search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் 2023"

    • குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
    • நாங்கள் பேட்டிங் செய்த விதம் நிச்சயமாக ஆச்சரியமாக இருந்தது.

    அகமதாபாத்:

    16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 214 ரன்கள் குவித்தது.

    பின்னர் 215 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி சென்னை அணி பேட்டிங் செய்தது. 0.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 4 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என்று சென்னை அணிக்கு இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

    இதை நோக்கி ஆடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட்டும் (26 ரன்), கான்வேவும் (47 ரன், 4 பவுண்டரி, 2 சிக்சர்) அதிரடியான தொடக்கம் தந்தனர். அடுத்து வந்த ரஹானே (27 ரன்), அம்பத்தி ராயுடு (19 ரன்) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளிக்க, போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியது.

    கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்டது. உச்சக்கட்ட டென்ஷனுக்கு மத்தியில் இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா வீசினார். முதல் 4 பந்தில் 3 ரன் மட்டுமே எடுத்ததால் நெருக்கடி அதிகரித்தது. கடைசி 2 பந்தில் 10 ரன் தேவையாக இருந்தது. 5-வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா சிக்சர் தூக்கியதுடன் கடைசி பந்தில் பவுண்டரி விரட்டி சென்னை அணிக்கு திரில் வெற்றியை தேடித்தந்தார். சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்ததோடு கோப்பையை உச்சிமுகர்ந்தது.

    இந்த நிலையில் போட்டிக்கு பின் பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது:-

    நான் அவருக்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். விதி இதை எழுதியது. நான் தோற்க வேண்டும் என்றால், நான் அவரிடம் (டோனி) தோற்றுவிடுவேன். நல்லவர்களுக்கு நல்லது நடக்கும். எனக்கு தெரிந்த சிறந்த நபர்களில் அவரும் ஒருவர். கடவுள் கருணை காட்டினார். கடவுள் என்னிடமும் கருணை காட்டியுள்ளார். ஆனால் இன்று அவரது இரவு. சென்னை அணி எங்களை விட சிறந்த கிரிக்கெட்டை விளையாடியது.

    நாங்கள் பேட்டிங் செய்த விதம் நிச்சயமாக ஆச்சரியமாக இருந்தது. சாய் சுதர்சன் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. நான் அவரை வாழ்த்துகிறேன். அவர் வாழ்க்கையில் அதிசயங்களைச் செய்யப் போகிறார். எங்கள் வீரர்கள் சீசன் முழுவதும் விளையாடிய விதம் உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது. தொடர்ந்து போராடினார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எப்போதும் போல் டாடா ஐபிஎல் சிறப்பாக இருந்தது.
    • குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்த ஆண்டு வலுவாக திரும்ப வரும்.

    16வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபாரமாக வெற்றி பெற்று, 5வது முறையாக சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது.

    இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்கு கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சிறந்த இறுதிப்போட்டிகளில் இதுவும் ஒன்று. எப்போதும் போல் டாடா ஐபிஎல் சிறப்பாக இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள்! குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்த ஆண்டு வலுவாக திரும்ப வரும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • 12.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டோனி ரன் எடுக்காமல் அவுட்டானார்.
    • 15 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

    கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.

    குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடந்தன. டாஸ் வென்ற டோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. 170 - 180 ரன்கள் எடுத்தாலே போதுமானது என்ற நிலையில், டோனியின் பந்துவீச்சு தேர்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

    தொடக்க வீரர்களாக சகாவும், ஷுப்மன் கில்லும் களமிறங்கினார்கள். ஷுப்மன் கில்லை விரைவாக வீழ்த்தினால் எப்படியும் 170 ரன்னுக்குள் சுருட்டிவிட முடியும் என டோனி எண்ணினார். அதன்படி பீல்டிங் வியூகம் அமைத்தார்.

    ஷுப்மன் கில் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தீபக் சாகர் கேட்சை தவறவிட்டதால் கண்டத்தில் இருந்து தப்பினார். அதன்பின் தொடர்ந்து அதிரடி காட்டினார்.

    பந்துகளை பவுண்டரிகளாக விளாசி பந்துவீச்சாளர்களை திணறடித்தார். 19 பந்துகளில் 7 பவுண்டரி உள்பட 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 20வது பந்தில் ஆட்டமிழந்தார். ஜடேஜா வீசிய பந்தை ஷுப்மன் கில் இறங்கி விளையாட முன்றபோது, பந்து நேராக டோனி கிடைக்க, அவர் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து வீழ்த்தினார். இதனால் ஷுப்மான் கில் 20 பந்தில் 39 ரன்களுடன் வெளியேறினார்.

