என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்திய அரசை கண்டித்து பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்
- மத்திய அரசை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது பொய் வழக்கு போட்டு விசாரணை நடத்தி வரும் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
பெரம்பலூர்:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது பொய் வழக்கு போட்டு விசாரணை நடத்தி வரும் மத்திய அரசை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரம்பலூரில் மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது பொய் வழக்கு போட்டு விசாரணை நடத்தி வரும் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மனோகரன், நல்லதம்பி, மாவட்ட பொருளாளர் அய்யம்பெருமாள், மாவட்ட பொறுப்பாளர் ஆசைத்தம்பி, வேப்பந்தட்டை ஒன்றிய தலைவர் சின்னசாமி,
சிறுபான்மையர் பிரிவு பொறுப்பாளர் பத்தோதின், மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் பாலமுருகன், சட்டமன்ற இளைஞர் அணி துணை தலைவர் விஜயகுமார், தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் மகேந்திரன், அரும்பாவூர் நகர தலைவர் தேவராஜ், செந்துறை பொறுப்பாளர்கள் ராஜேந்திரன், மணிகண்டன் உட்பட பல கலந்து கொண்டனர்,






