search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "us open tennis"

    • காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் டியாபோ, ரஷியாவின் ரூப்லெவ் உடன் மோதினார்.
    • இதில் டியாபோ 7-6 (7-3), 7-6 (7-0), 6-4 என்ற செட் கணக்கில் வென்றார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன.

    இதில், ஆஸ்திரேலியா வீரர் நிக் கிர்கியோஸ், ரஷிய வீரர் கரென் கச்சனோவுடன் மோதினார். இந்த போட்டியில் கச்சனோவ், 7-5, 4-6, 7-5, 6-7 (3-7), 6-4 என்ற செட் கணக்கில் கிர்கியோசை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதி போட்டியில் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோ, ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ் உடன் மோதினார். இதில் டியாபோ 7-6 (7-3), 7-6 (7-0), 6-4 என்ற செட் கணக்கில் ரூப்லெவ்வை வீழ்த்தி வெற்று பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

    மற்றொரு காலிறுதியில், ஸ்பெயினின் அல்காரஸ் கார்பியா, இத்தாலி வீரர் ஜானிக் சின்னருடன் மோதினார். இதில் கார்பியா 6-3, 6-7, 6-7, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதியில் நுழைந்தார்.

    மேலும் ஒரு காலிறுதியில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த மேட்டியோ பெரெட்டினி, நார்வேயின் காஸ்பர் ரூட் ஆகியோர் மோதினர். இதில் பெரெட்டினியை 6-1, 6-4, 7-6 என்ற நேர் செட்களில் வென்று ரூட் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • பெகுலா 4-வது தடவையாக கிராண்ட்சிலாமில் கால் இறுதியில் தோல்வியை தழுவினார்.
    • கால்இறுதி ஆட்டத்தில் 6-வது வரிசையில் இருக்கும் அர்யனா ஷபலென்கா ( பெலாரஸ்)-கரோலினா பிளிஸ்கோவா ( செக் குடியரசு ) மோதினார்கள்.

    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) கால் இறுதியில் அமெரிக்காவை சேர்ந்த 8-வது வரிசையில் உள்ள ஜெசிகா பெகுலாவை எதிர் கொண்டார்.

    இதில் இகா 6-3, 7-6 (7-4) என்ற நேர்செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். நடப்பு பிரெஞ்சு ஓபன் சாம்பியனான அவர் முதல்முறையாக அமெரிக்க ஓபனில் அரை இறுதிக்கு தகுதி பெற்று உள்ளார்.

    பெகுலா 4-வது தடவையாக கிராண்ட்சிலாமில் கால் இறுதியில் தோல்வியை தழுவினார். இந்த முறையும் அவரது முதல் அரையிறுதி கனவு கலைந்தது.

    மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் 6-வது வரிசையில் இருக்கும் அர்யனா ஷபலென்கா ( பெலாரஸ்)-கரோலினா பிளிஸ்கோவா ( செக் குடியரசு ) மோதினார்கள்.

    இதில் ஷபலென்கா 6-1, 7-6 (7-4) என்ற நேர் செட் கணக்கில் 22-ம் நிலை வீராங்கனையான பிளிஸ்கோவாவை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் தொடர்ச்சியாக 2-வது முறையாக அமெரிக்க ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

    நாளை நடைபெறும் அரை இறுதி ஆட்டங்களில் ஒன்ஸ் ஜாபியுர் (துனிசியா)-கரோலின் கார்சியா (பிரான்ஸ்) , இகாஸ்வியா டெக்-ஷபலென்கா மோதுகிறார்கள்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 9-வது வரிசையில் உள்ள ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா)-பிரான்செஸ் டியாபோ (அமெரிக்கா) மோதினார்கள்.

    இதில் டியாபோ 7-6 (7-3), 7-6, (7-0), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். 22-வது வரிசையில் உள்ள அவர் 4-வது சுற்றில் முன்னணி வீரரான ரபெல் நடாலை வீழ்த்தி இருந்தார். தற்போது ருப்லெவை தோற்கடித்து உள்ளார்.

    டியாபோ முதல் முறையாக கிராண்ட்சிலாம் அரை இறுதிக்கு முன்னேறி இருக்கிறார். இதற்கு முன்பு 2019-ல் ஆஸ்திரேலிய ஓபனில் கால் இறுதி வரை நுழைந்ததே சிறந்ததாக இருந்தது. ரூப்லெவின் முதல் அரை இறுதி கனவு தகர்ந்தது. அவர் 6-வது தடவையாக கிராண்ட்சிலாம் கால் இறுதியில் தோற்றுள்ளார்.

    டியாபோ அரை இறுதியில் அல்காரஸ் (ஸ்பெயின்) அல்லது சின்னரை (இத்தாலி) சந்திக்கிறார்.