    அவரைத் தொடர்ந்து விர்திமான் சகா- சாய் சுதர்சன் ஜோடியும் சிஎஸ்கே பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது. இருவரும் அரை சதம் கடந்து முன்னேறினர்.

    சகா 54 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சாய் சுதர்சனுடன் இணைந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய சாய் சுதர்சன் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 96 ரன்களில் அவுட் ஆனார். அவர் 47 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் இந்த இலக்கை எட்டினார்.

    20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்ட்யா 21 ரன்களுடன் களத்தில் இருந்தார். சிஎஸ்கே தரப்பில் பதீரனா 2 விக்கெட் எடுத்தார். தீபக் சாகர், ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது.

    தொடக்க வீரர்களாக ருதுராஜ் மற்றும் கான்வே களமிறங்கினர். ருதுராஜ் 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தநிலையில், அங்கு மழை திடீரென குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    சிஎஸ்கே பேட்டிங் செய்ய தொடங்கிய நிலையில், இறுதிப்போட்டி முழுமையாக முடியுமா அல்லது போட்டி ரத்து செய்யப்படுமா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருந்தனர்.

    பின்னர், மழை நின்றதை அடுத்து ஈரப்பதமான மைதானத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். சரியாக நள்ளிரவு 12.10 மணியளவில் சிஎஸ்கே பேட்டிங் செய்ய தொடங்கியது.

    ஆனால், பவர் பிளே ஆப் முறைப்படி சிஎஸ்கேவுக்கு 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. குஜராத் அணி 20 ஓவர்களில் 214 ரன்கள் அடித்த நிலையில், சென்னை அணிக்கு 15 ஓவர்களுக்கு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    முதலில் களமிறங்கிய ருதுராஜ் 26 ரன்களும், கான்வே 47 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    தொடர்ந்து, ரஹானே 27 ரன்களும், ராயுடு 19 ரன்களும் எடுத்தனர்.

    ராயுடு ஆட்டமிழந்ததை அடுத்து, டோனி களமிறங்கினார். 12.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டோனி ரன் எடுக்காமல் அவுட்டானார். இது சென்னை ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றமாக இருந்தது.

    தொடர்ந்து, துபே மற்றும் ஜடேஜா களத்தில் இருந்தனர். 12 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடியது.

    துபே 32 ரன்களும், ஜடேஜா 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், 15 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

    இதன்மூலம் ஐபிஎல் 2023 தொடரில் 5வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது.

    • 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.
    • திடீரென மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    டாஸ் வென்ற டோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. 170 - 180 ரன்கள் எடுத்தாலே போதுமானது என்ற நிலையில், டோனியின் பந்துவீச்சு தேர்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

    20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது.

    முதலில் ருதுராஜ் மற்றும் கான்வே களமிறங்கினர். ருதுராஜ் 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தார்.

    இந்நிலையில், அங்கு திடீரென மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    சிஎஸ்கே பேட்டிங் செய்ய தொடங்கிய நிலையில், இறுதிப்போட்டி முழுமையாக முடியுமா அல்லது போட்டி ரத்து செய்யப்படுமா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

    பின்னர், மழை நின்றதை அடுத்து ஈரப்பதமான மைதானத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், மழையால் தடைப்பட்ட ஐபிஎல் இறுதிப்போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

    குஜராத் அணி 20 ஓவர்களில் 214 ரன்கள் அடித்த நிலையில், சென்னை அணிக்கு 15 ஓவர்களுக்கு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, மழையால் தடைப்பட்ட இறுதிப்போட்டி மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது.

    • அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார்.
    • ஒரு சீசனில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் பட்டியலில் கில் 4-வது இடத்தில் உள்ளார்.

    ஐபிஎல் 2023-ல் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரரான சுப்மான் கில் முதல் போட்டியில் இருந்து தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.  அவரை அவுட் ஆக்கினால்தான் குஜராத் டைட்டன்ஸ் அணியை வெல்ல முடியும் என்ற நிலையை உருவாக்கினார்.

