search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் பொன்முடி"

    • சோதனையின் முடிவில் அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.
    • பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

    சென்னை:

    தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடுகள், அலுவலகங்கள் என அவர் தொடர்புடைய 7 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பொன்முடியின் வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.80 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. சோதனையின் முடிவில் அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. இன்றும் பொன்முடி விசாரணைக்கு அழைக்கப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

    இந்நிலையில், அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்தப்பட்ட சோதனை மற்றும் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் (PMLA) அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பி. தொடர்புடைய 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது ரூ.81.7 லட்சம் பணம், ரூ.13 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. வங்கி கணக்கில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டிருந்த ரூ.41.9 கோடி முடக்கப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை கூறி உள்ளது.

    • பொன்முடி இன்று மாலை மீண்டும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார்.
    • எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு ஆலோசனை கூட்டத்திற்கு முன்பும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது.

    தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடு அவரது மகன் டாக்டர் கவுதமசிகாமணி எம்.பி. வீடு உள்பட 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலையில் இருந்து சோதனை நடத்தினார்கள்.

    அமைச்சர் பொன்முடியை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று இன்று அதிகாலை 3 மணி வரை விசாரணை மேற்கொண்டனர். இன்று மாலை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் வழங்கினர். அதன்படி இன்று ஆஜரானார்.

    இந்நிலையில் கர்நாடகாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு ஆலோசனை கூட்டத்திற்கு முன்பும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது.

    பாட்னா கூட்டத்திற்கு முன்பும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. எதிர்க்கட்சிகளிடையே பொதுவான குறைந்தபட்ச செயல் திட்டம் அவசியம். ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பதும் அவசியம்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நேற்று இரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
    • இன்று அமைச்சர் பொன்முடியுடன் அவரது மகனும் எம்.பி.யுமான கவுதம சிகாமணியும் விசாரணைக்கு ஆஜரானார்.

    சென்னை:

    தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்குப் பிறகு அமைச்சர் பொன்முடியை நேற்று இரவு அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நிறைவடைந்த நிலையில் அமைச்சர் பொன்முடி அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்குச் சென்றார்.

    இன்று மாலை 4 மணிக்கு விசாரணைக்கு மீண்டும் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி அமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பொன்முடியின் மகனும் எம்.பி.யுமான கவுதம சிகாமணியும் விசாரணைக்கு ஆஜரானார்.

    • அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று இன்று அதிகாலை 3 மணி வரை விசாரணை மேற்கொண்டனர்.
    • அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணை விவரங்களை கேட்டறிந்த முதலமைச்சர் துணிச்சலுடனும், சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளுமாறு பொன்முடிக்கு அறிவுரை கூறினார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று பெங்களூரு சென்றிருந்தார். இன்றும் அங்குதான் உள்ளார்.

    இந்த நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடு அவரது மகன் டாக்டர் கவுதமசிகாமணி எம்.பி. வீடு உள்பட 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலையில் இருந்து சோதனை நடத்தினார்கள்.

    அமைச்சர் பொன்முடியை  அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று இன்று அதிகாலை 3 மணி வரை விசாரணை மேற்கொண்டனர். இன்று மாலை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் வழங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் இன்று அமைச்சர் பொன்முடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். சோதனை குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

    அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணை விவரங்களை கேட்டறிந்த முதலமைச்சர் துணிச்சலுடனும், சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளுமாறு பொன்முடிக்கு அறிவுரை கூறினார்.

    ஒன்றிய பா.ஜ.க. அரசின், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க தார்மீக ரிதீயாகவும், அரசியல் மற்றும் சட்ட ரீதியாகவும் கழகம் என்றும் துணை நிற்கும்.

    இவ்வாறு பொன்முடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    • அமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
    • சட்ட ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.

    சென்னை:

    தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 20 மணி நேரத்துக்கு பிறகு இன்று அதிகாலை 3 மணி அளவில் நிறைவடைந்தது. இதனிடையே நுங்கம்பாக்கத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் 7 மணி நேரம் நடத்திய விசாரணையும் நிறைவு பெற்றது. அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.

    இதையடுத்து அமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக அவரது வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

    சட்ட ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நடைபெறும் முக்கிய ஆலோசனையில் மூத்த அமைச்சர்களான துரை முருகன், ஐ. பெரியசாமி, சி.வி.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    • அமலாக்கத்துறை அதிகாரிகளின் கேள்விகளுக்கு அமைச்சர் பொன்முடி பொறுமையாக பதிலளித்தார்.
    • அமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அளித்துள்ளது.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் அமைந்துள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 20 மணி நேரத்துக்கு பிறகு அதிகாலை 3 மணி அளவில் நிறைவடைந்தது.

    இதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். அங்கிருந்த சி.ஆர்.பி.எப். போலீசாரும் புறப்பட்டுச் சென்றனர்.

    நுங்கம்பாக்கத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் 7 மணி நேரம் நடத்திய விசாரணையும் நிறைவு பெற்றது. அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.

    அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நிறைவடைந்த நிலையில் அமைச்சர் பொன்முடி அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்குச் சென்றார்.

    இந்நிலையில், அமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது என வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.