    • டியாபோ 6-4 , 4-6 , 6-4 , 6-3 என்ற செட் கணக்கில் நடாலை வீழ்த்தி முதல் முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார்.
    • இகா ஸ்வியாடேக், பிளிஸ்கோவா கால் இறுதிக்கு முன்னேற்றினர்.

    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    22 கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற சாதனையாளரும், உலகின் இரண்டாம் நிலை வீரருமான ரபெல் நடால் ( ஸ்பெயின் ) 4-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த 22-ம் நிலை வீரரான பிரான்செஸ்டியாபோவை எதிர் கொண்டார்.

    இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் நடால் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார். டியாபோ 6-4 , 4-6 , 6-4 , 6-3 என்ற செட் கணக்கில் நடாலை வீழ்த்தி முதல் முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். டியாபோ கால்இறுதி ஆட்டத்தில் ரஷியாவை சேர்ந்த ஆந்த்ரே ருப்லெவை சந்திக்கிறார்.

    9-வது வரிசையில் உள்ள அவர் 6-4 , 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் 7-ம் நிலை வீரரான கேமரூன் நோரியை (இங்கிலாந்து) எளிதில் வென்றார். மற்றொரு ஆட்டத்தில் சின்னா (இத்தாலி) வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து ) 4-வது சுற்றில் ஜெர்மனியை சேர்ந்த ஜிலி நீமெயரை சந்தித்தார். இகா 2-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    ஸ்வியாடெக் கால் இறுதியில் 8-வது வரிசையில் இருக்கும் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவை எதிர் கொள்கிறார். பெகுலா 4-வது சுற்றில் 6-3, 6-2 என்ற கணக்கில் 21-வது வரிசை யில் இருக்கும் பெட்ரா கிவிட்டோவை (குரேஷியா) தோற்கடித்தார்.

    பிளிஸ்கோவா - இகா ஸ்வியாடேக்

    பிளிஸ்கோவா - இகா ஸ்வியாடேக்

    மற்றொரு ஆட்டத்தில் 6-ம் நிலை வீராங்கனையான ஷபலென்கா (பெலாரஸ்) 3-6, 6-3, 6-2 என்ற கணக்கில் டேனிலி கோலின்சை (அமெரிக்கா) தோற்கடித்தார்.

    இன்னொரு போட்டியில் 22-வது வரிசையில் உள்ள கரோலின் பிளிஸ்கோவா (செக் குடியரசு) 7-5, 6-7, (5-7), 6-2 என்ற கணக்கில் அசரென்சாவை (பெலாரஸ்) வீழ்த்தினார்.

    கால் இறுதி ஆட்டத்தில் ஷபலென்கா-பிளிஸ்கோவா மோதுகின்றனர். 

    • நடால் 4-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த 22-ம் நிலை வீரரான பிரான்செஸ் டியாபோவை சந்திக்கிறார்.
    • 14-வது வரிசையில் உள்ள டியாகோ சுவார்ட்ஸ மேன் ( அர்ஜென்டினா ) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    22 கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற சாதனனயாளரும் , உலகின் இரண்டாம் நிலை வீரருமான ரபெல் நடால் ( ஸ்பெயின் ) 3-வது சுற்று ஆட்டத்தில் பிரான்சை சேர்ந்த ரிச்சர்ட் கேஸ்குயிட்டை எதிர் கொண்டார்.

    இதில் நடால் 6-0 , 6-1, 7-5 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.கேஸ்குயிட்டுக்கு எதிரான 18 ஆட்டத்திலும் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

    நடால் 4-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த 22-ம் நிலை வீரரான பிரான்செஸ் டியாபோவை சந்திக்கிறார்.

    3-ம் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 6-3 , 6-3, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரர் ஜென்சனை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் 7-வது வரிசையில் உள்ள கேமரூன் நோரி (இங்கிலாந்து), 9-ம் நிலை வீரரான ரூபலேவ் (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    14-வது வரிசையில் உள்ள டியாகோ சுவார்ட்ஸ மேன் ( அர்ஜென்டினா ) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) 3-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த லாரன் டோவிசை எதிர்கொண்டார். இதில் இகா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்னொரு ஆட்டத்தில் 9-வது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா 6-2 , 6-7 (6-8), 6-0 என்ற நேர் செட் கணக்கில் யூவானை (சீனா) வீழ்த்தினார்.

    மற்ற ஆட்டங்களில் முன்னணி வீராங்கனைகளான ஷபலென்கா, அசரென்கா (பெலாரஸ்), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

    9-வது வரிசையில் உள்ள கார்பன் முகுருஜா (ஸ்பெயின்) 7-5, 3-6, 6-7 (10-12) என்ற கணக்கில் பெட்ரோ கிவிட்டோவிடம் (செக்குடியரசு) தோற்றார்.

