search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Welfare Scheme Assistance"

    • ராமநாதபுரத்தில் த.மு.மு.க. சார்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
    • தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிவுரையின் பேரில் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிவுரையின் பேரில் மாநில துணை பொதுச் செயலாளர் சலிமுல்லா கான் ஆலோசனையின் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் த.மு.மு.க. சார்பில் ஏழை எளிய மக்களுக்கு கல்வி, மருத்துவ சிகிச்சை மற்றும் சிறு தொழில் செய்வதற்கு நிதி உதவி அளித்து வருகின்றனர். ராமநாதபுரம் பாரதிநகர் பாலமுருகனுக்கு ரூ.10 ஆயிரம், புவனேஸ்வரனுக்கு ரூ.5 ஆயிரம், மண்டபம் பாத்திமாவிற்கு ரூ.10 ஆயிரம், ஏர்வாடி சகுபர் சாதிக் ரூ.10ஆயிரம், நாகநாதபுரம் அமீர் ரூ.5 ஆயிரம், முதுகுளத்தூர் இப்ராஹிம் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக ரூ.50 ஆயிரம், ராமநாதபுரம் நகர் பகுதி, மண்டபம் பேரூர் பகுதியில் வசிக்கும் 2 விதவைப் பெண்களுக்கு வாழ்வாதார உதவியாக ரூ.1.40 லட்சம் என மொத்தம் ரூ.2.30 லட்சத்தை மாநில துணை பொதுச் செயலாளர் சலிமுல்லாஹ்கான் வழங்கினார். இதில் மாவட்டத் தலைவர் பிரிமியர் இப்ராஹிம், நகர் தலைவர் முகம்மது அமீன், மாவட்டச் செயலாளர் அப்துல் ரஹீம், 15-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் காதர் பிச்சை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் காந்தி வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.21.5 மதிப்பீட்டில் 187 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு அதிநவீன மின்சாதனம் பொருந்திய மூன்று சக்கர வண்டி, செயற்கை கை மற்றும் கால், தேசிய அட்டை உள்ளிட்ட பல்வேறு நல திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்கள்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஜெகத்ரட்சகன் எம்.பி., ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட அலுவலர் சரவணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, ஒன்றிய குழு தலைவர் நிர்மலா சவுந்தர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அம்பிகா பாபு, மாவட்ட அலுவலர் மணிமேகலை, நகர மன்ற தலைவர் லட்சுமி, நகராட்சி ஆணையாளர் லதா, தாசில்தார் (பொ) சுமதி, ஊராட்சி ஒன்றிய அலுவலர் வெங்கடேசன், நகர் செயலாளர் வி.எல். ஜோதி, நகர மன்ற உறுப்பினர்கள் குமார், செந்தில்குமார், சாமுண்டீஸ்வரி, கே.எம்.பி.பாபு, சங்கீதா, சி.என் அன்பு, வடிவேல், கங்காதரன், நந்தாதேவி, துரை சீனிவாசன், மல்லிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடலூரில் சுதந்திர தினவிழா 65 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி கலெக்டர் வழங்கினார்.
    • மாணவ–மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    கடலூர்:

    75 - வது சுதந்திர தின விழா அமுதப் பெருவிழாவாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. மேலும் இந்தியா முழுவதும் ஒவ்வொரு வீடுகளிலும் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசு தெரிவித்திருந்தனர்.அதன்படி இந்தியா முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றி புகைப்படம் எடுத்து இணையத்தளத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். இதனை தொடர்ந்து இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் கோலாகலமாக நடந்தது. மாவட்ட நிர்வாகம் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் அண்ணா விளையாட்டு மைதானத்துக்கு வந்தார். கலெக்டருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணே சன் உடன் வந்தார். இதனை தொடர்ந்து காலை 9.05 மணிக்கு கலெக்டர் பாலசுப்ரமணியம் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.பின்னர் சமாதான புறா மற்றும் வண்ணப் பலூன்களை பறக்க விட்டார். தொடர்ந்து காவல்துறையின் அணிவகுப்பை பார்வையிட கலெக்டரை போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் திறந்த ஜீப்பில் அழைத்துச்சென்றார். அதைத்தொடர்ந்து காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் ஊர்க்காவல்படையினர், தேசிய மாணவர் படையினர், நாட்டுநலப்பணித்திட்ட மாணவ–மாணவிகள், இளஞ்செஞ்சிலுவை சங்கத்தினர் மற்றும் சாரணர் படையினர் மைதானத்தில் வரிசையாக அணிவகுத்து வந்தனர். அவர்களின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார்.அதன்பிறகு சுதந்திரபோராட்ட தியாகிகளை கலெக்டர் பாலசுப்ரமணியம் கவுரவித்தார்.

