search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்டமங்கலத்தில்  சுரங்க பாதை அமைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    கண்டமங்கலத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்த போது எடுத்த படம்.

    கண்டமங்கலத்தில் சுரங்க பாதை அமைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

    • கண்டமங்கலம் ெரயில்வே கேட் அருகில் மேம்பாலத்துடன் கூடிய சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
    • பொதுமக்கள் ஆத்திர மடைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் வழியாக நாகப் பட்டினம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கண்டமங்கலம் ெரயில்வே கேட் அருகில் மேம்பாலத்துடன் கூடிய சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்கு 2 புறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்படும் நிலையில் 4 வழி சாலையை 2 பகுதிகளிலும் இரும்பு பைப்புகளால் அடைத்து வருகின்றனர். இதனால் இந்த பகுதியை பொது மக்கள் கடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதிக்கு செல்வதற்கு சுரங்க வழி பாதை அமைக்ககோரி கண்டமங்கலம் பகுதி பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் சக்திவேல் கண்டமங்கலம் பகுதி முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் கண்டமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் அரசு நிர்ணயித்த அளவுகோல் அடிப்ப டையிலேயே சாலை அமைக்கப்படுகிறது. அதனால் இந்த பகுதிக்கு சுரங்கப்பாதை வழி அமைக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் ஆத்திர மடைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சுரங்க பாதை அமைக்கப்படவில்லை என்றால் தொடர் போரா ட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். இதனை அடுத்து கண்டமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலை மையிலான போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    Next Story
    ×