என் மலர்
உள்ளூர் செய்திகள்

75 ஆவது சுதந்திர தினத்தையோட்டி கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சியை கலெக்டர் பாலசுப்ரமணியம் பார்வையிட்டார். அருகில் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உள்ளார்.
கடலூரில் சுதந்திர தினவிழா 65 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி - கலெக்டர் வழங்கினார்
- கடலூரில் சுதந்திர தினவிழா 65 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி கலெக்டர் வழங்கினார்.
- மாணவ–மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கடலூர்:
75 - வது சுதந்திர தின விழா அமுதப் பெருவிழாவாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. மேலும் இந்தியா முழுவதும் ஒவ்வொரு வீடுகளிலும் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசு தெரிவித்திருந்தனர்.அதன்படி இந்தியா முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றி புகைப்படம் எடுத்து இணையத்தளத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். இதனை தொடர்ந்து இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் கோலாகலமாக நடந்தது. மாவட்ட நிர்வாகம் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் அண்ணா விளையாட்டு மைதானத்துக்கு வந்தார். கலெக்டருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணே சன் உடன் வந்தார். இதனை தொடர்ந்து காலை 9.05 மணிக்கு கலெக்டர் பாலசுப்ரமணியம் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.பின்னர் சமாதான புறா மற்றும் வண்ணப் பலூன்களை பறக்க விட்டார். தொடர்ந்து காவல்துறையின் அணிவகுப்பை பார்வையிட கலெக்டரை போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் திறந்த ஜீப்பில் அழைத்துச்சென்றார். அதைத்தொடர்ந்து காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் ஊர்க்காவல்படையினர், தேசிய மாணவர் படையினர், நாட்டுநலப்பணித்திட்ட மாணவ–மாணவிகள், இளஞ்செஞ்சிலுவை சங்கத்தினர் மற்றும் சாரணர் படையினர் மைதானத்தில் வரிசையாக அணிவகுத்து வந்தனர். அவர்களின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார்.அதன்பிறகு சுதந்திரபோராட்ட தியாகிகளை கலெக்டர் பாலசுப்ரமணியம் கவுரவித்தார்.
இதனைத் தொடர்ந்து வருவாய் துறை, தோட்டக்க லைத்துறை, வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 65 பயனாளிகளுக்கு 26 லட்சத்து 75 ஆயிரத்து 892 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாலசுப்ரமணியம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறை தீயணைப்பு துறை சுகாதாரப் பணிகள் வருவாய் துறை மாநகராட்சி நகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறை சிறப்பாக பணிபுரிந்த 138 அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதன்பிறகு மாணவ–மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
விழாவில் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுப்பையா, தாசில்தார் பூபாலச்சந்திரன் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டு நடன நிகழ்ச்சிகள், போலீஸ் அணிவகுப்பு போன்ற வற்றை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.






