search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரிசர்வ் டே"

    • இந்த சீசனில் முதன்முதலாக டி.ஆர்.எஸ். முறை பயன்படுத்தப்பட உள்ளது.
    • இந்த முறை டிஜிட்டல் தளத்திலும் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 7-வது சீசன் வருகிற ஜூன் 12-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி ஜூலை 12-ந் தேதி வரை நடக்கிறது.

    இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், சீகம் மதுரை பேந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், லைகா கோவை கிங்ஸ், ஐ டிரீம் திருப்பூர் தமிழன்ஸ், பால்சி திருச்சி ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த போட்டிகள் அனைத்தும் கோவை, திண்டுக்கல், சேலம், நெல்லையில் நடக்கிறது.

    கோவையில் வருகிற 12-ந்தேதி நடக்கும் முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியும், ஐ டிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி உள்பட கோவையில் 6 ஆட்டங்களும், திண்டுக்கல்லில் 7 ஆட்டங்களும், சேலத்தில் 8 ஆட்டங்களும் நடத்தப்படுகிறது. நெல்லையில் 9 போட்டிகள் நடத்தப்படுகிறது.

    நெல்லையில் ஜூலை 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கும் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திருச்சி அணியும் மோதுகின்றன.

    இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் கழக உதவி செயலாளர் ஆர்.என்.பாபா நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கிராமப்புறங்களில் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டங்களில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகிறது. டி.என்.பி.எல். போட்டியின் ப்ளே-ஆப் மற்றும் இறுதிப்போட்டி உள்பட 32 போட்டிகள் 25 நாட்களில் நடத்தப்படுகிறது. குவாலிபையர்- 1 மற்றும் எலிமினேட்டர் சுற்று சேலத்திலும், குவாலிபையர்- 2 மற்றும் இறுதிப்போட்டி நெல்லையிலும் நடத்தப்படுகிறது.

    இந்த சீசனில் முதன்முதலாக டி.ஆர்.எஸ். முறை பயன்படுத்தப்பட உள்ளது. போட்டிக்கான சாதாரண டிக்கெட் ரூ.200-க்கும், உணவு வசதியுடன் கூடிய டிக்கெட் ரூ.1,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 90 சதவீதம் டிக்கெட் விற்பனை ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது. கவுண்டர்களில் குறைந்தபட்ச டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த முறை டிஜிட்டல் தளத்திலும் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    மழையினால் நாக்-அவுட் மற்றும் இறுதிப்போட்டிகள் தடைபடாமல் இருக்க ரிசர்வ் டே முறை வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டிகளை போல் ரிசர்வ் டே வழிமுறையும் இந்த ஆண்டு முதல் கடைபிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறை டி.ஆர்.எஸ். நடைமுறையும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ், ஸ்டார் ஸ்போட்ஸ் 1 ஹச்.டி. ஆகிய சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நெல்லை கிரிக்கெட் கழக தலைவர் சரவணமுத்து, செயலாளர் ராம்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • டோனியின் கடைசி ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.
    • 350 ஒருநாள் போட்டிகள் வரையில் டோனி விளையாடியுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி ஒரு நாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணிக்காக பெற்றுக் கொடுத்தார். அதோடு ஆசியா கோப்பையை 2 முறையும், பார்டர் கவாஸ்கர் டிராபியையும் 3 முறையும் வென்று கொடுத்துள்ளார்.

    கடந்த 200-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலமாக ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன்பிறகு 350 ஒருநாள் போட்டிகள் வரையில் விளையாடியுள்ளார்.

    கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி மான்செஸ்டரில் நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டியில் நடைபெற்றது.

    இந்தப் போட்டியின் போது மழை குறுக்கீடு இருந்தது. அதன்பிறகு போட்டி அடுத்தநாள் தொடங்கப்பட்டது. இதில், நியூசிலாந்து 239 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்தியா 221 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் டோனி 50 ரன்கள் எடுத்து ரன் அவுட்டில் வெளியேறினார். இந்த போட்டி முடிந்து சில மாதங்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

    அன்று நடந்தது போன்று இன்றும் நடந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க இருந்தது. ஆனால், தொடர்ந்து கனமழை பெய்ததால் ஆட்டம் இன்று மாற்றுப்பட்டுள்ளது. இது டோனியின் 250-வது ஐபிஎல் போட்டி ஆகும்.

    ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியும் ரிசர்வ் நாளாக செல்வதைக் கண்டு, சென்னை அணி தோல்வியடைந்து விடுமோ, ஐபிஎல்லில் டோனி பேட் செய்வது இதுவே கடைசி முறையாக இருக்குமோ என்று ரசிகர்கள் பயப்படுகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் இறுதிப்போட்டியில் டோனி தலைமையில் சிஎஸ்கே வெற்றி பெற்று அடுத்த ஆண்டும் தொடரும் எனவும் கூறிவருகின்றனர். இது குறித்தான விவாவதங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×