    ஷுப்மன் கில் இந்தத் தொடரில் மூன்று சதங்கள் அடித்து விளாசினார். குறிப்பாக ஆர்.சி.பி. அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியிலும் மும்பை அணிக்கு எதிரான போட்டியிலும் அடுத்தடுத்து சதங்கள் விளாசினார். இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதன்மூலம் இந்த சீசனில் மொத்தமாக 17 போட்டியில் 890 ரன்கள் எடுத்து, ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் பிடித்துள்ளார். விராட் கோலி 973 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். 863 ரங்களுடன் ஜோஸ் பட்லர் 3-வது இடத்தில் உள்ளார். டேவிட் வார்னர் 848 ரன்கள் அடித்து 4-வது இடத்தில் உள்ளார். கேன் வில்லியம்சன் 735 ரன்கள் எடுத்து ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

    அதேபோல் ஒரு சீசனில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார். ஜோஸ் பட்லர் 128 பவுண்டரிகள் அடித்து முதல் இடத்திலும், 122 பவுண்டரிகள் எடுத்து விராட் கோலி இரண்டாவது இடத்திலும். 119 பவுண்டரிகள் அடித்து டேவிட் வார்னர் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். ஷுப்மன் கில் 118 பவுண்டரிகள் நான்காவது இடத்தில் உள்ளார். ஒட்டுமொத்தமாக இந்த சீசன் அவருக்கு அருமையாக அமைந்துள்ளது.

    • தீபக் சாகர் கேட்சை தவறவிட்டதால் கண்டத்தில் இருந்து தப்பிய ஷுப்மன் கில் தொடர்ந்து அதிரடி காட்டினார்.
    • சாய் சுதர்சன் 47 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 96 ரன்கள் விளாசினார்.

    கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற டோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. 170 - 180 ரன்கள் எடுத்தாலே போதுமானது என்ற நிலையில், டோனியின் பந்துவீச்சு தேர்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

    தொடக்க வீரர்களாக சகாவும் ஷுப்மன் கில்லும் களமிறங்கினார்கள். ஷுப்மன் கில்லை விரைவாக வீழ்த்தினால் எப்படியும் 170 ரன்னுக்குள் சுருட்டிவிட முடியும் என டோனி எண்ணினார். அதன்படி பீல்டிங் வியூகம் அமைத்தார்.

    ஷுப்மன் கில் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தீபக் சாகர் கேட்சை தவறவிட்டதால் கண்டத்தில் இருந்து தப்பினார். அதன்பின் தொடர்ந்து அதிரடி காட்டினார். பந்துகளை பவுண்டரிகளாக விளாசி பந்துவீச்சாளர்களை திணறடித்தார். 19 பந்துகளில் 7 பவுண்டரி உள்பட 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 20வது பந்தில் ஆட்டமிழந்தார். ஜடேஜா வீசிய பந்தை ஷுப்மன் கில் இறங்கி விளையாட முன்றபோது, பந்து நேராக டோனி கிடைக்க, அவர் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து வீழ்த்தினார். இதனால் ஷுப்மான் கில் 20 பந்தில் 39 ரன்களுடன் வெளியேறினார். 

    அவரைத் தொடர்ந்து விர்திமான் சகா- சாய் சுதர்சன் ஜோடியும் சிஎஸ்கே பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது. இருவரும் அரை சதம் கடந்து முன்னேறினர். சகா 54 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சாய் சுதர்சனுடன் இணைந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய சாய் சுதர்சன் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 96 ரன்களில் அவுட் ஆனார். அவர் 47 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் இந்த இலக்கை எட்டினார்.

    20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்ட்யா 21 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    சிஎஸ்கே தரப்பில் பதீரனா 2 விக்கெட் எடுத்தார். தீபக் சாகர், ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்குகிறது.

    • ஷுப்மன் கில்லை விரைவாக வீழ்த்தினால் எப்படியும் 170 ரன்னுக்குள் சுருட்டிவிட முடியும் என டோனி எண்ணினார்.
    • 19 பந்துகளில் 7 பவுண்டரி உள்பட 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 20வது பந்தில் ஆட்டமிழந்தார்.

    குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி குஜராத் நரேந்திர சிங் மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற டோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங்கை  தொடங்கியது. 170 - 180 ரன்கள் எடுத்தாலே போதுமானது என்ற நிலையில், டோனியின் பந்துவீச்சு தேர்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

    தொடக்க வீரர்களாக சகாவும் ஷுப்மன் கில்லும் களமிறங்கினார்கள். ஷுப்மன் கில்லை விரைவாக வீழ்த்தினால் எப்படியும் 170 ரன்னுக்குள் சுருட்டிவிட முடியும் என டோனி எண்ணினார். அதன்படி பீல்டிங் வியூகம் அமைத்தார்.