    இதேபோல் 13-வது வரிசையில் உள்ள பெலிண்டா பென்சிக்கும் (கனடா) அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    • முதல் செட்டை நடால் 2-6 என்ற கணக்கில் நடால் இழந்தார்.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் (போலந்து) 2-வது சுற்றில் ஸ்டெப்ஹென்சை எதிர்கொண்டார்.

    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளவரும், 22 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 2-வது சுற்றில் இத்தாலியை சேர்ந்த பேபியோ போக்னியை எதிர் கொண்டார்.

    இதன் முதல் செட்டை நடால் 2-6 என்ற கணக்கில் இழந்தார். அதன் பின்னர் அவர் சுதாரித்து விளையாடி தொடர்ந்து 3 செட்களில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஸ்கோர் 2-6, 6-4, 6-2, 6-1.

    மற்ற ஆட்டங்களில் 3-வது வரிசையில் உள்ள கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), 11-ம் நிலை வீரரான சின்னர் (இத்தாலி), ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    17-வது வரிசையில் இருக்கும் டிமிட்ரோவ் (பல்கேரியா), போர்னா கோரிக் (குரோஷியா) ஆகியோர் அதிர்ச்சிகரமாக தோற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) 2-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த ஸ்டெப்ஹென்சை எதிர் கொண்டார். இதில் இகா 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்னொரு ஆட்டத்தில் 9-வது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா 6-4 , 6-4 என்ற நேர் செட் கணக்கில் அலியா சாண்ட்ராவை ( பெலாரஸ்) வீழ்த்தினார்.

    மற்ற ஆட்டங்களில் 6-வது இடத்தில் உள்ள ஷபலென்கா (பெலாரஸ்) 9-வது வரிசையில் உள்ள முகுருஜா (ஸ்பெயின்), 19-ம் நிலை வீராங்கனையான டேனிலி கோலின்ஸ் ( அமெரிக்கா ) , 21-வது வரிசையில் உள்ள பெட்ரோ கிவிட்டோவா ( செக் குடியரசு ) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    4-வது வரிசையில் உள்ள பவுலா படோசா (ஸ்பெயின்) 7-6, (7-5), 1-6, 2-6 என்ற கணக்கில் பெட்ரோ மேட்ரிக்கிடம் (குரோஷியா) அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    • 4-வது வரிசையில் உள்ள சிட்சிபாஸ் (கிரீஸ்) முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.
    • ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீமும் முதல் சுற்றில் வெளியேறினார்.

    நியூயார்க்:

    ஆண்டின் கடைசி கிராண்ட்சிலாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது.

    உலகின் முதல் நிலை வீரரான டேனில் மெட்வதேவ் தொடக்க சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த ஸ்டெயின் கோசலவை எதிர்கொண்டார். இதில் ரஷிய வீரர் மெட்வதேவ் 6-2, 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்ற முதல் சுற்று ஆட்டங்களில் 5-வது வரிசையில் உள்ள கேஸ்பர் ரூட் (நார்வே) 10-ம் நிலை வீரரான டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), 6-வது வரிசையில் உள்ள அகுஜர் அலிஸ்மி (கனடா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    4-வது வரிசையில் உள்ள சிட்சிபாஸ் (கிரீஸ்) முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.

    கொலம்பியாவை சேர்ந்த டேனியல் காலன் 6-0, 6-1, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் சிட்சிபாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். காலன் தகுதி சுற்றில் வென்று முன்னேறியவர் ஆவார்.

    இதேபோல ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீமும் முதல் சுற்றில் வெளியேறினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற வீரான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) தொடக்க சுற்றில் மான்டினீக்ரோ நாட்டு வீராங்கனை கோவினிச்சை எதிர்கொண்டார். இதில் செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    2-வது வரிசையில் உள்ள அன்ட் கோனடாவிட் (எஸ்டோனியா), 23-வது வரிசையில் உள்ள கிரஜ்கோவா (செக்குடியரசு) லைலா பெர்னாண்டஸ் (கனடா), 5-வது வரிசையில் இருக்கும். ஜபேஷா (துனிசியா) ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

    • முன்னாள் சாம்பியன் ஸ்பெயினின் ரபெல் நடால், ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகட்டாவை எதிர்கொள்கிறார்.
    • அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், முதல் சுற்றில் டன்கா கோவினிச்சை சந்திக்கிறார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிசில் பங்கேற்கும் வீரர்- வீராங்கனைகளின் மோதல் அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல்நிலை வீரர் டேனில் மெட்விடேவ் (ரஷியா), ஸ்டீபன் கோஸ்லோவை (அமெரிக்கா) சந்திக்கிறார். முன்னாள் சாம்பியன் ஸ்பெயினின் ரபெல் நடால், ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகட்டாவை எதிர்கொள்கிறார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 'நம்பர் ஒன்' வீராங்கனை போலந்தின் ஸ்வியாடெக் தனது சவாலை ஜாஸ்மின் பாவ்லினியுடன் (இத்தாலி) தொடங்குகிறார்.

