search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trophy"

    ஐபிஎல் கோப்பையை வீராட் கோலி வெல்லவில்லை என்று கவுதம் காம்பீர் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதற்கு கோலி தக்க பதிலடி கொடுத்துள்ளார். #kohli #Gambhircomment

    சென்னை:

    இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சமீபத்தில் அளித்த பேட்டியின்போது இந்திய அணி கேப்டன் வீராட்கோலியை விமர்சனம் செய்து இருந்தார்.

    அவர் கூறும்போது, கோலி ஐ.பி.எல். கோப்பையை வெல்ல வில்லை. ஆனால் அவர் பெங்களூர் அணி கேப்டனாக நீடிப்பது அதிர்ஷ்டம் தான். இதற்காக அவர் அணி நிர்வாகத்துக்கு நன்றி கடன்பட்டுள்ளார் என்று கூறி இருந்தார்.

    இந்த நிலையில் காம்பீர் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வீராட்கோலி அளித்த பேட்டி வருமாறு:-

    ஐ.பி.எல். கோப்பையை வெல்லவில்லை என்பது எனக்கு ஏதோ வெறுப்பை தருகிறது என்று கூறுவது தவறு. நிச்சயம் ஐ.பி.எல். கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே விருப்பம். நான் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறேனோ அதை செய்கிறேன்.

    ஐ.பி.எல். கோப்பையை வெல்வது அல்லது வெல்வதில்லை என்பதை வைத்து என்னை எடைபோட்டால் அதுபற்றி கவலையில்லை. அளவு கோல்களை யாரும் நிர்ணயிக்க முடியாது.

    எனது வேலை சிறப்பாக ஆடுவது தான். எல்லா கோப்பைகளையும் வெல்ல வேண்டும் என்று ஆசை தான். ஆனால் பல நேரங்களில் அது நடப்பதில்லை.


    நாங்கள் ஏன் வெல்லவில்லை என்பதை எதார்த்தமாக யோசித்து பார்க்க வேண்டும். எனக்கு கேப்டன் என்ற பொறுப்பு உள்ளது. ஐ.பி.எல். கோப்பையை வெல்வது எனக்கு பிடித்தமானது தான். அதை சாதிக்க இந்த விமர்சனங்கள் உதவினால் நல்லது.

    நாங்கள் 5 அரை இறுதி ஆட்டங்களில் விளையாடி உள்ளோம். நாங்களும் கோப்பைக்கு அருகில் வந்துள்ளோம். கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணி தான். நல்ல முடிவுகளை எடுத்தால் அதனை தாண்டியும் செல்லலாம் என்றார். #kohli #Gambhircomment

    ‘புரோ கைப்பந்து லீக் போட்டியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது’ என்று அந்த அணியின் கேப்டன் ஷெல்டன் மோசஸ் நம்பிக்கை தெரிவித்தார். #ProVolleyballLeague
    சென்னை:

    முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி வருகிற 2-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை கொச்சி மற்றும் சென்னையில் நடைபெறுகிறது. இதில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், மும்பா வாலி (மும்பை), கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், ஆமதாபாத் டிபென்டர்ஸ், ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியிலும் உள்நாட்டு வீரர்களுடன் 2 வெளிநாட்டினரும் இடம் பெறுவார்கள்.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். பிப்ரவரி 2-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை லீக் ஆட்டங்கள் கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கிலும், பிப்ரவரி 16-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 3 லீக் ஆட்டம் மற்றும் அரையிறுதி, இறுதிப்போட்டி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கிலும் அரங்கேறுகிறது. தினசரி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி 1, சோனி 2 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    ஒவ்வொரு ஆட்டமும் 5 செட்கள் கொண்டதாகும். முதலில் 15 புள்ளியை எட்டும் அணி செட்டை வெல்லும். 5-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெறும் அணிக்கு மொத்தம் 3 வெற்றி புள்ளிகள் கிடைக்கும். தோல்வி அடையும் அணிக்கு புள்ளி எதுவும் கிடைக்காது. 3-2 மற்றும் 4-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெறும் அணிக்கு 2 வெற்றி புள்ளிகள் மட்டுமே கிட்டும்.