    ஷுப்மன் கில் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தேஷ்பாண்டே வீசிய இரண்டாவது ஓவரில் அவரது விக்கெட்டை வீழ்த்துவதற்காக இடதுபக்க அம்பயர் அருகில் பீல்டரை நிறுத்தினார் டோனி. எதிர்பார்த்தபடி ஷுப்மன் கில் பிளிக் செய்ய, கரெக்ட்டாக சொல்லிவைத்ததுபோல், தீபக் சாகர் கையில் பந்து விழுந்தது. ஆனால் தீபச் பந்தை தவற விட்டார். கிடைத்த வாய்ப்பை கோட்டைவிட்டதால் சென்னை வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்த கண்டத்தில் இருந்து தப்பிய ஷுப்மன் கில் தொடர்ந்து அதிரடி காட்டினார். பந்துகளை பவுண்டரிகளாக விளாசி பந்துவீச்சாளர்களை திணறடித்தார். 19 பந்துகளில் 7 பவுண்டரி உள்பட 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 20வது பந்தில் ஆட்டமிழந்தார். ஜடேஜா வீசிய பந்தை ஷுப்மன் கில் இறங்கி விளையாட முன்றபோது, பந்து நேராக டோனி கிடைக்க, அவர் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து வீழ்த்தினார். இதனால் ஷுப்மன் கில் 20 பந்தில் 39 ரன்களுடன் வெளியேறினார். இதன்மூலம் டி20 போட்டிகளில் 300 பேரை அவுட் ஆக்கி உள்ளார் டோனி.

    • கனமழை தொடர்ந்து பெய்ததால் போட்டி ஒத்திவைக்கப்பட்டு இன்று நடத்தப்படுகிறது.
    • இன்று வானிலை சீராக இருந்ததால் மாலை 7 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது.

    நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற இருந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத இருந்தன. கனமழை தொடர்ந்து பெய்து வந்ததால் போட்டி ஒத்திவைக்கப்பட்டு இன்று நடத்தப்படுகிறது.

    இன்றும் மழைக்கான அறிகுறிகள் இருந்ததால் போட்டி பாதிக்கப்படும் சூழல் இருந்தது. அகமதாபாத்தற்கு மேற்கே மழை பெய்தது. ஆனால் பிற்பகலுக்கு பிறகு வானம் ஓரளவு தெளிவாக காணப்பட்டது. இதனால் சரியாக 7 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. டாசில் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார். குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக விர்திமான் சகா, ஷுப்மன் கில் களமிறங்கினர். மழை குறுக்கிட்டால் ஓவர்கள் குறைக்கப்படும்.

    • பாண்டியா ஐந்து ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
    • 4 போட்டி மும்பை அணிக்காகவும் 1 குஜராத் அணிக்காகவும் கோப்பையை கைப்பற்றியுள்ளார்.

    ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் டோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியும் இன்று மோதுகிறது.

    இந்த போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றால் ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஹர்திக் பாண்ட்யா பங்கேற்ற 6 முறையும் அந்த அணி கோப்பையை கைப்பற்றிய சாதனையை எட்டும்.

    பாண்டியா இதுவரை ஐந்து ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் விளையாடிய நிலையில் 5 போட்டியிலும் அவர் இடம் பெற்ற அணிகள் வெற்றி வாகை சூடியுள்ளன. 2015, 2017, 2019, 2020-ல் மும்பை அணியில் இருந்தார். பின்னர் 2022-ல் குஜராத் அணியை வழிநடத்தினார்.

    மறுபுறம், டோனி இதுவரை 10 இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 9 சிஎஸ்கே அணிக்காவும் 1 புனே அணிக்காகவும் விளையாடியுள்ளார். அதில் அவர் 4 வெற்றிகளை 2010, 2011, 2018 மற்றும் 2021-ல் சிஎஸ்கே உடன் பெற்றுள்ளார். எனவே இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களில் பாண்ட்யாவை விட டோனி பின் தங்கிய நிலையில் உள்ளார்.

    இன்றைய ஆட்டத்தில் குஜராத் வெற்றி பெற்றால், ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் 3-வது அணியாக இருக்கும். சிஎஸ்கே அணி 2011-ல் மற்றும் மும்பை 2020-ல் தொடர்ந்து கோப்பை கைப்பற்றியது. மேலும், சிஎஸ்கே வெற்றி பெற்றால், மும்பை அணியின் சாதனையை சமன் செய்யும். மும்பை 5 முறையும் சென்னை 4 முறையும் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளன.

    • டோனியின் கடைசி ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.
    • 350 ஒருநாள் போட்டிகள் வரையில் டோனி விளையாடியுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி ஒரு நாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணிக்காக பெற்றுக் கொடுத்தார். அதோடு ஆசியா கோப்பையை 2 முறையும், பார்டர் கவாஸ்கர் டிராபியையும் 3 முறையும் வென்று கொடுத்துள்ளார்.

