search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சாரதாகங்காதரன் கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம்
    X

    சாரதாகங்காதரன் கல்லூரியில் நடந்த மகளிர் தினவிழாவில் பங்கேற்ற மாணவிக்கு பரிசு வழங்கப்பட்ட காட்சி.

    சாரதாகங்காதரன் கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம்

    • புதுவை சாரதா கங்காதரன் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
    • கல்லூரியின் செஞ்சுருள் சங்கமும், இளைஞர் செஞ்சிலுவை சங்கமும் இணைந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தியது.

    புதுச்சேரி:

    புதுவை சாரதா கங்காதரன் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி துணை தலைவர் பழனிராஜா தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் அணுக் அராக்கல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதனை தொடர்ந்து கல்லூரியின் செஞ்சுருள் சங்கமும், இளைஞர் செஞ்சிலுவை சங்கமும் இணைந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தியது.

    ஊர்வலத்தை முன்னாள் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் சிவராமச்சந்திரன், தமிழ்ச்செல்வி பாலகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.ஊர்வலத்தில் தன்னார்வலர், மாணவிகள் கலந்து கொண்டு வேல்ராம்பட்டு பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    விழாவில் மாணவிகளுக்கு ஆடை அலங்கார அணிவகுப்பு, நகை அலங்காரம், பூ அலங்காரம், பழங்கள், காய்கறிகளில் சிற்பம் செதுக்குதல், ரங்கோலி, மெஹந்தி, குறும்படம் மற்றும் வினாடி-வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவி கலைவாணி பெற்றார். இதில் பெண்கள் அதிகாரமளித்தல் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கீதா, துணை ஒருங்கிணைப்பாளர் செல்வதுர்கா ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் உதயசூரியன் செய்திருந்தார்.

    Next Story
    ×