

    தமிழகத்திற்கு வந்ததற்கான காரணம் குறித்து பாரதிதாசனிடம் கடலோர பாதுகாப்பு போலீசார் விசாரணை நடத்தினர். பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் வாழ வழியின்றி தனது குழந்தைகள் மற்றும் தாயுடன் வந்ததாக அவர் தெரிவித்தார்.

    இதையடுத்து அவர்கள் 5 பேரையும் இலங்கை அகதிகள் முகாமிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இலங்கையில் இருந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 217 பேர் தனுஷ்கோடி மற்றும் ராமேசுவரத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சர்வதேச நாணய நிதியிடத்திடம் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்குமாறு இலங்கை கேட்டுக்கொண்டுள்ளது.
    • இலங்கைக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியா உத்தரவாதம் அளித்துள்ளது.

    கொழும்பு:

    கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவி செய்கின்றன. இலங்கைக்கு கடன்களையும் இந்தியா வழங்கியுள்ளது. இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிடம் வாங்கிய கடனை திரும்பி செலுத்த முடியாமல் தவித்து வரும் இலங்கை, சர்வதேச நாணய நிதியிடத்திடம் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.23 ஆயிரம் கோடி) கடன் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த கடன் தொகையை வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புக் கொண்டது. ஆனால் கடன் வழங்கப்பட வேண்டும் என்றால் இலங்கைக்கு கடன் கொடுத்த நாடுகள் தாங்கள் வழங்கிய கடனை மறுசீரமைக்க இணக்கம் தெரிவிக்க வேண்டும்.

    இலங்கைக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியா உத்தரவாதம் அளித்துள்ளது. இந்தியா சார்பில் எழுதப்பட்ட நிதி உத்தரவாதங்கள் சர்வதசே நாணய நிதியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

    இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள அவர் இன்று     இலங்கையின் வெளியுறவுத்துறை மந்திரி அலி சாப்ரேவை சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு மற்றும் பிராந்திய நலன்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்பின்னர் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவையும் சந்தித்து பேசினார்.

    • இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
    • இலங்கைக்கு கடன் கொடுத்த நாடுகள் தாங்கள் வழங்கிய கடனை மறுசீரமைக்க இணக்கம் தெரிவிக்க வேண்டும்.

    கொழும்பு:

    இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அன்னிய செலாவணி குறைந்ததால் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியவில்லை.

    இதையடுத்து இலங்கைக்கு இந்தியா உதவியது. பெட்ரோல், டீசல், அரிசி உள்ளிட்டவற்றை அனுப்பியது. மேலும் இலங்கைக்கு கடன்களையும் இந்தியா வழங்கியுள்ளது.

    இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிடம் வாங்கிய கடனை திரும்பி செலுத்த முடியாமல் தவித்து வரும் இலங்கை சர்வதேச நாணய நிதியிடத்திடம் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.23 ஆயிரம் கோடி) கடன் வழங்குமாறு கேட்டு கொண்டுள்ளது.

    இந்த கடன் தொகையை சர்வதேச நாணயநிதியம் ஒப்புக் கொண்டது. ஆனால் கடன் வழங்கப்பட வேண்டும் என்றால் இலங்கைக்கு கடன் கொடுத்த நாடுகள் தாங்கள் வழங்கிய கடனை மறுசீரமைக்க இணக்கம் தெரிவிக்க வேண்டும்.

    இதையடுத்து இந்தியாவும், சீனாவும் கடன் தொகையை மறுசீரமைக்க ஒப்புக் கொள்ளுமாறு இலங்கையின் மத்திய வங்கி கோரிக்கை விடுத்தது.

    இந்த நிலையில் இலங்கைக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியா உத்தரவாதம் அளித்துள்ளது.

    இந்தியா சார்பில் எழுதப்பட்ட நிதி உத்தரவாதங்கள் சர்வதசே நாணய நிதியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று இலங்கை அரசின் உயர்மட்ட அதிகாரிகள் குழு உறுதிப்படுத்தியது.

    இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகளுடன் விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில்தான் இலங்கைக்காக சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியா உத்தரவாதம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா உத்தரவாதம் அளித்துவிட்ட நிலையில் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும். இதில் ஜப்பான் விரைவில் உத்தரவாதத்தை அனுப்பும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அதே வேளையில் சீனாவின் நிலைப்பாடு குறித்து உறுதியாக தெரியவில்லை. கடந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கடன் பெற முயற்சித்தபோது அதற்கு சீனா முட்டுக்கட்டை போட்டதாக இலங்கையின் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ராணுவத்துக்கு 539 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
    • நன்கு சமநிலையான பாதுகாப்புப் படையை உருவாக்குவதே அரசின் நோக்கமாகும்.

    கொழும்பு:

    கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில், ராணுவத்தை மூன்றில் ஒரு பங்காக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக இலங்கை பாதுகாப்புத்துறை மந்திரி பிரேமிதா பண்டார தென்னகோன் கூறியதாவது:-

    இலங்கையின் ராணுவ பலம் தற்போது 200,783 ஆக உள்ளது. இதை மூன்றில் ஒரு பங்காக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் ராணுவ பலத்தை 1,35,000 ஆகவும், 2030க்குள் 1,00,000 ஆகவும் குறைக்கப்படும்.

    வரவிருக்கும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் 2030ஆம் ஆண்டிற்குள் தொழில்நுட்ப ரீதியாகவும் தந்திரோபாய ரீதியாகவும் நன்கு சமநிலையான பாதுகாப்புப் படையை உருவாக்குவதே அரசின் நோக்கமாகும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ராணுவத்துக்கு 539 பில்லியன் ரூபாய்  ஒதுக்கீடு செய்தது விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் தவிக்கிறது.
    • இலங்கை போலீசுக்கு கடன் உதவியாக 125 சொகுசு வாகனங்களையும் டிசம்பர் மாதம் இந்தியா வழங்கியது

    கொழும்பு :

    அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் தவிக்கிறது. இந்தியா கடந்த ஆண்டில் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.32 ஆயிரத்து 800 கோடி) நிதியை வாழ்வாதார நிதி போல அந்த நாட்டுக்கு வழங்கியது.

    கடந்த ஜனவரியில் இலங்கைக்கு 900 மில்லியன் டாலர் (சுமார் ரூ.7,380 கோடி) கடன் உதவியை இந்தியா அறிவித்தது. அன்னியச்செலாவணி கையிருப்புக்காக இந்த உதவியை அறிவித்தது.

    பின்னர் எரிபொருள் வாங்குவதற்காக 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4,100 கோடி) நிதி உதவியை அறிவித்தது. இந்தக் கடன் பின்னர் 700 மில்லியன் டாலராக (சுமார் ரூ.5,740 கோடி) ஆக அதிகரிக்கப்பட்டது.

    இப்படி இலங்கைக்கு இந்தியா, 'முதலில் அண்டை நாடு' என்ற கொள்கையின் பெயரால் தாராள உதவிகளை செய்து வருகிறது.

    இந்த நிலையில், அங்கு பொது போக்குவரத்து சாதன வசதியை மேம்படுத்தும் வகையில், இந்தியா 75 பஸ்களை வழங்கியது.

    இது தொடர்பாக இலங்கைக்கான இந்திய தூதர் விடுத்துள்ள அறிக்கையில், " இலங்கையில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக போக்குவரத்து வாரியத்திடம் இந்திய தூதர் 75 பஸ்களை வழங்கினார். இந்த வகையில் 500 பஸ்களை இந்தியா வழங்குகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கை போலீசுக்கு கடன் உதவியாக 125 சொகுசு வாகனங்களையும் டிசம்பர் மாதம் இந்தியா வழங்கியது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

    ×