ஏகே 62: அஜித்துக்கு வில்லன் இவரா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார்.
அஜித்
அஜித்
Published on

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

விக்னேஷ் சிவன் - அஜித்

இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

சந்தானம் - அரவிந்த் சாமி

இந்நிலையில், ஏகே 62 படத்தில் அஜித்துக்கு வில்லனாக அரவிந்த சாமி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நடிகர் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கயிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com