த.மு.மு.க. சார்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

ராமநாதபுரத்தில் த.மு.மு.க. சார்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிவுரையின் பேரில் வழங்கப்பட்டது.
த.மு.மு.க. சார்பில் நலத்திட்ட உதவி வழங்கல்
Published on

ராமநாதபுரம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிவுரையின் பேரில் மாநில துணை பொதுச் செயலாளர் சலிமுல்லா கான் ஆலோசனையின் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் த.மு.மு.க. சார்பில் ஏழை எளிய மக்களுக்கு கல்வி, மருத்துவ சிகிச்சை மற்றும் சிறு தொழில் செய்வதற்கு நிதி உதவி அளித்து வருகின்றனர். ராமநாதபுரம் பாரதிநகர் பாலமுருகனுக்கு ரூ.10 ஆயிரம், புவனேஸ்வரனுக்கு ரூ.5 ஆயிரம், மண்டபம் பாத்திமாவிற்கு ரூ.10 ஆயிரம், ஏர்வாடி சகுபர் சாதிக் ரூ.10ஆயிரம், நாகநாதபுரம் அமீர் ரூ.5 ஆயிரம், முதுகுளத்தூர் இப்ராஹிம் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக ரூ.50 ஆயிரம், ராமநாதபுரம் நகர் பகுதி, மண்டபம் பேரூர் பகுதியில் வசிக்கும் 2 விதவைப் பெண்களுக்கு வாழ்வாதார உதவியாக ரூ.1.40 லட்சம் என மொத்தம் ரூ.2.30 லட்சத்தை மாநில துணை பொதுச் செயலாளர் சலிமுல்லாஹ்கான் வழங்கினார். இதில் மாவட்டத் தலைவர் பிரிமியர் இப்ராஹிம், நகர் தலைவர் முகம்மது அமீன், மாவட்டச் செயலாளர் அப்துல் ரஹீம், 15-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் காதர் பிச்சை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com