search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா பாகிஸ்தான் மோதல்"

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 147 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 148 ரன் எடுத்து வென்றது.

    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது லீக் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வுசெய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய இந்தியா 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

    தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 12 ரன்னில் அவுட்டானார். முன்னதாக ரோகித் சர்மா 12 ரன்கள் எடுத்திருந்த போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த கப்திலை பின்னுக்குத் தள்ளினார். ரோகித் சர்மா இதுவரை 133 டி20 போட்டிகளில் விளையாடி 4 சதம், 27 அரைசதம் உள்பட 3,499 ரன்கள் எடுத்துள்ளார். 2-வது, 3-வது இடங்களில் முறையே கப்தில் (3,497 ரன்), விராட் கோலி (3,343 ரன்) ஆகியோர் உள்ளனர்.

    • ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
    • ஆட்ட நாயகன் விருது ஹர்திக் பாண்ட்யாவுக்கு அளிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 19.5 ஓவரில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 43 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இந்தியா 19. 4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு148 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா தலா 35 ரன்னும், பாண்ட்யா 33 ரன்னும் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருது பாண்ட்யாவுக்கு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஆசிய கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இன்றைய ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணி சிறப்பான திறமையையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு வாழ்த்துகள் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 147 ரன்னில் ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய இந்தியா 148 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    துபாய்:

    ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவர் முடிவில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 43 ரன்கள் அடித்து அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஷாநவாஸ் தஹானி 6 பந்தில் 16 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டும், ஆவேஷ் கான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது.

    கே.எல்.ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ரோகித் சர்மாவுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். கோலி பொறுப்புடன் ஆடினார். இந்த ஜோடி 49 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 12 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து விராட் கோலி 35 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து இறங்கிய ரவீந்திர ஜடேஜா நிதானமாக ஆடினார். சூர்யகுமார் யாதவ் 18 ரன்னில் அவுட்டானார்.

    கடைசி 4 ஓவரில் வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட்டது. 17வது ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது.

    18வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 10 ரன்னும், 19வது ஓவரில் 3 பவுண்டரி உள்பட 14 ரன்னும் கிடைத்தது.

    ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா ஜோடி 50 ரன்களை கடந்து அசத்தியது. ஜடேஜா 35 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்தியா 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. பாண்ட்யா 33 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • பாகிஸ்தான் தொடக்க வீரர் ரிஸ்வான் 43 ரன்கள் அடித்தார்.
    • புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

    துபாய்:

    ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் இடம் பெற்றிருந்தார். முதலில் களம் இறங்கி பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான பாபர் ஆசம் 10 ரன் எடுத்த நிலையில் புவனேஷ்வர் குமார் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

    மற்றொரு வீரர் ரிஸ்வான் 43 ரன்கள் அடித்த நிலையில் ஹர்திக் பாண்ட்யாவிடம் வீழ்ந்தார். இப்திகர் அகமது 28 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். ஷாநவாஸ் தஹானி 16 ரன்களும், ஹரிஸ் ரவூப் 13 ரன்களும் எடுத்தனர்.

    பாகிஸ்தான் அணி 19.5 ஓவர் முடிவில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்களையும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்களை கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்களையும், ஆவேஷ்கான் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். இதையடுத்து 148 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கி உள்ளது.

    • பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுவது எங்களுக்கு உற்சாகமானது.
    • பாகிஸ்தானுக்கு எதிரான தோல்வி இன்னும் வருத்தமளிக்கிறது.

    துபாய்:

    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை தொடங்குகிறது. செப்டம்பர் 11 வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளது.

    இந்த தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் காண்கிறது. நாளை மறுநாள் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

    இந்த போட்டி குறித்து இந்திய வீரர் கே.எல்.ராகுல் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

    இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நாங்கள் எப்போதும் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். பெரிய தொடர்களில் மட்டும் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறோம். எனவே, பாகிஸ்தான் போன்ற அணிக்கு எதிராக விளையாடுவது எங்களுக்கு ஒரு உற்சாகமானது. நமக்கும் நாமே சவால் விடும் சிறந்த வாய்ப்பு.

    கடந்த டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தோல்வி அடைந்தது இன்னும் வருத்தமளிக்கிறது. பெரிய போட்டிகளில் விளையாடும்போது ஒவ்வொரு அணியும் பெரிதாக சாதிக்க விரும்புகிறது, துரதிர்ஷ்டவசமாக, அது எங்களுக்கு நடக்கவில்லை. வலுவான பாகிஸ்தானிடம் நாங்கள் ஆட்டமிழந்தோம். எனவே இப்போது அவர்களுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    பிற கருத்துக்களுக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அது உண்மையில் ஒரு வீரரைப் பாதிக்காது, குறிப்பாக விராட் கோலி போன்ற உலகத் தரம் வாய்ந்த வீரர் வெளியில் இருந்து வரும் கருத்தால் பாதிக்கப் படமாட்டார்.

    அவருக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைத்தது. அவர் தனது விளையாட்டில் கவனம் செலுத்துகிறார். நான் காயமடைந்து 2 மாதங்கள் வீட்டில் இருந்தபோது, ​அவரை (விராட் கோலியை ) டிவியில் பார்த்துக் கொண்டிருந்தேன், அவர் பார்மில் இல்லை என்று நான் உணரவில்லை. இவ்வாறு கே.எல்.ராகுல் கூறினார்.

    ×