    கடந்த 200-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலமாக ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன்பிறகு 350 ஒருநாள் போட்டிகள் வரையில் விளையாடியுள்ளார்.

    கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி மான்செஸ்டரில் நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டியில் நடைபெற்றது.

    இந்தப் போட்டியின் போது மழை குறுக்கீடு இருந்தது. அதன்பிறகு போட்டி அடுத்தநாள் தொடங்கப்பட்டது. இதில், நியூசிலாந்து 239 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்தியா 221 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் டோனி 50 ரன்கள் எடுத்து ரன் அவுட்டில் வெளியேறினார். இந்த போட்டி முடிந்து சில மாதங்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

    அன்று நடந்தது போன்று இன்றும் நடந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க இருந்தது. ஆனால், தொடர்ந்து கனமழை பெய்ததால் ஆட்டம் இன்று மாற்றுப்பட்டுள்ளது. இது டோனியின் 250-வது ஐபிஎல் போட்டி ஆகும்.

    ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியும் ரிசர்வ் நாளாக செல்வதைக் கண்டு, சென்னை அணி தோல்வியடைந்து விடுமோ, ஐபிஎல்லில் டோனி பேட் செய்வது இதுவே கடைசி முறையாக இருக்குமோ என்று ரசிகர்கள் பயப்படுகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் இறுதிப்போட்டியில் டோனி தலைமையில் சிஎஸ்கே வெற்றி பெற்று அடுத்த ஆண்டும் தொடரும் எனவும் கூறிவருகின்றனர். இது குறித்தான விவாவதங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • போலீஸ்காரர் குடிபோதையில் இருந்ததாகவும், அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.
    • மேலும் சிலர் போலீசாருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    அகமதாபாத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று நடைபெற இருந்தது. ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. இன்று மீண்டும் ஆட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் மழை பெய்து கொண்டிருந்த போது ரசிகர்கள் மைதானத்தில் நீண்ட நேரமாக காத்திருந்தனர். அப்போது பெண் ரசிகை ஒருவர் தனக்கு அருகில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவரை தாக்கினார்.

    அவர் கீழே விழுந்து மீண்டும் எழுந்தபோதும் அந்த பெண் மறுபடியும் தாக்கினார். ஆனால் அந்த அதிகாரி எதிர்த்து ஏதும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தார். இந்த சண்டை ஏன் நடந்தது என்பது குறித்த சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் இது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.


    போலீஸ்காரர் குடிபோதையில் இருந்ததாகவும், அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் சிலர் கூறுகின்றனர். போலீசாரிடம் உடலை சுத்தப்படுத்தியதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் போலீசாருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

    • கடந்த சீசனில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியனான நாள் தான் இன்று.
    • தற்போது ஐபிஎல் 16-வது சீசனில் இறுதிப் போட்டிக்கு வந்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி, சென்னை அணியை இன்று எதிர்கொள்கிறது.

    கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 8 அணிகள் மட்டுமே விளையாடிய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பல மாறுதல்கள் நடந்து தற்போது 10 அணிகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகின்றன. கடந்த 2022-ம் ஆண்டு 15-வது ஐபிஎல் சீசனில் முதல் முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணி இடம் பெற்று விளையாடியது.

    இதில், இறுதிப் போட்டிக்கு சென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொண்டது. கடந்த 2022-ம் ஆண்டு மே 29-ம் தேதி நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 22 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

    இதேபோன்று தற்போது ஐபிஎல் 16-வது சீசனில் இறுதிப் போட்டிக்கு வந்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி, சென்னை அணியை இன்று எதிர்கொள்கிறது.

    நேற்று அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி நடக்க இருந்தது. ஆனால் கனமழை காரணமாக போட்டி இன்று மாற்றப்பட்டது.

    எல்லாமே குஜராத் அணிக்கு சாதகமாகவே உள்ளதாக சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். நேற்று நடக்க வேண்டிய போட்டி இன்று நடைபெறுகிறது, இன்றும் மழை வந்தால் குஜராத் அணிக்கே கோப்பை என இருக்கும் சூழலில் சென்னை தோல்வியடைந்து விடுமோ என சிஎஸ்கே ரசிகர்கள் கலத்தில் உள்ளனர்.

    இன்று இரவு நடக்கும் போட்டியிலும் மழை பெய்யக் கூடும் என்று கூறப்படுகிறது. அப்படி மழை பெய்தால், குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அப்படி அறிவிக்கப்பட்டால், 2-வது முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியனாகும்.

    ×