ஏகே 62 படப்பிடிப்பு எப்போது..? வெளியான தகவல்..

அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார்.
அஜித்
அஜித்
Published on

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.

துணிவு

இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

விக்னேஷ் சிவன் -அஜித்- அனிருத்

இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில், ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரியில் தொடங்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com