search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker arrest"

    கோவை ஆடீஸ் வீதியில் காவலாளியை கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 56).

    இவர் ஆடீஸ் வீதியில் உள்ள ஒரு தனியார் நிறுவன குடோனில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த ஆண்டு மார்ச் 25-ந் தேதி இவர் குடோன் முன்பு ரத்தவெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.ரேஸ் கோர்ஸ் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    சம்பவத்தன்று நள்ளிரவு ராமனுக்கும், அதேபகுதியில் தங்கி வேலை பார்த்து வந்த எட்டிமடையை சேர்ந்த சந்திரன்(40) என்பவருக்கும் தகராறு நடந்தது தெரிய வந்தது. அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்கள் முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராகாட்சிகளை ஆய்வு செய்த போது சந்திரன் கல்லால் ராமனை தாக்குவது தெரிய வந்தது. எனவே சந்திரனை போலீசார் தேடிச் சென்ற போது அவர் தலைமறைவாகி விட்டார்.

    இதையடுத்து சந்திரனின் செல்போன் எண் மூலம் தேடி வந்தனர். அவரது நண்பர்கள், உறவினர்களிடம் விசாரணை நடத்தியும் ராமன் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் 1½ வருடங்களுக்கு பிறகு சந்திரன் நேற்று கோவை ரெயில் நிலையம் வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று சந்திரனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

    சந்திரன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    சம்பவத்தன்று நான் மது குடிப்பதற்காக ராமனிடம் பணம் கேட்டேன். ஆனால் அவர் பணம் இல்லை என கூறி விட்டார். இதனால் ஆத்திரத்தில் அவரை கல்லால் தாக்கி கொலை செய்தேன். போலீசார் என்னை தேடுவதை அறிந்து கர்நாடகாவுக்கு தப்பித்துச் சென்று விட்டேன்.

    கடந்த 1½ ஆண்டுகளாக அங்கு கூலி வேலை செய்து வந்தேன். தற்போது மழை காரணமாக வேலை இல்லாததால் ஊருக்கு திரும்பினேன். அப்போது போலீசாரிடம் சிக்கிக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். கைதான சந்திரனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    உவரி அருகே வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Murder

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் அருகே உள்ள உவரியை அடுத்த கூடுதாழையை சேர்ந்தவர் தர்மராஜ் மாற்றுத்திறனாளி. இவரது மகன் ஜெனால்டு (வயது 24). முடிதிருத்தும் தொழிலாளி. இதே பகுதியை சேர்ந்தவர் லிகோரி. இவரும் சவரத் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் ராணா சங்கர்(21). தர்மராஜ் குடும்பத்திற்கும், லிகோரி குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்து வருகிறது. இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் இரு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த ராணா சங்கர் மற்றும் லிகோரி ஆகியோர் தர்மராஜ் ஊன்றுகோலாக பயன்படுத்தும் கம்பால் ஜெனால்டை சரமாரியாக தாக்கினர். இதில் ஜெனால்டு படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்.

    இதையடுத்து ராணா சங்கர் தப்பியோடிவிட்டார். படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த ஜெனால்டை மீட்டு லிகோரி நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அப்போது மரம் விழுந்து காயமடைந்ததாக பொய்யான தகவல் கூறி அனுமதித்துள்ளார்.

    இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் ஜெனால்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லிகோரியும், ராணா சங்கரும் சேர்ந்து கம்பால் தாக்கியதில் காயமடைந்தது தெரியவந்தது. மேலும் லிகோரி பொய்யான தகவல் கொடுத்து மருத்துவமனையில் ஜெனால்டை அனுமதித்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் லிகோரியை கைது செய்தனர். தப்பியோடிய ராணா சங்கரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    வந்தவாசி அடுத்த பிருதூர் கிராமத்தில் மகள் கண்ணெதிரே தந்தையை கத்தியால் வெட்டிய கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த பிருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவா (வயது 52) தனியார் கம்பெனியில் வேலை செய்யும் இவரது மகள் ரஞ்சிதா (19) என்பவரை நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கூட்ரோட்டில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    அப்போது ஜெயின் கோவில் அருகே சென்ற போது பின்னால் சைக்கிளில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த உலகநாதன் (55) (கூலித் தொழிலாளி) என்பவர் ரஞ்சிதா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றார். பின்னால் துரத்தி சென்ற ஜீவா ஏன் எனது மகள் மீது மோதிவிட்டு நிற்காமல் செல்கின்றாய் என கேட்டுள்ளார்.

    இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஜீவாவை மறைத்து வைத்திருந்த கத்தியால் உலகநாதன் வெட்டியுள்ளார்.

    மேலும் உலகநாதனுக்கு ஆதரவாக அவரது மகன் அஜித்குமார் (19) என்பவர் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    இதில் காயமடைந்த ஜீவா வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக ஜீவா வந்தவாசி வடக்கு போலீசில் புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து உலகநாதனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அஜித்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 29). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.

    அதே நிறுவனத்தில் முருகன் (39) என்பவரும் கட்டிட தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார்.

    இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு சம்பளம் வழங்கும் பணியை முருகன் மேற்கொண்டு வருகிறார். சுப்பிரமணியனுக்கு இந்த மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை திருவதிகை பகுதியில் யூனியன் அலுவலகம் அருகே உள்ள டீக்கடையில் முருகன் டீ குடித்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த சுப்பிரமணி தனக்கு உடனடியாக சம்பளம் தருமாறு முருகனிடம் கேட்டார்.

    தற்போது சம்பளம் தர முடியாது என முருகன் கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த முருகன் அங்கு கிடந்த உருட்டு கட்டையை எடுத்து சுப்பிரமணியனை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டலும் விடுத்தார்.

    இதில் காயம் அடைந்த சுப்பிரமணியனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து பண்ருட்டி போலீசில் சுப்பிரமணியனின் சகோதரர் அசோக் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுப்ரியா வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தார்.
    துரைப்பாக்கம் அடுத்த கண்ணகி நகரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளியை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
    சோழிங்கநல்லூர்:

    துரைப்பாக்கத்தை அடுத்த கண்ணகிநகரை சேர்ந்தவர் லாரன்ஸ், தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இது குறித்து கண்ணகிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரன்சை கைது செய்தனர். பின்னர் அவரை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.
    கோவை அருகே வேலை பார்த்த நகை பட்டறையில் தங்ககட்டி திருடிய ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை பொன்னைய ராஜபுரத்தை சேர்ந்தவர் நூர் முகமது மாலிக்(வயது 37). இவர் கெம்பட்டி காலனியில் நகைபட்டறை நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த அஜ்கர் அலி(41) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று நூர் முகமது மாலிக் 101 கிராம் தங்க கட்டியை கொடுத்து நகை செய்து தருமாறு கூறினார். அதனை வாங்கிக் கொண்ட அஜ்கர் அலி நகை செய்து கொடுக்காமல் மறு நாள் தங்ககட்டியுடன் தப்பி ஓடி விட்டார். இதன் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து நூர் முகமது மாலிக் பெரிய கடை வீதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் அஜ்கர் அலி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    சேலம் வீராணம் அருகே வாலிபரை பாட்டிலால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் வீராணம் அருகே உள்ள எம்.பாலப்பட்டி மைதானத்தில் கன்னங்குறிச்சியை சேர்ந்த குணா (வயது 25) கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது இவருக்கும் எம்.பாலப்பட்டியை சேர்ந்த அஜித்குமார்(22) என்பவருக்கு மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த குணா கீழே கிடந்த உடைந்த பாட்டிலை எடுத்து அஜித்குமாரை குதித்தினார்.

    இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குணாவை கைது செய்தனர். இவர் வெள்ளிப்பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார் என்பது தெரியவந்தது.

    இண்டூர் அருகே மனைவியை கொடுவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம், இண்டூர் அருகே சோமன அள்ளியை அடுத்துள்ள காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது55). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பார்வதி (44). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளது.

    கன்னியப்பன் சொந்தமாக 10 ஆடுகள் அவர் வளர்த்து வருகிறார். இந்த ஆட்டை தினமும் அருகில் உள்ள வயல் வெளியில் கொண்டு மேய்த்து விட்டு வீட்டிற்கு கொண்டு வருவார்.

