என் மலர்

    நீங்கள் தேடியது "ak 62"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • துணிவு - வாரிசு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி வெளியானது.
    • ரசிகர்கள் இந்த இரு படங்களையும் கொண்டாடி வருகின்றனர்.

    இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் மற்றும் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் வெகு விமர்சையாக கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைப்பிரபலங்களும் இந்த இரு படங்களையும் கொண்டாடி வருகின்றனர்.


    துணிவு - வாரிசு

    இதைத்தொடர்ந்து அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.


    லோகேஷ் கனகராஜ் - விக்னேஷ் சிவன்

    இந்நிலையில், ஏகே 62, தளபதி 67 படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த இரண்டு படங்களும் இந்த வருடம் தீபாவளியன்று மீண்டும் மோதவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார்.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    விக்னேஷ் சிவன் - அஜித்

    இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.


    சந்தானம் - அரவிந்த் சாமி

    இந்நிலையில், ஏகே 62 படத்தில் அஜித்துக்கு வில்லனாக அரவிந்த சாமி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நடிகர் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கயிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
    • இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார்.


    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.


    துணிவு

    இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.


    விக்னேஷ் சிவன் -அஜித்- அனிருத்

    இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில், ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரியில் தொடங்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ×