search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடைக்கால ஜாமின்"

    • அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
    • டெல்லியை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் அபிஷேக் சவுத்ரி என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.

    புதுடெல்லி:

    டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இந்த நிலையில் சிறையில் பாதுகாப்பு, மருத்துவ குறைபாட்டை கருத்தில் கொண்டு கெஜ்ரிவாலின் முதல்வர் பதவிக்காலம் முடியும் வரை அவருக்கு சிறப்பு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என்று டெல்லியை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் அபிஷேக் சவுத்ரி என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட், இம்மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி தள்ளுபடி செய்தது. மேலும் மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

    • அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டரிடம் ரூ. 20 லட்சம் லஞ்சம வாங்கியபோது கைது.
    • கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி, மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

    திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டரான சுரேஷ்பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கடந்த டிசம்பர் 1-ம் தேதி கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைதை தொடர்ந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை நீதிமன்றத்தில் அங்கித் திவாரி ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தார். ஆனால், நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.

    பின்னர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் ஜாமின் மனுதாக்கல் செய்தார். உயர்நீதிமன்றமும் ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.

    இதனைத்தொடர்ந்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவருடைய ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் இடைக்கால ஜாமின் வழங்கியது. அனுமதி பெறாமல் தமிழகத்தை விட்டு வெளியேறக்கூடாது, சாட்சியங்கள் மீது ஆதிக்கம் செலுத்த கூடாது, சாட்சியங்களை அழிக்கக் கூடாது போன்ற நிபந்தனைகளை விதித்துள்ளது.

    • ஒன்பது பேரும் ஜாமின் கேட்ட மனுக்கள் தள்ளுபடி ஆகி இருந்தன.
    • மகளுக்கு பூப்புனித நீராட்டு விழாவிற்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று கூறி போலீஸ்காரர் வெயிலுமுத்து மனு தாக்கல் செய்தார்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020 ஆம் ஆண்டில் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது அப்போதைய சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ்காரர் வெயிலு முத்து உள்ளிட்ட 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஒன்பது பேரும் ஜாமின் கேட்ட மனுக்கள் தள்ளுபடி ஆகி இருந்தன. இந்த நிலையில் தனது மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நாளை (7-ந்தேதி) நடக்க இருப்பதால் ஜாமின் வழங்க வேண்டும் என்று கூறி மதுரை ஐகோர்ட்டில் போலீஸ்காரர் வெயிலுமுத்து மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், மனுதாரருக்கு இன்று மாலை 6 மணி முதல் சனிக்கிழமை மாலை 6 மணி வரை 3 நாட்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் இடைக்கால ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லல்லு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
    • லல்லு மனைவியும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான ராப்ரிதேவி, மகள் மிசா ஆகியோர் டெல்லி கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்

    புதுடெல்லி:

    ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் யாதவ் மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தபோது சிலருக்கு ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக நிலத்தை லஞ்சமாக பெற்றதாக அவரது குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பாக லல்லு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் லல்லு மனைவியும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான ராப்ரிதேவி, மகள் மிசா ஆகியோர் டெல்லி கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.

    இந்த நிலையில் ராப்ரி தேவி, மகள்கள் மிசா பாரதி, ஹேமா யாதவ் ஆகியோருக்கு டெல்லி கோர்ட்டு இன்று இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. வருகிற 28-ந் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

     

    ×