search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Womens Day"

    • போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள வெங்களாபுரம் ஊராட்சியில் பிரீடம் பவுண்டேஷன் தொண்டு நிறுவனம் சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பிரீடம் பவுண்டேஷன் நிறுவனர் டாக்டர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு ஆழைப்பாளராக திருப்பத்தூர் முன்னாள் எம்எல்ஏ. டி. கே. ராஜா, கலந்து கொண்டு சாதனை படைத்த, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

    திருப்பத்தூர் பிரீடம் உழவர் உற்பத்தியாளர் நிறுவன முதன்மை அதிகாரி எழிலரசி உட்பட பலர் கலந்து ெகாண்டனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இறுதியில் மேலாளர் சசிகுமார் நன்றி கூறினார்.

    • மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் மகளிர் தின விழா புதுமை மற்றும் தொழல்நுட்பம் பாலின சமத்துவம் என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டது.
    • கல்லூரி இயக்குனர் மற்றும் முதல்வருமான வெங்கடாஜலபதி வரவேற்புரையாற்றினார்.

    புதுச்சேரி:

    மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் மகளிர் தின விழா புதுமை மற்றும் தொழல்நுட்பம் பாலின சமத்துவம் என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு புதுவை கெமின் கன்ட்ரோல் மற்றும் இன்ஸ்டுமென்டேசன் கம்பெனி இணை நிர்வாக இயக்குனர் ராதிகாரகு, சுகாதாரம் மற்றும் குடும்ப நல இயக்குனர், தலைமை பல் அறுவை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கவிபிரியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சி்றப்புரையாற்றினர்.

    நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி இயக்குனர் மற்றும் முதல்வருமான வெங்கடாஜலபதி வரவேற்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் அப்பாஸ் மொய்தீன், ஜெயக்குமார், அன்புமலர், அறிவழகர், வேல்முருகன், கைலாசம், முத்துலெட்சுமி, முகம்மது யாசின் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் அப்பாஸ் மொய்தீன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பயோமெடிக்கல் துறைத்தலைவி விஜயலட்சுமி செய்திருந்தார்.

    • தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
    • மகளிர் தினத்தன்று அங்குள்ள செய்தி ஊடகத்தில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அதன்பிறகு அங்கு பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட உரிமைகள் மறுக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சுமார் 75 சதவீத பெண் பத்திரிக்கையாளர்கள் தங்கள் வேலையை இழந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த டோலோ நியூஸ் என்ற செய்தி ஊடகத்தில், மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மட்டுமே பங்கேற்ற விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிகழ்ச்சியை ஊடகவியலாளர் சோனியா நியாஸி தொகுத்து வழங்கினார். இதில் பங்கேற்று பேசிய செய்தியாளர் அஸ்மா கோக்யானி, இஸ்லாம் மதத்தின் பார்வையில் பெண்கள் கல்வி பெறுவதற்கும், வேலைக்குச் செல்வதற்கும் அனைத்து உரிமைகளும் உள்ளன என்று தெரிவித்தார்.

    முன்னாள் பல்கலைக்கழக பேராசிரியர் ஸாகிரா நபில் பேசியபோது, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்த சமூகத்தில் பெண்கள் இருக்கிறார்கள். ஒரு பெண்ணால் பள்ளியில் கல்வி கற்க முடியாவிட்டால், அவள் வீட்டிலேயே கல்வி கற்றுக் கொள்வாள் என்று கூறினார்.

    சுமார் 50 நிமிடங்கள் ஒளிபரப்பான இந்த விவாத நிகழ்ச்சியில் பெண்களுக்கான உரிமைகள், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய டோலோ நியூஸ் செய்தி ஊடகத்திற்கு சமூக வலைதளங்களில் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • புதுவை சாரதா கங்காதரன் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
    • கல்லூரியின் செஞ்சுருள் சங்கமும், இளைஞர் செஞ்சிலுவை சங்கமும் இணைந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தியது.

    புதுச்சேரி:

    புதுவை சாரதா கங்காதரன் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி துணை தலைவர் பழனிராஜா தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் அணுக் அராக்கல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதனை தொடர்ந்து கல்லூரியின் செஞ்சுருள் சங்கமும், இளைஞர் செஞ்சிலுவை சங்கமும் இணைந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தியது.

