search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்பாட்டம்"

    • சீமான் ஈரோடு இடைத்தேர்தலின்போது தங்களது சமூக மக்களை இழிவாக பேசியுள்ளார்.
    • சீமானின் உருவ பொம்மையை திடீரென சாலையில் எரித்து செருப்பால் அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ஆதி தமிழர் பேரவையினர் சீமானை கைது செய்ய வலியுறுத்தி, சீமானின் உருவ பொம்மையை எரித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுனர்.

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு இடைத்தேர்தலின்போது தங்களது சமூக மக்களை இழிவாக பேசியதாகவும், சீமான் மீது போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கின்ற நிலையில் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

    மேலும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதி தமிழர் பேரவையினர் சீமானின் உருவ பொம்மையை திடீரென சாலையில் எரித்து செருப்பால் அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தி.மு.க ஆட்சியில் சொத்துவரி, மின் கட்டணம், பால், விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து ஆர்பாட்டம்.
    • போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் ஒரு மணி நேரம் வாகனங்கள் பைபாஸ் வழியாக போலீசார் அனுப்பி வைத்தனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே இன்று செங்கல்பட்டு மேற்கு, கிழக்கு, ஒன்றிய கழகம் மற்றும் மாமல்லபுரம் அ.தி.மு.க வினர் சார்பில், தி.மு.க ஆட்சியில் சொத்துவரி, மின் கட்டணம், பால், விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு என குற்றம் சாட்டி, அதை கண்டித்து முன்னாள் எம்.எல்.ஏ தனபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், பேரூர் கழக செயலாளர் தினேஷ்குமார், புதுப்பட்டினம் ஊராட்சி தலைவர் காயத்ரி தனபால், மாமல்லபுரம் பேரூராட்சி துணைத்தலைவர் ராகவன் உள்ளிட்ட அ.தி.மு.க வினர் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் ஒரு மணி நேரம் அரசு பஸ், கார், வேன் போன்ற வாகனங்களை நகருக்குள் விடாமல் பைபாஸ் வழியாக போலீசார் அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் காவல் பணியில் ஈடுபட்டனர்.

    • அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியம் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் 30 பெண்கள் உட்பட 75பேர் கலந்து கொண்டனர்.

    உடுமலை :

    உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியம் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு டிஎன்ஜிபிஏ. வட்ட தலைவர் தாசன் தலைமை தாங்கினார்.

    மடத்துக்குளம் வட்டக்கிளை நிர்வாகி மாவளப்பன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கி.எல்லம்மாள், உடுமலை வட்ட செயலாளர் விஜயகுமார் கோரிக்கை விளக்கம் அளித்தார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு உடுமலை வட்ட தலைவர் செல்லத்துரை வாழ்த்துரை வழங்கினார். உடுமலை பொருளாளர் சுரேஷ் குமார் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் 30 பெண்கள் உட்பட 75பேர் கலந்து கொண்டனர்.

    • 25 சதவீத போனஸ் வழங்கி தீபாவளி பண்டிகைக்கு முன்பணம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
    • வருகிற 10-ந் தேதி தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கத்தின் மத்திய சங்க நிர்வாக குழு கூட்டம் சங்கத் தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் தாமரைச்செல்வன் நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார்.

    சம்மேளன துணைத் தலைவர் துரை. மதிவாணன் சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் அரசு உடனடியாக அனைத்து சங்கங்களையும் அழைத்து பேசி போனஸ் பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும்.

    அனைவருக்கும் 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும், தீபாவளி முன்பணம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், போனஸ் சட்டத்தின் படி 30 நாட்கள் பணிபுரிந்த அனைவருக்கும் போனஸ் வழங்க வேண்டும் ,

    கடந்த கால போனஸ் நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 10-ந் தேதி தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.

    இதில் ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாவட்ட தலைவர் சேவையா, நுகர்பொருள் வாணிப கழக சங்க மாநில பொருளாளர் கோவிந்தராஜன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச்செயலாளர் அப்பாத்துரை, போக்குவரத்து சங்க நிர்வாகிகள் கஸ்தூரி, மாணிக்கம், சுந்தர பாண்டியன், சந்திரன், ரங்கதுரை, செல்வராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பொருளாளர் ராஜமன்னன் நன்றி கூறினார்.

    • கனல் கண்ணன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்
    • 56 பேர் கைது

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்து முன்னணி வேலூர் கோட்டை அமைப்பாளர் ராஜேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது மாவட்ட செயலாளர்கள் மோகன், ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்பாட்டத்தில் கருத்து சுதந்திரத்தின் குரல் வலையை நசுக்கும் வகையில் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    ஆர்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 56 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் விடுவித்தனர்.

    • மத்திய அரசை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது பொய் வழக்கு போட்டு விசாரணை நடத்தி வரும் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.


    பெரம்பலூர்:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது பொய் வழக்கு போட்டு விசாரணை நடத்தி வரும் மத்திய அரசை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பெரம்பலூரில் மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது பொய் வழக்கு போட்டு விசாரணை நடத்தி வரும் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மனோகரன், நல்லதம்பி, மாவட்ட பொருளாளர் அய்யம்பெருமாள், மாவட்ட பொறுப்பாளர் ஆசைத்தம்பி, வேப்பந்தட்டை ஒன்றிய தலைவர் சின்னசாமி,

    சிறுபான்மையர் பிரிவு பொறுப்பாளர் பத்தோதின், மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் பாலமுருகன், சட்டமன்ற இளைஞர் அணி துணை தலைவர் விஜயகுமார், தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் மகேந்திரன், அரும்பாவூர் நகர தலைவர் தேவராஜ், செந்துறை பொறுப்பாளர்கள் ராஜேந்திரன், மணிகண்டன் உட்பட பல கலந்து கொண்டனர்,


    ×