search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்டிரல்"

    பயணிகள் எளிதாக சாலையை கடப்பதற்காக சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு புதிதாக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை திறக்கப்பட்டது. #ChennaiCentral #MetroRailwayStation
    சென்னை:

    சென்னை சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்துக்கு கடந்த மே 25-ந் தேதியில் இருந்து மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்துவரும் பயணிகள் பூந்தமல்லி சாலையை எளிதாக கடப்பதற்காக சென்டிரல்-மெட்ரோ ரெயில் நிலையம் இடையே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வந்தது.

    இந்த சுரங்கப்பாதை நேற்று முதல் பயணிகளுக்காக திறந்துவிடப்பட்டது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

    இந்த சுரங்கப்பாதையில் இரண்டு பகுதிகளிலும் 2 நகரும் படிக்கட்டுகளும், 2 படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டு உள்ளன. மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக இரண்டு பகுதிகளிலும் லிப்டுகள் 3 மாதத்தில் அமைக்கப்படும்.

    இதன்மூலம் சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தை அடைய 2 நுழைவு வாயில்கள் அமைந்துள்ளன. மேலும் 3 வாயில்கள் அமைக்கப்பட்டு வருகிறது. 5 நுழைவு வாயில்களும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.

    பாரிமுனையில் ராஜாஅண்ணாமலை மன்றத்தில் இருந்து பிராட்வே சிக்னல் செல்லும் சாலையும், ஐகோர்ட்டு முன்பு உள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையும் மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்து வருவதால் தற்போது மீண்டும் இருவழி பாதையாக்கப்பட்டு உள்ளது.

    டி.எம்.எஸ். - வண்ணாரப்பேட்டை இடையே 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் முடிவடைந்த உடன் அண்ணா சாலையிலும் முழுமையாக இருவழிப்பாதையில் போக்குவரத்து தொடங்கப்படும்.

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் ரெயில் நிலையங்களில் உள்ள பூங்காக்களுக்கும், கழிப்பறைகளுக்கும் பயன்படுத்தும் திட்டமும் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    சென்னையில் மெட்ரோ ரெயில் சேவைக்காக சென்டிரல் ரெயில் நிலையம் எதிரில் 100 அடி ஆழத்தில் பிரமாண்டமான ரெயில் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் சேவைக்காக சென்டிரல் ரெயில் நிலையம் எதிரில் 100 அடி ஆழத்தில் பிரமாண்டமான ரெயில் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.

    சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் மற்றும் ரிப்பன் கட்டிடம் எதிரில் பூந்தமல்லி சாலையில் மெட்ரோ ரெயில் சேவைக்காக பிரமாண்டமான முறையில் 2 அடுக்குகளுடன் சுரங்கத்தில் ரெயில் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. முதல் வழித்தடமான வண்ணாரப்பேட்டை- விமான நிலையம் மற்றும் 2-வது வழித்தடமான சென்டிரல்- பரங்கிமலை இடையே உள்ள 2 வழித்தடங்களில் இருந்து வரும் ரெயில்களை நிறுத்துவதற்காக சென்டிரலில் 2 அடுக்குகளில் ரெயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. தரை தளத்தில் இருந்து 60 அடி ஆழம் மற்றும் 100 அடி ஆழத்தில் இந்த 2 ரெயில் நிலையங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அமைக்கப்பட்டு வருகின்றன.

    இதில் 60 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள ரெயில் நிலைய கட்டுமானப்பணிகள் முழுவதும் நிறைவடைந்து ரெயில் போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த ரெயில் நிலையத்துக்கு தற்போது சென்டிரலில் இருந்து விமான நிலையம் வரை பணிகள் நிறைவடைந்த பாதையில் இருந்து வரும் ரெயில்கள் வந்து செல்கின்றன. சென்டிரல்- வண்ணாரப்பேட்டை இடையே பணிகள் நடந்து வருகிறது.

