search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "varisu"

    • விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் யோகி பாபு நடித்திருந்தார்.
    • வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோவை யோகி பாபு சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு' கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    விஜய் - யோகி பாபு

    விஜய் - யோகி பாபு

    இந்நிலையில் விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்த யோகி பாபு, படப்பிடிப்பு தளத்தில் விஜய்யுடன் எடுத்த வீடியோவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வாகனத்தை ஓட்டி செல்லும் விஜய்யின் பின்புறத்தில் அமர்ந்து யோகிபாபு ஜாலியாக பேசி கொண்டு செல்லும் இந்த வீடியோவை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

    • வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘வாரிசு’.
    • இப்படம் வெளியாகிய 11 நாட்களில் ரூ.250 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    வாரிசு

    பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு' கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    வாரிசு போஸ்டர்

    'வாரிசு' படத்தின் 'ரஞ்சிதமே', 'தீ தளபதி', 'சோல் ஆஃப் வாரிசு' போன்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று பார்வையாளர்களை குவித்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் 'தீ தளபதி' பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. வாரிசு படம் வெளியாகிய 11 நாட்களில் ரூ.250 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


    • இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் 'வாரிசு'.
    • இப்படம் ரூ.210 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    வாரிசு

    வாரிசு


    பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு' கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'வாரிசு' படம் வெளியான ஏழு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.210 கோடி வசூல் செய்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்திருந்தது.


    வாரிசு

    வாரிசு


    இந்நிலையில் வாரிசு படத்தின் புதிய வசூல் குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில், வாரிசு படம் வெளியாகிய 11 நாட்களில் ரூ.250 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் 'துணிவு' விஜய்யின் 'வாரிசு' ஆகிய திரைப்படங்கள் வெளியானது.
    • ஒரே நாளில் 2 உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் இருவரது ரசிகர்களும் உற்சாகம் அடைந்து கொண்டாடினர்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் நடித்த 'துணிவு', நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய திரைப்படங்கள் வெளியானது. ஒரே நாளில் 2 உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் இருவரது ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர். படம் வெளியான தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் கட்-அவுட், பேனர் வைத்தும், கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

    இந்நிலையில் கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி வாரிசு, துணிவு பட சிறப்புக் காட்சிகளை வெளியிட்ட 8 திரையரங்குகளுக்கு கோவை கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    • விஜய் நடிப்பில் உருவான 'வாரிசு' திரைப்படம் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
    • இப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.

    விஜய் நடிப்பில் உருவான 'வாரிசு' திரைப்படம் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் ராஷ்மிகா மந்தனா, ஷாம், பிரகாஷ்ராஜ், விடிவி கணேஷ், சரத்குமார், யோகிபாபு, எஸ்.ஜே.சூர்யா, ஜெயசுதா, கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்திருந்த இப்படத்தை தில்ராஜூ தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் மக்கள் மத்தயில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது . வாரிசு படம் ரிலீஸான 5 நாட்களில் உலக அளவில் ரூ. 150 கோடியும், 7 நாட்களில் ரூ. 210 கோடியும் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது.


    வாரிசு பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

    வாரிசு பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

    இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் 'வாரிசு' படத்தின் வெற்றி கொண்டாட்டம் எளிமையான முறையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு கேக் ஊட்டினார். இதில் விஜய்யுடன் இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு , இசையமைப்பாளர் தமன் , பாடலாசிரியரும், படத்தின் வசனகர்த்தாவான விவேக் மற்றும் நடிகர் ஷாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    • வாரிசு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படத்தின் ரஞ்சிதமே பாடல் புதிய சாதனையை படைத்துள்ளது.

    வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் 'ரஞ்சிதமே', 'தீ தளபதி', 'சோல் ஆஃப் வாரிசு' பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரிய ஹிட் அடித்தது.


    வாரிசு

    இந்நிலையில் ரஞ்சிதமே பாடல் வெளியாகி 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


    • துணிவு -வாரிசு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
    • இவ்விரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் மற்றும் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வெகு விமர்சையாக கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைப்பிரபலங்களும் இந்த இரு படங்களையும் கொண்டாடி வருகின்றனர்.


