என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Junior World Cup"

    • 18 வயதான ஆர்யன் இடக்கை பேட்ஸ்மேன்.
    • ஜான் ஜேம்ஸ் வேகப்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் ஆவார்.

    மெல்போர்ன்:

    16-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி முதல் பிப்ரவரி 6-ந்தேதி வரை ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோத உள்ளன. 5 முறை சாம்பியனான இந்தியா 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா 'சி' பிரிவில் அங்கம் வகிக்கிறது. அயர்லாந்து, ஜப்பான், இலங்கை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

    இந்த நிலையில் இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆலிவர் பீக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். அணியில் ஆர்யன் ஷர்மா, ஜான் ஜேம்ஸ் ஆகிய இரு இந்திய வம்சாவளி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    18 வயதான ஆர்யன் இடக்கை பேட்ஸ்மேன். சுழற்பந்தும் வீசுவார். இவரது பெற்றோர் பஞ்சாப் மாநிலம் சண்டிகாரை சேர்ந்தவர்கள். 2005-ம் ஆஸ்திரேலியாவில் குடியேறினர். ஆர்யன் பிறந்து வளர்ந்தது எல்லாமே ஆஸ்திரேலியாவில் தான். ஜான் ஜேம்ஸ் வேகப்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் ஆவார். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் வயநாடு ஆகும்.

    ஆர்யன், ஜேம்ஸ் இருவரும் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த இந்தியாவுக்கு எதிரான இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருக்கிறார்கள்.

    அது மட்டுமின்றி இலங்கையை பூர்விகமாக கொண்ட நடேன் கூரே, நிதேஷ் சாமுவேல், சீனா வம்சாவளியான அலெக்ஸ் லீ யங் ஆகியோரும் ஆஸ்திரேலிய அணிக்கு தேர்வாகியுள்ளனர்.

    ஆஸ்திரேலிய அணி வருமாறு:- ஆலிவர் பீக் (கேப்டன்), கேசி பார்டன், நடேன் கூரே, ெஜய்டன் டிராப்பர், பென் கார்டன், ஸ்டீவன் ஹோகன், தாமஸ் ஹோகன், ஜான் ஜேம்ஸ், சார்லஸ் லச்முன்ட், வில் மலாஜ்சுக், நிதேஷ் சாமுவேல், ஹைடன் ஷில்லர், ஆர்யன் ஷர்மா, வில்லியம் டெய்லர், அலெக்ஸ் லீ யங்.

    • 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா-அர்ஜென்டினா அணிகள் மோதின
    • இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வென்று 3-வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது.

    சென்னை:

    14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி கடந்த 28-ந்தேதி சென்னை, மதுரையில் தொடங்கியது. இதன் இறுதிப் போட்டி எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

    இதில் ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி ஸ்பெயினை வீழ்த்தியது. ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற டைபிரேக்கில் ஜெர்மனி 3-2 என்ற கணக்கில் வென்று உலக கோப்பையை கைப்பற்றியது. அந்த அணி 8-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.

    ஸ்பெயினுக்கு 2-வது இடம் கிடைத்தது அந்த அணியின் சிறப்பான நிலை இதுவாகும். இதற்கு முன்பு ஸ்பெயின் அணி 2 முறை (2005, 2023), 3-வது இடத்தை பிடித்ததே சிறந்ததாக இருந்தது.

    முன்னதாக நடைபெற்ற 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா-அர்ஜென்டினா அணிகள் மோதின. இதில் ரோகித் தலைமையிலான இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வென்று 3-வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது.

    துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஜெர்மனி அணிக்கு உலக கோப்பையை வழங்கினார். அந்த அணி வீரர்களுக்கு பதக்கங்களை அணிவித்தார். மேலும் ஸ்பெயின் வீரர்களுக்கு வெள்ளி பதக்கத்தையும், இந்திய வீரர்களுக்கு வெண்கல பதக்கத்தையும் அணிவித்தார்.

    சர்வதேச ஹாக்கி சம்மேளன தலைவர் தயாப் இக்ரம், பீகார் மாநில விளையாட்டு துறை மந்திரி ஸ்ரேயாசி சிங், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் திர்கி, செயலாளர் போலாநாத் சிங், பொருளாளர் சேகர் மனோகரன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

    ஜூனியர் உலக கோப்பையில் வெண்கல பதக்கம் வென்று சாதித்த இந்திய ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது. அணியில் உள்ள பயிற்சியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு தலா ரூ.2½ லட்சம் வழங்கப்படுகிறது.

    2005, 2021, 2023 ஆகிய 3 முறை இந்திய அணி வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் தோற்று 4-வது இடத்தை பிடித்தது. தற்போதுதான் முதல் முறையாக சொந்த மண்ணில் 3-வது இடத்திற்கான போட்டியில் வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்று முத்திரை பதித்தது.

    முன்னதாக நடந்த 5-வது இடத்திற்கான போட்டியில் பெல்ஜியம்-நெதர்லாந்து அணிகள் மோதின. போட்டியின் முடிவில் 3-3 என்ற சமநிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து டைபிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. இதில் பெல்ஜியம் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 5-வது இடத்தை பிடித்தது. நெதர்லாந்துக்கு 6-வது இடம் கிடைத்தது.

    பிரான்ஸ்-நியூசிலாந்து அணிகள் மோதிய ஆட்டத்தில் பிரான்ஸ் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 7-வது இடத்தை பிடித்தது. நியூசி லாந்துக்கு 8-வது இடம் கிடைத்தது. 

    • தென் ஆப்பிரிக்காவில் 15-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.
    • நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

    பெனோஸ்:

    தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் 15-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    16 அணிகள் பங்கேற்ற இப்போட்டி தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

    சாம்பியனை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நாளை பெனோனி நகரில் நடக்கிறது. இந்த ஆட்டம் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ஜூனியர் உலக கோப்பையை இந்தியா 5 முறை (2000, 2008, 2012, 2018, 2022) வென்றது. முகமது கைப், விராட் கோலி, உன்முக்த் சந்த், பிரித்வி ஷா, யாஷ் துல் ஆகியோர் தலைமையில் கோப்பை கிடைத்தது.

    இந்தியா 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. இந்தியா 9-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

    உதய் சஹாரன் தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சில் சமபலத்துடன் உள்ளது. உதய் சஹாரன் 389 ரன்னும், முஷீர் கான் 338 ரன்னும், சச்சின் தாஸ் 294 ரன்னும் எடுத்து முதல் 3 இடங்களில் உள்ளனர். இதில் முஷீர் கான் 2 சதம் அடித்துள்ளார்.

    பந்துவீச்சில் சவுமி குமார் பாண்டே 17 விக்கெட்டும், ரமன் திவாரி10 விக்கெட்டும் கைப்பற்றினர். ராஜ் லிம்பானி, முருகன் அபிஷேக் ஆகியோரும் பந்துவீச்சில் உள்ளனர். அதுபோல் ஆதர்ஷ் சிங், அர்ஷின் குல்கர்னி, பிரியன்ஷு மோலியா ஆகிய பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.

    ஆஸ்திரேலியா 3 முறை (1988, 2002, 2010) கோப்பையை வென்றுள்ளது. அந்த அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. ஹத் வெய்ப்ஜென் தலைமையிலான அந்த அணியும் பேட்டிங், பந்துவீச்சில் சம பலத்துடன் உள்ளது. அந்த அணியில் ஹாரி டிக்சன் 267 ரன்னும், ஹக் வெய்ப்ஜென் 256 ரன்னும் எடுத்துள்ளனர். பந்துவீச்சில் டாம் ஸ்ட்ரேக்கர், வீட்லேர் தலா 12 விக்கெட் கைப்பற்றி உள்ளனர்.

    இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது. ஆஸ்திரேலியாவும் தோல்வியைச் சந்திக்கவில்லை. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முடிவு இல்லை.

    ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இதற்கு முன்பு இரண்டு முறை (2012, 2018) மோதியுள்ளன. இரண்டிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 16 அணிகள் பங்கேற்ற இப்போட்டி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
    • அரையிறுதியின் முடிவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    பெனோனி:

    15-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இப்போட்டி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    அரையிறுதியின் முடிவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் பெனோனி மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்தியா முதலில் பந்து வீச உள்ளது.

    • 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்தது.
    • இந்திய அணி தரப்பில் ராஜ் லிம்பானி 3, நமன் திவாரி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    15-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹாரி டிக்சன்- சாம் கான்ஸ்டாஸ் களமிறங்கினர். சாம் கான்ஸ்டாஸ் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த கேப்டன் ஹக் வெய்ப்ஜென் டிக்சனுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர்.

    50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியை நமன் திவாரி பிரித்தார். ஹக் வெய்ப்ஜென் 48 ரன்னில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் டிக்சன் 42 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ஹர்ஜாஸ் சிங் அரை சதம் அடித்து அவுட் ஆனார்.

    அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற, 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்தது.

    இந்திய அணி தரப்பில் ராஜ் லிம்பானி 3, நமன் திவாரி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    • முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்தது.
    • இந்திய அணி 91 ரன்களுக்கு 6 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

    15-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து இந்திய அணி தொடக்க வீரர்களாக ஆதர்ஷ் சிங்- அர்ஷின் குல்கர்னி களமிறங்கியது. அர்ஷின் குல்கர்னி 3 ரன்னில் இருக்கும் போது கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து முசீர் கான்- ஆதர்ஷ் சிங் ஜோடி பொறுமையுடன் ஆடியது. இந்த ஜோடியை மஹ்லி பியர்ட்மேன் பிரித்தார். அவரது பந்து வீச்சில் முசீர் கான் கிளீன் போல்ட் ஆனார். 

    அடுத்து வந்த கேப்டன் சரண் 8 ரன்னிலும் சச்சின் தாஸ், பிரியன்ஷு மோலியா 9 ரன்னிலும், ஆரவெல்லி அவனிஷ் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனால் இந்திய அணி 91 ரன்களுக்கு 6 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்த போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவினால் தொடர்ச்சியாக 3-வது முறையாக ஆஸ்திரேலிய அணியிடம் ஐசிசி கோப்பையை தவறவிடும். அந்த நிலையை மாற்றுமா? பதிலடி கொடுக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    • முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்தது.
    • முதலில் இருந்தே தடுமாறிய இந்திய அணி 174 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    15-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்ஜாஸ் சிங் 55 ரன்கள் விளாசினார்.

    இதனையடுத்து 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக ஆதர்ஷ் சிங்- அர்ஷின் குல்கர்னி களமிறங்கியது. அர்ஷின் குல்கர்னி 3 ரன்னில் இருக்கும் போது கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து முசீர் கான்- ஆதர்ஷ் சிங் ஜோடி பொறுமையுடன் ஆடியது. இந்த ஜோடியை மஹ்லி பியர்ட்மேன் பிரித்தார். அவரது பந்து வீச்சில் முசீர் கான் கிளீன் போல்ட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் சரண் 8 ரன்னிலும் சச்சின் தாஸ், பிரியன்ஷு மோலியா 9 ரன்னிலும், ஆரவெல்லி அவனிஷ் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    பொறுப்புடன் விளையாடி வந்த ஆதர்ஷ் சிங் 47 ரன்னிலும் முருகன் அபிஷேகம் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒரே நம்பிக்கையாக இருந்த அவர்கள் அவுட் ஆனதும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இறுதியில் இந்திய அணி 174 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    இந்த போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியதன் மூலம் ஆஸ்திரேலியாவிடம் தொடர்ச்சியாக 3-வது முறையாக ஐசிசி கோப்பையை தவறவிட்டுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ரோகித் தலைமையிலான இந்திய அணி தோல்வியை தழுவியது. அதனையடுத்து நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது.

    அந்த நிலையை ஜூனியர் இந்திய அணி மாற்றும் என்ற நம்பிக்கையும் பொய்யானது, ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்ததை ஏற்படுத்தி உள்ளது. ஐசிசி கோப்பை கனவு எட்டா கனியாகவே இந்திய அணிக்கு உள்ளது.

    • இந்திய அணி, 174 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.
    • அடுத்து வரும் ஆட்டங்களில் இன்னும் சிறப்பாக விளையாட முயல்வோம்.

    தென் ஆப்பிரிக்காவில் நேற்று நடந்த ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 79 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.

    இந்தியஅணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் உதய் சஹாரன் விளக்கம் அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    எங்கள் அணியின் வீரர்களை எண்ணி நான் பெருமை அடைகிறேன். இந்த தொடர் முழுவதும் இந்திய வீரர்கள் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    தேவையற்ற சில ஷாட்களை இறுதிப் போட்டியில் ஆடினோம். இந்த போட்டிக்காக நாங்கள் நல்ல முறையில் தயாராகி திட்டங்களை வகுத்து இருந்தோம்.

    ஆனால் எங்களால் சரியான முறையில் செயல்படுத்த முடியவில்லை. இந்ததொடர் முழுவதும் நாங்கள் நிறைய கற்றுக் கொண்டு உள்ளோம்.

    அடுத்து வரும் ஆட்டங்களில் இன்னும் சிறப்பாக விளையாட முயல்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×