    ஊர்வலத்தை முன்னாள் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் சிவராமச்சந்திரன், தமிழ்ச்செல்வி பாலகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.ஊர்வலத்தில் தன்னார்வலர், மாணவிகள் கலந்து கொண்டு வேல்ராம்பட்டு பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    விழாவில் மாணவிகளுக்கு ஆடை அலங்கார அணிவகுப்பு, நகை அலங்காரம், பூ அலங்காரம், பழங்கள், காய்கறிகளில் சிற்பம் செதுக்குதல், ரங்கோலி, மெஹந்தி, குறும்படம் மற்றும் வினாடி-வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவி கலைவாணி பெற்றார். இதில் பெண்கள் அதிகாரமளித்தல் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கீதா, துணை ஒருங்கிணைப்பாளர் செல்வதுர்கா ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் உதயசூரியன் செய்திருந்தார்.

    • விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    போளூர்:

    போளூரில் நேற்று சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு வான்முகில் மெட்ரிக் பள்ளி மாணவிகள் பொதுமக்கள் இடையே பெண்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த ஊர்வலமாக சென்றனர்.

    ஊர்வலம் போளூர் ஈஸ்வரன் கோவில் தெருவில் தொடங்கி சிந்தாரப்பேட்டை தெரு வழியாக சென்று தாசில்தார் அலுவலகத்தை அடைந்தனர்.

    நிகழ்ச்சியில் 75-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

    • மகளிர் அதிகார அமைப்பு மற்றும் கல்லூரியின் மாணவர் அமைப்பும் இணைந்து சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடினர்.
    • இந்நிகழ்ச்சியில் இசை,நடனம், கவிதை மற்றும் பேச்சுப் போட்டி நடைபெற்றது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    ஆறுபடைவீடு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஸ்கூல் ஆப் அலைடுல்த் சயின்ஸ் துறையின் மகளிர் அதிகார அமைப்பு மற்றும் கல்லூரியின் மாணவர் அமைப்பும் இணைந்து சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடினர்.

    அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில் குமார் ஆலோசனையின் படி, இயக்குநர் (பொறுப்பு) ஆண்ட்ரு ஜான் தலைமை தாங்கி வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாகூர் பேராசிரியர் அண்ணுசாமி பள்ளியின் முதல்வர் டாக்டர் நீலம் அருள்செல்வி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் இசை,நடனம், கவிதை மற்றும் பேச்சுப் போட்டி நடைபெற்றது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. முடிவில் கல்லூரியின் விரிவுரையாளர் தமிழ்செல்வன் நன்றி உரை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் 400-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்குபெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சந்துரு, கல்லூரியின் அனைத்து ஆசிரியர்கள், மாணவர் சபை மாணவ-மாணவிகள் மற்றும் நாட்டு நலப் பணித்திட்ட , சுற்றுச்சூழல் அமைப்பின் மாணவ- மாணவிகள் மற்றும் கல்லூரியின் இளைஞர் அமைப்பு மாணவ-மாணவிகள் மற்றும் நுண்கலை மாணவ-மாணவிகள் செய்திருந்தனர்.

    • உலகில் வாழும் 90% மக்கள் பாலின பாகுபாட்டை கடைபிடிக்கிறார்கள் என ஆய்வு சொல்கிறது.
    • அரசியலில் பெண்கள் பிரதிநிதித்துவமும் இந்தியாவில் மிகக்குறைவாகவே இருக்கிறது.

    பெண்களை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் நாள் சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பெண்களின் சாதனைகளை நிலைநிறுத்துவது, சவால்களை அங்கீகரிப்பது, பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.

    தற்போது அனைத்து துறைகளிலும் பெண்கள் கோலோச்சும் காலம் கனிந்து வருவது ஆரோக்கியமான விசயம். +2 தேர்வு முடிவுகளைப் பார்த்தால் பெண் பிள்ளைகளே அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். ஐ.டி கம்பெனிகளை எட்டிப் பார்த்தால் இளம்பெண்களே அதிகம் தென்படுகிறார்கள். கார்ப்ரேட் ஆஸ்பிடல்களில் பெண் டாக்டர்களே அதிகம்.