    துணிவு - வாரிசு

    இரண்டு படங்களும் உலக அளவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், துணிவு மற்றும் வாரிசு திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, துணிவு திரைப்படம் நெட்பிளிக் தளத்திலும் வாரிசு திரைப்படம் அமேசான் தளத்திலும் பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

    • மதுரை மாவட்டத்திலுள்ள 34 திரையரங்குகளுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
    • ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் 1955ன் படி திரையரங்கின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    மதுரை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11ம் தேதி விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு படங்கள் வெளியாகின.

    இந்நிலையில் 11, 12, 13 மற்றும் 18ம் தேதிகளில் காலை 9 மணிக்கு ஒரு சிறப்பு காட்சி நடத்துவதற்கு மட்டுமே அரசாணையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து 11ம் தேதியன்று நள்ளிரவு 1 மணி மற்றும் அதிகாலை 4 மணிக்கு திரைப்படங்களை திரையிட்டுள்ளதாக மதுரை மாவட்டத்தில் உள்ள 34 திரையரங்குகளுக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

    குறிப்பாணை கிடைத்த 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும், இல்லையென்றால் தமிழ்நாட்டின் திரையரங்கு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் 1955ன் படி திரையரங்கின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

    • இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் 'வாரிசு'.
    • இப்படம் ரூ.210 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

     

    வாரிசு

    வாரிசு


    பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு' கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'வாரிசு' படம் வெளியான ஏழு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.210 கோடி வசூல் செய்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்திருந்தது.


    திருப்பூர் சுப்ரமணியன் 

    திருப்பூர் சுப்ரமணியன் 

    இந்நிலையில் வாரிசு படத்தின் வசூல் குறித்து விநியோகஸ்தர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அவர் கூறியதாவது, படத்தின் வசூல் என்ன என்பது முழுமையாக தெரிய இன்னும் சில நாட்கள் ஆகும். தமிழ ரிலீஸ் உரிமையை ஒருவரும், ஓவர் சீஸ் உரிமையை மற்றொருவரும் பெற்றனர். வாரிசு வசூல் ரூ.210 கோடி என்பது 200% வாய்ப்பில்லாத ஒன்று என்றார். 

    • விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படம் வெளியான ஏழு நாட்களில் ரூ.210 கோடி வசூல் செய்துள்ளது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    வாரிசு

    பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு' கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'வாரிசு' திரைப்படம் வெளியான ஏழு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.210 கோடி வசூல் செய்துள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது.

    ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடிய சரத்குமார்

    இப்படத்தில் விவேக் வரிகளில் விஜய் மற்றும் மானசி பாடிய 'ரஞ்சிதமே' பாடல் தற்போது வரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து யூ டியூபில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில், 'ரஞ்சிதமே' பாடலுக்கு நடிகர் சரத்குமார் குத்தாட்டம் போட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • துணிவு - வாரிசு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி வெளியானது.
    • ரசிகர்கள் இந்த இரு படங்களையும் கொண்டாடி வருகின்றனர்.

    இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் மற்றும் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் வெகு விமர்சையாக கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைப்பிரபலங்களும் இந்த இரு படங்களையும் கொண்டாடி வருகின்றனர்.


    துணிவு - வாரிசு

    இதைத்தொடர்ந்து அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.


    லோகேஷ் கனகராஜ் - விக்னேஷ் சிவன்

    இந்நிலையில், ஏகே 62, தளபதி 67 படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த இரண்டு படங்களும் இந்த வருடம் தீபாவளியன்று மீண்டும் மோதவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் ‘வாரிசு’.
    • இப்படத்தின் புதிய வசூல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

     

    வாரிசு

    வாரிசு


    பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு' கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'வாரிசு' படம் வெளியான ஐந்து நாட்களில் உலகம் முழுவதும் ரூ.150 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.


    வாரிசு

    வாரிசு

    இந்நிலையில் இப்படத்தின் புதிய வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வெளியான ஏழு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.210 கோடி வசூல் செய்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். 

    ×