    வழக்கறிஞர் சரவணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அளித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கையை மீறி பொன்முடிக்கு மன உளைச்சல் அளிக்கப்பட்டுள்ளது. கவர்னரை தொடர்ந்து எதிர்த்து வந்ததால் அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகளின் கேள்விகளுக்கு அமைச்சர் பொன்முடி பொறுமையாக பதிலளித்தார் என தெரிவித்தார்.

    • அமைச்சர் பொன்முடியின் சைதாப்பேட்டை வீட்டில் நடந்த 20 மணி நேர சோதனை நிறைவடைந்தது.
    • அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் 7 மணி நேரம் நடத்திய விசாரணையும் முடிந்தது.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி வீட்டுக்கு நேற்று காலை 7 மணியளவில் 7 பேர் அடங்கிய அமலாக்கத்துறை தனிப்படை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய 10-க்கும் மேற்பட்ட மத்திய தொழிற் பாதுகாப்பு படையினருடன் வந்தனர்.

    மேலும், அமைச்சர் பொன்முடியின் விழுப்புரம் இல்லம் மற்றும் அவரது அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதன்படி நேற்று காலை 7 மணி முதல் நடைபெற்ற சோதனை 20 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்தது.

    இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமலாக்கத் துறை துணை இயக்குநர் கார்த்திக், அமைச்சர் பொன்முடி மீது கைது நடவடிக்கை இல்லை என தெரிவித்தார்.

    • சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடியின் வீட்டில் காலை 7 மணிக்கு சோதனை தொடங்கியது.
    • இந்த சோதனை சுமார் 20 மணி நேரத்துக்கு பிறகு நிறைவடைந்தது.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் அமைந்துள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 20 மணி நேரத்துக்கு பிறகு அதிகாலை 3 மணி அளவில் நிறைவடைந்தது.

    இதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். அங்கிருந்த சி.ஆர்.பி.எப். போலீசாரும் புறப்பட்டுச் சென்றனர்.

    இந்நிலையில், நுங்கம்பாக்கத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் 7 மணி நேரம் நடத்திய விசாரணையும் நிறைவு பெற்றது. அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.

    • அமலாக்கத்துறையை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி மகனின் வீட்டில் சோதனை நிறைவடைந்தது.

    சென்னை:

    உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பிக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். அதுமட்டுமின்றி சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் பொன்முடிக்கு தொடர்புடைய வீடு, அலுவலகம், அவருக்கு சொந்தமான கல்லூரியிலும் சோதனை நடைபெற்றது.

    சென்னையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்து 70 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும், அமெரிக்க டாலர் உள்பட 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து 13 மணி நேர சோதனைக்கு பின் அமைச்சர் பொன்முடியை அவரது வீட்டில் இருந்து அவரது காரில் அமலாக்கத் துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் அசோக் இருவரும் அழைத்து செல்லப்பட்டு, அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், அமைச்சர் பொன்முடியிடம் 17 மணி நேரத்தை கடந்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமலாக்கத்துறை விசாரணையில் ரூ.48 கோடி வருவாய் வந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ரூ.48 கோடியை அமலாக்கத்துறை முடக்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • அமைச்சர் பொன்முடியின் விழுப்புரம் வீட்டில் சோதனை நிறைவடைந்தது.
    • அமலாக்கத்துறையை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 16 மணி நேரத்துக்கு பிறகு இரவு 11 மணி அளவில் நிறைவடைந்தது.

    இதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு ச் சென்றனர். இந்த சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை என தகவல் வெளியானது.

    இந்நிலையில், அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்திய சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் அமலாக்கத் துறையை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • விழுப்புரத்தில் உள்ள பொன்முடி வீட்டில் காலை 7 மணிக்கு சோதனை தொடங்கியது.
    • இந்த சோதனை சுமார் 16 மணி நேரத்துக்கு பிறகு நிறைவடைந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 16 மணி நேரத்துக்கு பிறகு இரவு 11 மணி அளவில் நிறைவடைந்தது.

    இதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

    இந்த சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை என தகவல் வெளியானது.

    • பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையின்போது திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • கணக்கில் காட்டப்படாத 70 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல்.

    சென்னை:

    உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. இவரது மகன் பொன் கவுதம சிகாமணி கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.யாக உள்ளார். அமைச்சர் பொன்முடியின் வீடு சென்னை சைதாபேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ளது. இங்கு காலை 6.50 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். அவர்கள் பொன்முடியின் வீட்டுக்குள் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இதேபோல் விழுப்புரத்தில் உள்ள பொன்முடியின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியின் வீட்டில்  அதிகாரிகள் சோதனையின்போது அவர்களிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வங்கி பரிவர்த்தனை, பணப் பரிமாற்றம், நகை மதிப்பீடு தொடர்பாக வங்கி அதிகாரிகளை நேரில் வரவழைத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, பொன்முடியின் வீட்டுக்கு இந்தியன் வங்கி அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். சோதனையின் முடிவில் பொன்முடியின் வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத 70 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாகவும், ரூ.10 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளும் கைப்பற்றியதாகவும் தகவல் வெளியானது.

    சென்னையில் நடந்த சோதனைக்குப்பிறகு சைதாப்பேட்டை வீட்டில் வைத்து அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணைக்கு பிறகு மேல் விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரது மகன் பொன் கவுதம சிகாமணியும் சென்றுள்ளார். விசாரணையின் முடிவில் பொன்முடி கைது செய்யப்படலாம் என்ற தகவலும் பரவி வருகிறது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×