    இந்நிலையில், இப்போது யார் பாலின பாகுபாடு பார்க்கிறார்கள்? என்கிறார்கள். சமீபத்தில் ஐநா ஒரு ஆய்வு செய்தது. அதன் முடிவுகள் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. உலகில் வாழும் 90% மக்கள் (இதில் பெண்களும் சேர்த்து) பாலின பாகுபாட்டை கடைபிடிக்கிறார்கள் என அந்த ஆய்வு சொல்கிறது. இதில் அதிக அளவில் பாலின பேதத்தை கடைபிடிக்கும் நாடாக ஜிம்பாவேவையும், பாகுபாடு குறைந்த அளவில் கடைபிடிக்கும் நாடாக ஐரோப்பிய நாடான ஆண்ட்ரோராவையும் அடையாளம் கண்டுள்ளனர்.

    வேலைவாய்ப்பு, கடமையுணர்வு, தொழில்துறை அறிவு போன்றவை ஆண்களுக்கு உரித்தானது என 70% இந்திய ஆண்கள் இவ்வாய்வில் கூறியிருப்பதாக தெரிய வருகிறது.

    உலகில் 231 நாடுகள் உள்ளன. இதில் 193 நாடுகளில் 10 பெண் ஆளுமைகளே அரசியலில் பிரகாசிக்கின்றனர். நாகரிகத்தில் முன்னேறியவர்களாக கருதப்படும் அமெரிக்கர்கள், பெண்களை அரசியலுக்கு லாயக்கற்றவர்கள் என்று கருதுகின்றனர்.

    அதேவேளை கடந்த கோவிட் தொற்று காலம், இத்தகைய நிலையை சிறிது கலைத்தது.பெண் ஆட்சியாளர்களால் நிர்வகிக்கப்பட்ட நியூசிலாந்து, ஜெர்மனி, தைவான், நார்வே போன்ற நாடுகளில் கோவிட்-உயிரிழப்புகள் குறைவாக இருந்தன.

    பெண் ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, கோவிட்டுக்கு எதிராக போராடிய முன்களப் பணியாளர்கள் எனப் பாராட்டப்பட்டதில் 70% பேர் பெண் மருத்துவர்கள். 90% செவிலியர்கள் பெண்கள். 80% தூய்மைப் பணியாளர்கள் பெண்கள்.

    இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பெண்கள் தங்களை நிரூபித்து வந்திருக்கிறார்கள். அதேவேளை பெண்களுக்கெதிரான குற்றங்களும் இன்னும் குறைந்தபாடில்லை! என்பதையும் நாம் கவலையோடு பரிசீலிக்க வேண்டியுள்ளது.

    உலக அளவில் பெண்கள் வாழ பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலை, தாம்ஸன் ராய்டர்ஸ் எனும் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்டது. அந்தப் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது.

    இந்தியாவில், 4 மணி நேரத்துக்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறாள். பெண்கள் பாலியலில் தொழிலில் ஈடுபடுத்தப்படுவது, எய்ட்ஸ் நோய், பெண் சிசுக்கொலை, புறக்கணிக்கப்படுவது, பணி இடங்களில் அவமதிப்பு, என பல இன்னல்களை இந்தியாவில் பெண்கள் எதிர்கொள்கிறார்கள்.

    அதுபோல் அரசியலில் பெண்கள் பிரதிநிதித்துவமும் இந்தியாவில் மிகக்குறைவாகவே இருக்கிறது. நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் எனும் அடிப்படையில் 193 நாடுகளில் எடுக்கப்பட்ட சர்வேயில், இந்தியா 149வது இடத்தில்தான் இருக்கிறது.

    இதனால் பெண்களை பாதிக்கும் சட்டங்கள் இயற்றப்படும்போது, வலிமையாக எதிர்த்து குரலெழுப்ப முடியாத நிலை உருவாகிறது. உதாரணமாக நாப்கினுக்கு ஜிஎஸ்டி போட்டபோது பாராளுமன்றத்தில் பெரிய அளவில் எதிர்ப்பு எழவில்லை.