    இதனைத் தொடர்ந்து வருவாய் துறை, தோட்டக்க லைத்துறை, வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 65 பயனாளிகளுக்கு 26 லட்சத்து 75 ஆயிரத்து 892 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாலசுப்ரமணியம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறை தீயணைப்பு துறை சுகாதாரப் பணிகள் வருவாய் துறை மாநகராட்சி நகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறை சிறப்பாக பணிபுரிந்த 138 அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதன்பிறகு மாணவ–மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

    விழாவில் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுப்பையா, தாசில்தார் பூபாலச்சந்திரன் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டு நடன நிகழ்ச்சிகள், போலீஸ் அணிவகுப்பு போன்ற வற்றை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • பாப்பாபட்டியில் கிராமியத்திருவிழா நடந்தது.
    • தலைமைப்பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

     உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா பாப்பாப்பட்டி கிராமத்தில் பாரத் ஸ்டேட் வங்கியின் சார்பில் கிராமிய திருவிழா நடந்தது.

    தலைமைப்பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 95 சுய உதவி குழுக்களுக்கு ரூ.4.87 கோடி அளவில் கடன்கள் வழங்கப்பட்டன. 75 பேருக்கு கறவை மாடுகள் வாங்க கடனாக தலா ரூ.1.20 லட்சம் வீதம் ரூ.90 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. விவசாய முதலீடு சார்ந்த தவணைக்கடன் ரூ.1.36 கோடி வழங்கப்பட்டது .

    மேலும் பாப்பாப்பட்டி கிராம மேல்நிலைப்பள்ளிக்கு மாணவர்களின் உபயோகத்திற்கென 5 கணினிகள் வழங்கப்பட்டன. கிராம மக்களின் பயன்பாட்டுக்காக ஒச்சாண்டம்மன் கோவில் வளாகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் பொருத்தப்பட்டது.

    ஏறத்தாழ 20 சுற்று வட்டார கிராமங்கள் பயன்பெறு வகையில் தானியங்கி பணமெடுக்கும் எந்திரம் (ஏ.டி.எம்.) நிறுவப்பட்டது. பாரம்பரியக்கலைகளை ஊக்குவிக்கும் வகையில் கரகாட்டம், சிலம்பம் மற்றும் பறை நிகழ்ச்சிகள் நடந்தன.

    நிகழ்ச்சியில் எஸ்.பி.ஐ. மண்டல மேலாளர் மோகனபிரபு, பாப்பாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம், வாலாந்தூ ர் ஊராட்சி மன்ற தலைவர் கணபதி, வாலாந்தூர் எஸ்.பி.ஐ வங்கி மேலாளர் சின்ன பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மேல்மலையனூர் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 203 பயனாளிகளுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    • ஒன்றிய பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வருவாய் வட்டாட்சியர் கோவர்தன் அனைவரையும் வரேவேற்றார்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் தாலுக்கா வளத்தி ஊராட்சி யில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலு வலர் மகாராணி தலைமை தாங்கினார்.மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, ஒன்றிய பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வருவாய் வட்டாட்சியர் கோவர்தன் அனைவரையும் வரேவேற்றார். அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 203 பயனாளிகளுக்கு 7 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கியதோடு பொது மக்களிடம் மனுக்களை பெற்றார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், சுப்பிரமணியன், சமூக பாதுகாப்பு திட்டதாசில்தார் செல்வகுமார், மண்டல துணை வட்டாட்சியர் நாராயணமூர்த்தி, துணைசேர்மன் விஜயலட்சுமி முருகன், மாவட்ட கவுண்சிலர் செல்வி இராமசரவணன்,ஒன்றிய கவுன்சிலர் கலா நாராயணமூர்த்தி, ஷாகின் அர்ஷத், பெருமாள், சக்தி, யசோதைரை சந்திரகுப்தன், ஜெயந்திஜெயக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி ஜெய்சங்கர், துணைத்தலைவர் கோவிந்தன்,வருவாய்ஆய்வாளர்கள்சுதாகர், ஏழுமலை, தஸ்தகீர்,நிர்வாகிகள் சரவணன், எஸ்.பி.சம்பத், குமார் மணிகண்டன், கந்தவேல், தேவனூர் ஆறுமுகம், பெருவளூர் பாபு, உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×