search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tunnel"

    • கண்டமங்கலம் ெரயில்வே கேட் அருகில் மேம்பாலத்துடன் கூடிய சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
    • பொதுமக்கள் ஆத்திர மடைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் வழியாக நாகப் பட்டினம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கண்டமங்கலம் ெரயில்வே கேட் அருகில் மேம்பாலத்துடன் கூடிய சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்கு 2 புறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்படும் நிலையில் 4 வழி சாலையை 2 பகுதிகளிலும் இரும்பு பைப்புகளால் அடைத்து வருகின்றனர். இதனால் இந்த பகுதியை பொது மக்கள் கடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதிக்கு செல்வதற்கு சுரங்க வழி பாதை அமைக்ககோரி கண்டமங்கலம் பகுதி பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் சக்திவேல் கண்டமங்கலம் பகுதி முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் கண்டமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் அரசு நிர்ணயித்த அளவுகோல் அடிப்ப டையிலேயே சாலை அமைக்கப்படுகிறது. அதனால் இந்த பகுதிக்கு சுரங்கப்பாதை வழி அமைக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் ஆத்திர மடைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சுரங்க பாதை அமைக்கப்படவில்லை என்றால் தொடர் போரா ட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். இதனை அடுத்து கண்டமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலை மையிலான போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    • பா.ஜ.க.வினர் வலியுறுத்தல்
    • நிர்வாகிகள் பலர் இருந்தனர்

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ெரயில் நிலையத்தில் ெரயில்வே அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள, ெரயில் பயணிகளுக்கான வசதிகள் குறித்த ஆய்வுக் குழுவின், அகில இந்திய ெரயில்வே பயணிகள் வசதி மேம்பாட்டு குழு தலைவர் பி.கே கிருஷ்ணதாஸ் நேற்று திடீரென ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது, ெரயில் நிலையங்களில் பயணிகள் காத்திருப்பு அறை, ரயில்வே பிளாட்பாரம், குடிநீர் குழாய்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்து நேரில் பார்வையிட்டார்.

    வாணியம்பாடி ெரயில் நிலையத்தில் ஆய்வு செய்த கிருஷ்ணதாசிடம், வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை இல்லாத காரணத்தினால், நியூடவுன், நேதாஜிநகர், பெருமாள்பேட்டை உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக வாணியம்பாடி நோக்கி வருகின்ற பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகவதாகவும், குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

    மேலும், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் நிரந்தர ஊனம் ஏற்படுகிறது. எனவே, அந்த பகுதியில் ஏற்கனவே துவங்கி நிறுத்தப்பட்டுள்ள ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை மீண்டும் துவங்க வேண்டும் எனவும் ஜோலையார்பேட்டை பகுதியில் மூடப்பட்ட ரயில்வே பள்ளியான கேந்திர வித்யாலயா பள்ளியை, வாணியம்பாடி பகுதியில் ெரயில்வேக்கு சொந்தமான இடத்தில் துவங்கி அங்கு அனைத்து மாணவர்களும் படிக்க வழிவகை செய்ய வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியினர் கோரிக்கை அளித்தனர்.

    இந்த ஆய்வின்போது, வாணியம்பாடி ரயில் நிலைய மேலாளர் சேகர், ரயில்வே துறை உயர் அதிகாரிகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • கிராமப் பகுதியை சேர்ந்தவர்கள் இந்த பாதையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
    • தண்ணீர் தேங்கி நின்று நீர் தேக்கம் போல் காணப்படும் .

    உடுமலை:

    உடுமலை தளி ரோட்டில் மேம்பாலம் அமைந்துள்ளது. ெரயில் வரும் நேரங்களில் மாற்றுப் பாதையாக இந்த சுரங்கப் பாதையை இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் பள்ளி மற்றும் வணிக வளாகங்கள் மருத்துவமனை அமைந்துள்ளன. தெற்கு பகுதிக்கு செல்லும் கிராமப் பகுதியை சேர்ந்தவர்கள் இந்த பாதையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

    மழைக்காலங்களில் இந்த சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கி நின்று நீர் தேக்கம் போல் காணப்படும் .தற்போது தண்ணீர் உள்ள பகுதிகள் குண்டும் குழியுமாக மாறி உள்ளதால் வாகன ஓட்டிகள் குண்டும் குழியில் வாகனத்தை ஓட்டி தடுமாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சுரங்க பாதையை சீரமைத்து வாகன ஓட்டிகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பயணிகள் எளிதாக சாலையை கடப்பதற்காக சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு புதிதாக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை திறக்கப்பட்டது. #ChennaiCentral #MetroRailwayStation
    சென்னை:

    சென்னை சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்துக்கு கடந்த மே 25-ந் தேதியில் இருந்து மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்துவரும் பயணிகள் பூந்தமல்லி சாலையை எளிதாக கடப்பதற்காக சென்டிரல்-மெட்ரோ ரெயில் நிலையம் இடையே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வந்தது.

    இந்த சுரங்கப்பாதை நேற்று முதல் பயணிகளுக்காக திறந்துவிடப்பட்டது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

    இந்த சுரங்கப்பாதையில் இரண்டு பகுதிகளிலும் 2 நகரும் படிக்கட்டுகளும், 2 படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டு உள்ளன. மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக இரண்டு பகுதிகளிலும் லிப்டுகள் 3 மாதத்தில் அமைக்கப்படும்.

    இதன்மூலம் சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தை அடைய 2 நுழைவு வாயில்கள் அமைந்துள்ளன. மேலும் 3 வாயில்கள் அமைக்கப்பட்டு வருகிறது. 5 நுழைவு வாயில்களும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.

    பாரிமுனையில் ராஜாஅண்ணாமலை மன்றத்தில் இருந்து பிராட்வே சிக்னல் செல்லும் சாலையும், ஐகோர்ட்டு முன்பு உள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையும் மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்து வருவதால் தற்போது மீண்டும் இருவழி பாதையாக்கப்பட்டு உள்ளது.

    டி.எம்.எஸ். - வண்ணாரப்பேட்டை இடையே 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் முடிவடைந்த உடன் அண்ணா சாலையிலும் முழுமையாக இருவழிப்பாதையில் போக்குவரத்து தொடங்கப்படும்.

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் ரெயில் நிலையங்களில் உள்ள பூங்காக்களுக்கும், கழிப்பறைகளுக்கும் பயன்படுத்தும் திட்டமும் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×