    நேற்று ஆடுகளை மேய்த்து கொண்டு வீட்டிற்கு திரும்பினார். பின்னர் அந்த ஆட்டை வீட்டின் பின்னால் கட்டி வைத்தார்.

    நேற்று மாலை பார்வதியிடம் செலவுக்கு பணம் வேண்டும் என்று கன்னியப்பன் கேட்டுள்ளார். என்னிடம் இப்போது பணம் இல்லை பிறகு தருகிறேன் என்றார் பார்வதி. பீடி வாங்குவதற்கு கூட காசு இல்லை. அதனால் எனக்கு உன்னிடம் இருக்கும் காசு மட்டும் தா என்று கேட்டார். அதற்கு காசு ஒன்னும் தர முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது.

    இதனால் கோபம் அடைந்து ஆத்திரமடைந்த கன்னியப்பன் தனது மனைவி என்று கூட பார்க்காமல் வீட்டில் இருந்த கொடுவாளை எடுத்து பார்வதியின் கழுத்தில் வெட்ட பார்த்தார். உடனே அவர் சுதாரித்து நழுவினார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது முகத்தில் வெட்டு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் கூச்சலிட்டார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் ஒடி வந்து பார்த்த போது ரத்தம் சொட்ட சொட்ட பார்வதி மயங்கி கிடந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த இண்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி மற்றும் போலீசார் விரைந்து சென்று மனைவியை கொலை செய்ய முயன்ற கன்னியப்பனை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews

    கடலூரில் மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அதிகாரியை ஆபாசமாக திட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    கடலூர் ரெட்டிச்சாவடி மற்றும் செல்லஞ்சேரி ஆகிய பகுதிகளில் மாட்டுவண்டிகளில் திருட்டுதனமாக மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகனுக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து செல்லஞ்சேரி கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகன் பஸ்நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மாட்டுவண்டியில் மணல் கடத்திக்கொண்டு தெய்வசிகாமணி(வயது 60) என்பவர் வந்தார். அவரிடம் கிராம நிர்வாக அதிகாரி மணல் எங்கிருந்து கொண்டு வருகிறீர்கள் என்று கேட்டார்.

    அப்போது அவர் கிராம நிர்வாக அதிகாரியை ஆபாசமாக பேசி அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாலமுருகன் ரெட்டிச்சாவடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து தெய்வசிகாமணியை கைது செய்து மணடல் கடத்திய மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.
    கோவை சோமனூர் பகுதியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கோவை சோமனூர் பவர் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 54). தொழிலாளி.

    சம்பவத்தன்று அப்பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி சக தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, அந்த வழியாக வந்த செல்வராஜ் சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார்.

    இதனால் சிறுமி அழுது கொண்டே வீட்டுக்கு சென்றார். வேலைக்கு சென்றிருந்த சிறுமியின் பெற்றோர் வீட்டுக்கு திரும்பிய போது, சிறுமியிடம் ஏன் அழுகிறாய்? என கேட்டனர். அப்போது சிறுமி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறினார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் செல்வராஜ் மீது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியை கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கைதான செல்வ ராஜூக்கு, திருமண வயதில் மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கோவில்பட்டியில் தனியார் மருத்துவனையில் பணிபுரியும் நர்ஸ் வீட்டில் நகையை கொள்ளையடித்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி மந்தி தோப்பு ரோட்டில் உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் அய்யாத்துரை. இவர் ஒரு ஜவுளிக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அங்கயர்செல்வி (வயது35). இவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று இவர்கள் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் இரவில் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்பொழுது வீட்டில் பீரோ அரிவாளால் உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் கதவு திறக்கப்படாமல் பீரோ மட்டும் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் பீரோவை திறந்து பார்த்தனர்.

    அப்போது உள்ளே இருந்த 6 பவுன் நகை கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு பகுதி போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டை ஆய்வு செய்தனர்.

    இதைத் தொடர்ந்து அருகில் உள்ள வீட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளியான கணேசன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவன் பீரோவை உடைத்து நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து நகைகளை மீட்டனர். #Tamilnews
    ×