search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய குழு"

    • இந்திய அணி, 174 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.
    • அடுத்து வரும் ஆட்டங்களில் இன்னும் சிறப்பாக விளையாட முயல்வோம்.

    தென் ஆப்பிரிக்காவில் நேற்று நடந்த ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 79 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.

    இந்தியஅணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் உதய் சஹாரன் விளக்கம் அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    எங்கள் அணியின் வீரர்களை எண்ணி நான் பெருமை அடைகிறேன். இந்த தொடர் முழுவதும் இந்திய வீரர்கள் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    தேவையற்ற சில ஷாட்களை இறுதிப் போட்டியில் ஆடினோம். இந்த போட்டிக்காக நாங்கள் நல்ல முறையில் தயாராகி திட்டங்களை வகுத்து இருந்தோம்.

    ஆனால் எங்களால் சரியான முறையில் செயல்படுத்த முடியவில்லை. இந்ததொடர் முழுவதும் நாங்கள் நிறைய கற்றுக் கொண்டு உள்ளோம்.

    அடுத்து வரும் ஆட்டங்களில் இன்னும் சிறப்பாக விளையாட முயல்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல்முறையாக ஜெய்ஸ்வால், திலக்வர்மா, முகேஷ் குமார் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
    • எதிர்பார்க்கும் வரிசையில் விராட் கோலி அல்லது ரோஹித் ஷர்மாவுக்கு இன்னும் இடமில்லை.

    ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐயின் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

    இந்த அணியில் முதல்முறையாக ஜெய்ஸ்வால், திலக்வர்மா, முகேஷ் குமார் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

    ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணியில் இஷான் கிஷன், ஷுப்மான் கில், சூர்ய குமார் யாதவ், சஞ்சு சாம்சன், அக்சர் படேல், சாஹல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், அவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

    ஜெய்ஸ்வால், முன்னதாக டெஸ்ட் மற்றும் சர்வதேச ஒரு நாள் போட்டியில் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, 20-ஓவர்கள் தொடரில் ஒரு ட்ரிஃபெக்டாவை முடித்தார்.

    அதே நேரத்தில் வர்மா மும்பை இந்தியன்ஸ் உடனான நட்சத்திர பேக்-டு-பேக் சீசன்களுக்காக வெகுமதி பெற்றார்.

    எதிர்பார்க்கும் வரிசையில் விராட் கோலி அல்லது ரோஹித் ஷர்மாவுக்கு இன்னும் இடமில்லை.

    அடுத்த ஆண்டு உலகக் கோப்பையை மனதில் கொண்டு டி 20 ஐ தொடங்கி ஒரு இடைநிலை மாற்றத்தை உருவாக்க இந்தியா முயற்சித்து வருகிறது.

    • ஜெர்மனியில் நடந்த சிறப்பு ஒலிம்பிக்ஸ் உலக போட்டிகளில் இந்திய குழு மொத்தம் 202 பதக்கங்களை அள்ளியுள்ளது.
    • இந்த உலக போட்டிகளை நேரிடையாக 3.3 லட்சம் பேர் கண்டு களித்து உள்ளனர்.

    பெர்லின்:

    ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் பிராண்டன்பர்க் கேட் பகுதியில் சிறப்பு ஒலிம்பிக் உலக போட்டிகள் நடத்தப்பட்டன. ஒற்றுமை, பன்முக தன்மை மற்றும் சிறப்பு திறன்கள் ஆகியவற்றை கொண்டாடும் வகையில் இந்த போட்டிகள் நடந்தன.

    இதில் நிறைவு நாளான நேற்று (ஞாயிற்று கிழமை) இந்திய குழுவினர் மொத்தம் 202 பதக்கங்களை அள்ளி வந்து உள்ளனர். இந்திய குழு 76 தங்கம், 75 வெள்ளி மற்றும் 51 வெண்கலம் என பதக்கங்களை வென்றது. இவற்றில் தடகள போட்டிகளில் இந்திய வீரர்கள் 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்றனர்.

    போட்டி நிறைவு நாளில் பிராண்டன்பர்க் கேட் பகுதியில், ஒற்றுமையின் சிறந்த பண்புகளை பிரதிபலிக்க செய்வதற்காகவும் மற்றும் சிறப்பு ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் முக்கியத்துவங்களை முன்னே கொண்டு வருவதற்காகவும் ஒவ்வொரு குழுவை சேர்ந்த உறுப்பினர்களும் மேடைக்கு வரவழைக்கப்பட்டனர்.

    இந்த உலக போட்டிகளை நேரிடையாக 3.3 லட்சம் பேர் கண்டு களித்து உள்ளனர். இதுதவிர, தொலைக்காட்சி மற்றும் பிற ஊடகங்கள் வழியே பலர் போட்டிகளை பார்த்து உள்ளனர். சிறப்பு ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கான தலைவர் டாக்டர் மல்லிகா நட்டா கூறும்போது, போட்டியில் வெற்றி பெற்றவர்களை புகழ்ந்து பேசினார்.

    அவர்களின் செயல்பாடுகளை சுட்டிகாட்டியதுடன், நடைமுறை வாழ்க்கையில் மற்றவர்களை போன்று மக்கள் இந்த தடகள வீரர்களையும் ஏற்று கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என்றும் கூறியுள்ளார்.

    ×