search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க ஓபன் டென்னிஸ்- செரீனா, நடால் 2-வது சுற்றுக்கு தகுதி
    X

    அமெரிக்க ஓபன் டென்னிஸ்- செரீனா, நடால் 2-வது சுற்றுக்கு தகுதி

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்று ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ், நடால் ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். #USOpenTennis
    நியூயார்க்:

    கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கி நடந்து வருகிறது.

    2-ம் நாளான இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்-லினென்டே (போலந்து) மோதினர். இதில் செரீனா வில்லியம்ஸ் 6-4, 6-0 என்ற நேர் செய் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு அமெரிக்க வீராங்கனை ஸ்டெப்னஸ் 6-1, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ரோடினாவை (ரஷியா) வீழ்த்தினார்.

    இதே போல் வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), பிளஸ்கோவா (செக்குடியரசு), சபரோவா (செக்குடியரசு) ஜார்ஜர்ஸ் (ஜெர்மனி) செவஸ்டோவா (லாத்வியா), முகுருஜா (ஸ்பெயின்), மகரோவா (ரஷியா), பார்டி (இங்கிலாந்து) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    போலாந்து வீராங்கனை ரட்வன்ஸ்கா முதல் சுற்றில் ஜெர்மனியின் மரியாவிடம் 3-6, 3-6 என்ற செய் தளத்தில் தோல்வி அடைந்தார்.

    இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நம்பர் ஒன்று வீரரான ரபேல் நடால் (ஸ்பெயின்) சக நாட்டு வீரர் டேவிட் பெகுருடன் மோதினார். முதல் செட்டை நடால் 6-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். 2-வது செட்டில் பெரர் 4-3 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். அப்போது பெரர் உடல் நலகுறைவு காரணமாக விலகினார். இதையடுத்து நடால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா 6-3, 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் டிமிட்ரோவை வீழ்த்தினார். ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) இஸ்னர் (அமெரிக்கா), ரோனிக் (கனடா) சீமோன் (பிரான்ஸ்) டெல்பேர்ட்ரோ (அர்ஜென்டினா), ஆண்டர் சன் (தென் ஆப்பிரிக்கா) ஷாபோவலோவ் (கனடா), ஜான்சன் (அமெரிக்கா) டோமினிக் தீம் (ஆஸ்திரியா) ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர். #USOpenTennis
    Next Story
    ×