    இந்த போட்டியுடன் டென்னிசில் இருந்து விடைபெற திட்டமிட்டுள்ள முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், முதல் சுற்றில் டன்கா கோவினிச்சை (மான்ட்னெக்ரோ) சந்திக்கிறார்.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்று ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ், நடால் ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். #USOpenTennis
    நியூயார்க்:

    கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கி நடந்து வருகிறது.

    2-ம் நாளான இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்-லினென்டே (போலந்து) மோதினர். இதில் செரீனா வில்லியம்ஸ் 6-4, 6-0 என்ற நேர் செய் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு அமெரிக்க வீராங்கனை ஸ்டெப்னஸ் 6-1, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ரோடினாவை (ரஷியா) வீழ்த்தினார்.

    இதே போல் வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), பிளஸ்கோவா (செக்குடியரசு), சபரோவா (செக்குடியரசு) ஜார்ஜர்ஸ் (ஜெர்மனி) செவஸ்டோவா (லாத்வியா), முகுருஜா (ஸ்பெயின்), மகரோவா (ரஷியா), பார்டி (இங்கிலாந்து) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    போலாந்து வீராங்கனை ரட்வன்ஸ்கா முதல் சுற்றில் ஜெர்மனியின் மரியாவிடம் 3-6, 3-6 என்ற செய் தளத்தில் தோல்வி அடைந்தார்.

    இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நம்பர் ஒன்று வீரரான ரபேல் நடால் (ஸ்பெயின்) சக நாட்டு வீரர் டேவிட் பெகுருடன் மோதினார். முதல் செட்டை நடால் 6-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். 2-வது செட்டில் பெரர் 4-3 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். அப்போது பெரர் உடல் நலகுறைவு காரணமாக விலகினார். இதையடுத்து நடால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா 6-3, 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் டிமிட்ரோவை வீழ்த்தினார். ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) இஸ்னர் (அமெரிக்கா), ரோனிக் (கனடா) சீமோன் (பிரான்ஸ்) டெல்பேர்ட்ரோ (அர்ஜென்டினா), ஆண்டர் சன் (தென் ஆப்பிரிக்கா) ஷாபோவலோவ் (கனடா), ஜான்சன் (அமெரிக்கா) டோமினிக் தீம் (ஆஸ்திரியா) ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர். #USOpenTennis
    இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நாளை தொடங்குகிறது. #USOpen
    நியூயார்க்:

    ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓவன் ஆகிய 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும்.

    இந்த ஆண்டில் இதுவரை 3 கிராண்ட்சிலாம் போட்டி முடிந்துவிட்டது. அதன்படி ஆஸ்திரேலிய ஓபனில் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), வோஸ்னியாக்கி (டென்மார்க்), ஆகியோரும், பிரெஞ்ச் ஓபனில் ராபெல் நடால் (ஸ்பெயின்), ஹிமோனா ஹெஸ் (ருமேனியா) ஆகியோரும், விம்பிள்டனில் ஜோகோவிச் (செர்பியா), செல்பர் (ஜெர்மனி) ஆகியோரும் சாம்பியன் பட்டம் பெற்றனர்.

    இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நாளை (27-ந்தேதி) தொடங்குகிறது. செப்டம்பர் 9-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.


    நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான ரபெல் நடால், இரண்டாம் நிலை வீரரான ரோஜர் பெடரர், டெலபோட்ரோ (அர்ஜென்டினா), ஜிவரேவ் (ஜெர்மனி), கெவன் ஆண்டர்சன், ஜோகோவிச், சிலிச் (குரோஷியா) போன்ற முன்னணி வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    நடால் அமெரிக்க ஓபன் பட்டத்தை தக்க வைத்து 18-வது கிராண்ட்சிலாம் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார். அவருக்கு பெடரர் சவாலாக இருப்பார். பெடரர் 20 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று சாதனை புரிந்துள்ளார்.

    இதேபோல விம்பிள்டன் சாம்பியன் ஜோகோவிச், டெல்போட்ரோ, ஆண்டர்சன் ஆகியோரும் பட்டம் வெல்லும் வாய்ப்பில் உள்ளனர்.

    பெண்கள் பிரிவில் ஷிமோனா ஹெலப், வோஸ்னியார்கி, நடப்பு சாம்பியன் (அமெரிக்கா), கெர்பர் குவிட்டோவா (செக் குடியரசு) போன்ற முன்னணி வீராங்கணைகள் பங்கேற்கிறார்கள். #USOpen
    ×