search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஒரே சீசனில் அதிக ரன்: 890 ரன்கள் குவித்து ஷுப்மன் கில் இரண்டாவது இடம்
    X

    ஒரே சீசனில் அதிக ரன்: 890 ரன்கள் குவித்து ஷுப்மன் கில் இரண்டாவது இடம்

    • அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார்.
    • ஒரு சீசனில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் பட்டியலில் கில் 4-வது இடத்தில் உள்ளார்.

    ஐபிஎல் 2023-ல் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரரான சுப்மான் கில் முதல் போட்டியில் இருந்து தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அவரை அவுட் ஆக்கினால்தான் குஜராத் டைட்டன்ஸ் அணியை வெல்ல முடியும் என்ற நிலையை உருவாக்கினார்.

    ஷுப்மன் கில் இந்தத் தொடரில் மூன்று சதங்கள் அடித்து விளாசினார். குறிப்பாக ஆர்.சி.பி. அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியிலும் மும்பை அணிக்கு எதிரான போட்டியிலும் அடுத்தடுத்து சதங்கள் விளாசினார். இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதன்மூலம் இந்த சீசனில் மொத்தமாக 17 போட்டியில் 890 ரன்கள் எடுத்து, ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் பிடித்துள்ளார். விராட் கோலி 973 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். 863 ரங்களுடன் ஜோஸ் பட்லர் 3-வது இடத்தில் உள்ளார். டேவிட் வார்னர் 848 ரன்கள் அடித்து 4-வது இடத்தில் உள்ளார். கேன் வில்லியம்சன் 735 ரன்கள் எடுத்து ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

    அதேபோல் ஒரு சீசனில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார். ஜோஸ் பட்லர் 128 பவுண்டரிகள் அடித்து முதல் இடத்திலும், 122 பவுண்டரிகள் எடுத்து விராட் கோலி இரண்டாவது இடத்திலும். 119 பவுண்டரிகள் அடித்து டேவிட் வார்னர் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். ஷுப்மன் கில் 118 பவுண்டரிகள் நான்காவது இடத்தில் உள்ளார். ஒட்டுமொத்தமாக இந்த சீசன் அவருக்கு அருமையாக அமைந்துள்ளது.

    Next Story
    ×