search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ரஞ்சிதமே பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சரத்குமார்.. வைரலாகும் வீடியோ..
    X

    சரத்குமார்

    'ரஞ்சிதமே' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சரத்குமார்.. வைரலாகும் வீடியோ..

    • விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படம் வெளியான ஏழு நாட்களில் ரூ.210 கோடி வசூல் செய்துள்ளது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    வாரிசு

    பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு' கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'வாரிசு' திரைப்படம் வெளியான ஏழு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.210 கோடி வசூல் செய்துள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது.

    ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடிய சரத்குமார்

    இப்படத்தில் விவேக் வரிகளில் விஜய் மற்றும் மானசி பாடிய 'ரஞ்சிதமே' பாடல் தற்போது வரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து யூ டியூபில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில், 'ரஞ்சிதமே' பாடலுக்கு நடிகர் சரத்குமார் குத்தாட்டம் போட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×