    ஏ.ஜி-டி.எம்.எஸ்- ஆயிரம் விளக்கு- எல்.ஐ.சி.- அரசினர் தோட்டம் வழியாக சென்டிரல் வரும் பாதையில் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் இந்த ஆண்டு இறுதியில் நிறைவடைந்த உடன் சென்டிரல் ரெயில் நிலையத்தில் 100 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள ரெயில் நிலையத்துக்கு ரெயில்கள் வர இருக்கிறது. இந்த ரெயில் நிலையத்தில் தரையில் கற்கள் பதிக்கும் பணி, அலங்கார விளக்குகள், பயணிகளுக்கான வசதிகள் செய்யும் பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது. இது சென்னையில் உள்ள சுரங்க ரெயில் நிலையங்களிலேயே மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்டு உள்ளது.

    சென்டிரல் சுரங்க ரெயில் நிலையத்தில் இருந்து தெற்கு ரெயில்வே தலைமையகம், பூங்கா மற்றும் பூங்கா டவுன் ரெயில் நிலையங்கள், ரிப்பன் கட்டிடம், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு செல்லும் வகையில் பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    சென்டிரல், பூங்கா மற்றும் பூங்கா டவுன் ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து வரும் பயணிகளும் சுரங்க ரெயில் நிலையத்தை எளிதாக சென்றடைய முடியும். இந்த ரெயில் நிலையங்களில் 1 லட்சம் பயணிகள் வரை கையாளும் வசதி உள்ளது. அத்துடன் 500 கார்கள் மற்றும் ஆயிரம் இருசக்கர வாகனங்களுக்கான நிறுத்தும் இடமும் அமைக்கப்பட்டு வருகிறது. விமான நிலையத்துக்கு செல்லும் பயணிகளுக்காக தனியாக விமான நிலையத்தில் இருக்கும் நடைமுறைகளை (செக்-இன்) செயல்படுத்தும் மையம் போன்ற வசதியும் அமைக்கப்பட்டு வருகிறது.

    சுரங்க ரெயில் நிலையத்துக்கு மேலே டவுன் பஸ்கள் நிறுத்தமும் அமைக்கப்பட்டு வருகிறது. மின்சக்தி மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்குவதற்கு துணை மின் நிலையம் மற்றும் பூங்காவும் அமைக்கப்பட்டு வருகிறது.

    ரெயில் நிலையத்தில் உணவு கூடங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன், டிக்கெட் விற்பனைக்காக 14 டிக்கெட் கவுண்ட்டர்கள், 15 லிப்டுகள், நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    லண்டன், நியூயார்க், சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் ஐரோப்பா நாடுகளில் உள்ள மெட்ரோ ரெயில் நிலைய வசதிகளை பார்வையிட்டு அதே போன்று சென்டிரல் ரெயில் நிலையத்திலும் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு இறுதியில் 100 அடி ஆழத்தில் உள்ள பிரமாண்டமான ரெயில் நிலையத்தில் இருந்து போக்குவரத்து தொடங்கப்படும் என மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். 
    சென்டிரல் ரெயில் நிலையம் வரை மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடக்க விழாவை வருகிற 25-ந்தேதி நடத்துவதற்கான தீவிர ஆலோசனையில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
    சென்னை:

    சென்னையில் நடந்துவரும் மெட்ரோ ரெயில் பணிகளை பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் ஆய்வு செய்தார். சின்னமலை-டி.எம்.எஸ். (தேனாம்பேட்டை) இடையே பாதுகாப்பு ஆணையர் மெட்ரோ ரெயிலை 80 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை செய்தார். கடந்த 20-ந்தேதி ஆய்வுப்பணியை முடித்து கொண்டு பாதுகாப்பு ஆணையர் பெங்களூரு திரும்பினார்.

    பாதுகாப்பு ஆணையர் பயணிகள் ரெயிலை முறைப்படி இயக்குவதற்கான ஆய்வு அறிக்கையை ஓரிரு நாட்களில் சமர்ப்பிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

    நேரு பூங்கா-சென்டிரல் மற்றும் சின்னமலை-டி.எம்.எஸ். இடையேயான மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடக்க விழா வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். எழும்பூரில் விழா ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை மந்திரி (தனிப்பொறுப்பு) ஹர்தீப் சிங் பூரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். 
    ×