    இந்தியாவில் பெண்களின் நிலை முன்னேறி உள்ளது எனக் கூறுவோரும் இருக்கின்றனர். ஆனால் யதார்த்த நிலவரம் வேறு. கடந்த 10 ஆண்டுகளில் தென் மாநிலங்களில் (கேரளா விதிவிலக்கு) 10.16% பெண்குழந்தைகளின் பிறப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளது. பெண் குழந்தைகளை வளர்ப்பது, கல்வி அளிப்பது, திருமணம் செய்து கொடுப்பது சுமையென ஆணாதிக்க சமூகத்தின் பொதுப்புத்தியில் பதிந்துள்ளது.

    கிராமப்புறங்களில் நிலவும் வறுமை உள்ளிட்ட காரணங்களால் பெண் குழந்தைகளின் கற்றல் இடைநிறுத்தப்படுகிறது.பெரும்பாலான பணியிடங்களில் குறைந்த கூலிக்கே பெண்கள் அமர்த்தப்படுகிறார்கள்.

    சமீபகாலமாக சமூக வலைத்தளங்கள் வழியாக பெண்களுக்கு நெருக்கடி உருவாகியுள்ளது. காந்தி கனவு கண்டமாதிரி, இரவு நேரங்களில் பெண்கள் சுதந்திரமாக வீதியில் நடப்பது இருக்கட்டும், இணையத்தில் உலவமுடிகிறதா?

    எனவே, சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாடுவதென்பது, மானுடத்தின் சரிபாதியாக இருக்கும் பெண்களின் சுதந்திரத்தை, பாதுகாப்பை, மாண்பை, சுயமரியாதையை உறுதி செய்தவதாகும்.

    -கரிகாலன்

    • பாரம்பரிய அரிசி, சிறுதானியங்களை மதிப்பு கூட்டி தரும்போது லாபகரமாக செய்ய முடிகிறது.
    • இந்த 2023 வருடத்தை சிறுதானிய உணவுகளுக்கான வருடமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    கோவை:

    உலக மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியாக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பாக கோவை பேரூர் தமிழ்க்கல்லூரியில் இன்று (8 மார்ச்) நடந்த 'வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியமே' என்ற நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

    சிறப்பு விருந்தினராக பேரூர் ஆதீனத்தின் அருள்திரு மருதாசல அடிகளார் அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில் "பேரூர் ஆதீனம் ஈஷாவுடன் இணைந்து பல வருடங்களாக பல்வேறு செயல்களை செய்து வருகிறது. சத்குரு முன்னெடுத்துள்ள பல அற்புதமான திட்டங்களில் சிறப்பானதொரு திட்டம் இந்த மண் காப்போம். இதற்காக அவர் உலகம் முழுக்க பயணித்து கோவை திரும்பியபோது பேரூர் ஆதீனம் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மண் காப்போம் இயக்கத்தின் இந்த நிகழ்ச்சி மகளிருக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்க வழிகாட்டும் சிறப்பான நிகழ்வாக அமைந்திருக்கிறது" என்று கூறி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    திட்ட விளக்க உரை வழங்கிய மண் காப்போம் இயக்கத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா பேசுகையில், "ஈஷா மண் காப்போம் இயக்கம் கடந்த 25 வருடங்களாக மண் வள மேம்பாடு, அதன் மூலம் மனித ஆரோக்கியம், விவசாயிகள் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றிற்காக பல்வேறு செயல்கள் செய்து வருகிறது.

    பெண்களுக்கு இருக்கும் தொழில் வாய்ப்புகளை பற்றி தெரிந்துகொள்ள இந்த நிகழ்ச்சி உதவும். இது துவக்கம் தான். இதில் தங்களுக்கு திறக்கும் வாய்ப்புகள் வழியாக உங்களை வெற்றிக்கு அழைத்து செல்ல விரும்புகிறோம்" என்றார்.

    மண்வாசனை நிறுவனத்தின் மேனகா பேசுகையில், தினமும் மூன்று வேளை சமைப்பதையே பலரும் வாழ்வின் இலக்காக வைத்து ஓடிக்கொண்டே இருக்கிறோம். நாங்கள் 20 வருடங்களுக்கு முன்பு நம்மாழ்வார் அய்யா அவர்களை சந்தித்தோம். நீங்கள் சொல்வதை செய்ய விரும்புகிறோம். ஆனால் வாழ்வாதாரம் பற்றி உள்ள பயத்தை அவரிடம் சொன்னோம். அதற்கு அவர், 'உங்கள் வாழ்வாதாரத்தை இயற்கை பார்த்துக் கொள்ளும்' என்றார். அந்த ஒரு வார்த்தை எங்களை இன்று வரை நகர்த்துகிறது.

    பாரம்பரிய அரிசி, சிறுதானியங்களை நேரடியாக தரும்போது உட்கொள்ள சிரமப்படுகிறார்கள் என்பதை தெரிந்துகொண்டு, மதிப்பு கூட்டி தரும்போது லாபகரமாக செய்ய முடிகிறது.

    இந்த 2023 வருடத்தை சிறுதானிய உணவுகளுக்கான வருடமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்தளவிற்கு சிறுதானிய உணவுகளுக்கான அதிமுக்கியமான தேவை உள்ளது, என்றார்.

    அவரைத்தொடர்ந்து மாடித்தோட்ட பயிற்சியாளரும் தமிழ்நாடு பாரம்பரிய விதை சேகரிப்பு குழுவைச் சார்ந்தவருமான திருமதி. பிரியா ராஜ்நாராயணன், தேனீ வளர்ப்பில் பல்வேறு சாதனைகள் புரிந்து இந்திய மற்றும் தமிழக அளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ள ஜோஸ்பின் மேரி, நாட்டு மாடுகளை பேணிக் காத்து அதிலிருந்து நிலையான வருமானம் பெற முடியும் என்று சாதித்துக் காட்டிய முனைவர் யமுனாதேவி ஆகியோரும் பல்வேறு தொழில் வாய்ப்புகள் பற்றி சிறப்புரை ஆற்றினர்.

    மேலும் பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பாரம்பரிய உணவு பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனையும் நடைபெற்றது.

    பங்கேற்பாளர்களின் சந்தேகங்களை தீர்க்கும் விதமாக கேள்வி பதில் பகுதியும் நடந்தது. இந்த நிகழ்வில் பல்வேறு துறைகளில் சாதித்த சாதனை பெண்களுக்கு விருது வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    • பெண் குழந்தைகள் கனவு காணவும், தைரியமாகவும் வளர வேண்டும்.
    • குழந்தைகள் தன்னிச்சையாக முடிவெடுக்கும் வாய்ப்பை நாம் வழங்க வேண்டும்.

    சென்னை:

    மகளிர் தினத்தையொட்டி நடந்த கலந்துரையாடலில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசிய பேச்சு இன்று டுவிட்டரில் பதிவிடப்பட்டு உள்ளது.

    அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    ஆணுக்கு நிகர் பெண் என மகள்களுக்கு சொல்லி வளர்க்க வேண்டும்.

    இன்று வளர்ந்து வரும் நம் மகள்களிடையே நம்பிக்கையை வளர்த்து அவர்கள் ஆணுக்கு சமமான பாலினத்தவர்களாக இருப்பதற்கு தகுதியானவர்கள் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    பெண் குழந்தைகள் கனவு காணவும், தைரியமாகவும் வளர வேண்டும். அப்படி செய்யும்போது அவர்கள் தனிப்பட்ட முறையில் வளர்வது மட்டுமின்றி தங்கள் தேசத்தை வலிமையடையச் செய்கிறார்கள். உங்கள் வளர்ச்சியுடன் தேச நலனும் பின்னியுள்ளது என்பதை குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்க வேண்டும்.

    குழந்தைகள் தன்னிச்சையாக முடிவெடுக்கும் வாய்ப்பை நாம் வழங்க வேண்டும். அந்த முடிவை அடைய நாம் மட்டுமே அவர்களுக்கு வழிகாட்ட முடியும். நீங்கள் சரியாக வளரவில்லை என்றால் அது உங்களின் சொந்த இழப்பு மட்டுமல்ல. வீட்டுக்கும் நாட்டுக்கும் இழப்பு என்பதை குழந்தைகள் உணரும் வகையில் வளர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந்தேதி சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
    • பெண் இன்றி இங்கே எதுவும் நடக்காது என்பது தான் உண்மை.

    நெல்லை:

    தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. இன்று வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    உலகம் முழுவதும் உள்ள பெண்களை கவுரவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8-ந்தேதி சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

    ஆண்களுக்கு தரப்படும் மதிப்பும், மரியாதையும் எங்களுக்கும் தரப்பட வேண்டும். வேலை செய்யும் இடங்களிலும் ஆண்களுக்கு நிகரான சம்பளம் பெண் களுக்கு தரப்பட வேண்டும் என்று, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக பெண்கள் போராடியதன் தொடர்ச்சியாக உருவானது தான் உலக மகளிர் தினம்.

    அணுவின்றி எதுவும் அசையாதோ, அதேபோல் பெண் இன்றி இங்கே எதுவும் நடக்காது என்பது தான் உண்மை. சகோதரியாக, மனைவியாக, தாயாக ஒவ்வொரு குடும்பத்திலும் ஆணி வேராகத் திகழ்பவர்கள் பெண்கள்.

    ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வார்கள். இது, நூற்றுக்கு நூறு உண்மை. பெண்களால் மட்டும்தான், ஒரு மிகச்சிறந்த குடும்பத்தை கட்டமைக்க முடியும். சிறந்த குடும்பங்களின் மாண்பும் பெண்களால்தான் பெருமை கொள்கிறது.

    நாமும் இந்த தருணத்தில் பெண்களை போற்றி பெருமை கொள்வோம்.

    இவ்வாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

    • மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை, கேலோ இந்தியா, சாய் ஆகியவை இணைந்து 10 நகரங்களில் 10 விளையாட்டுகளை நாடு முழுவதும் நடத்துகிறது.
    • அதில் ஒன்றாக தமிழ்நாடு நீச்சல் சங்கத்தின் சார்பில் சென்னை முகப்பேரில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டால் பின் நீச்சல் அகாடமியில் நடக்கிறது.

    சென்னை:

    சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை, கேலோ இந்தியா, சாய் ஆகியவை இணைந்து 10 நகரங்களில் 10 விளையாட்டுகளை நாடு முழுவதும் நடத்துகிறது.

    இந்த 10 விளையாட்டுகளில் ஒன்றான நீச்சல் போட்டிகள் 10 இடங்களில் நடத்தப்படுகிறது. அதில் ஒன்றாக தமிழ்நாடு நீச்சல் சங்கத்தின் சார்பில் சென்னை முகப்பேரில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டால் பின் நீச்சல் அகாடமியில் நடக்கிறது.

    வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு போட்டி தொடங் குகிறது. 11, 14, 17, 25, 35 மற்றும் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது.

    ஓபன் பிரிவு போட்டியான இதில் பெண்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என்றும் admin@tnsaa.in என்ற இ-மெயிலில் (97915 28636) பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு நீச்சல் சங்க செயலாளர் டி.சந்திர சேகரன் தெரிவித்துள்ளார்.

    • ஓய்ஸ்மேன் பள்ளியில் சிகரம் அமைப்பு சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
    • மாணவிகளுக்கும், மகளிருக்கும் சிறப்பு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    வேல்ராம்பட்டு ஓய்ஸ்மேன் பள்ளியில் சிகரம் அமைப்பு சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு சிகரம் அமைப்பு செயலாளர் லட்சுமி மவுலி தலைமை தாங்கினார். கவிமன்ற தலைவர் கலாவிசு முன்னிலை வகித்தார். தலைவர் சந்திரமவுலி சிறப்புரையாற்றினார்.

    முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், சிகரம் தொட்ட மகளிர் விருதை பிரேம பஞ்சகாந்தி சித்ரலோக, கல்பனா ஜெயராமன், ஆனந்தி, எலிசபெத்ராணி, சுபா வைஷ்ணவி, கும்சி, அஸ்வினி, அமலாதேவி ஆகியோருக்கு வழங்கினார். டாக்டர் விஜயகுமாரி வாழ்த்தி பேசினார்.

    இதில், மாணவிகளுக்கும், மகளிருக்கும் சிறப்பு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை ஆசிரியர் காயத்ரி தொகுத்து வழங்கினார். புனிதா நன்றி கூறினார்.

    விழாவிற்க்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள், மற்றும் சிகரம் அமைப்பினர் செய்திருந்தனர்.

    ×