    புரோ கைப்பந்து லீக் போட்டிக்கான சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி கடந்த 12-ந் தேதி முதல் ஐ.சி.எப். உள்விளையாட்டு அரங்கில் தீவிர பயிற்சி எடுத்து வருகிறது. போட்டி குறித்து சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷெல்டன் மோசஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    புரோ கைப்பந்து லீக் போட்டி முதல்முறையாக நடைபெறுகிறது. போகப்போக இந்த போட்டி மக்களை நிச்சயம் வெகுவாக கவரும். இந்த போட்டியின் மூலம் பல இளைஞர்கள் கைப்பந்து ஆட்டத்தில் ஈடுபட முற்படுவார்கள். இதுபோன்ற போட்டிகளில் பண பலன் கிடைப்பதால் பெற்றோரும் தங்கள் குழந்தைகளை கைப்பந்து ஆட்டத்தில் களம் இறக்க ஆர்வம் காட்டுவார்கள். வெளிநாட்டு வீரர்களுடன் இணைந்து ஆடுவதன் மூலம் நமது வீரர்கள் நல்ல ஆட்ட அனுபவத்தை பெற முடியும். இதன் மூலம் இந்திய கைப்பந்து அணியின் தரம் உயரும். இது இந்திய அணி சர்வதேச போட்டிகளில் வெற்றி வாகை சூட வழிவகுக்கும். போட்டி முழுவதும் டெலிவிஷனில் ஒளிபரப்பப்படுவதால் வீரர்கள் பிரபலம் அடைவதுடன் அவர்களின் வாழ்க்கை ஸ்டைலும் மாறும்.

    போட்டியில் பல விதிமுறை மாற்றம் செய்து இருப்பதன் மூலம் இந்த லீக் போட்டி 20 ஓவர் கிரிக்கெட் போல் விறுவிறுப்பாக இருக்கும். போட்டியில் பங்கேற்கும் 6 அணிகளும் சமபலம் வாய்ந்தவை தான். எனவே போட்டி தினத்தில் எந்த அணி சிறப்பாக செயல்படுகிறதோ? அந்த அணி வெற்றி பெறும். சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணியில் நவின் ராஜா ஜேக்கப், ஒலிம்பிக் போட்டியில் ஆடிய கனடாவை சேர்ந்த ரூடி, லாத்வியாவை சேர்ந்த ருஸ்லான் மற்றும் கபில்தேவ், அக்கின் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். செர்வ், அட்டாக்கிங் உள்பட எல்லா துறைகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். எனவே இந்த போட்டியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு ஷெல்டன் மோசஸ் கூறினார். #ProVolleyballLeague
    ‘இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி மீண்டும் கோப்பையை வெல்லும்’ என்று பயிற்சியாளர் ஜான் கிரிகோரி தெரிவித்தார். #ChennaiyinFC #JohnGregory
    பானாஜி:

    10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கொல்கத்தாவில் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டி தொடரில் கொல்கத்தா அணி 2014, 2016-ம் ஆண்டுகளிலும், சென்னையின் எப்.சி. அணி 2015, 2017-ம் ஆண்டுகளிலும் கோப்பையை உச்சி முகர்ந்துள்ளன. இரு அணிகளும் 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றன. மலேசியாவில் முதல் கட்ட பயிற்சி முகாமை முடித்த சென்னையின் எப்.சி. அணி தற்போது கோவாவில் பயிற்சி பெற்று வருகிறது.

    இந்த நிலையில் சென்னையின் எப்.சி. அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான் கிரிகோரி (இங்கிலாந்து) அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்த போட்டி தொடரில் எந்தவொரு அணியும் தொடர்ச்சியாக கோப்பையை வென்றது கிடையாது என்பது எனக்கு தெரியும். ஆனால் நான் சென்னை அணியின் பயிற்சியாளர் ஒப்பந்தத்தை புதுப்பித்ததன் நோக்கமே மீண்டும் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பது தான். தொடர்ச்சியாக கோப்பையை வென்ற முதல் அணி சென்னையின் எப்.சி. என்ற பெருமையை பெற வேண்டும் என்று நினைக்கிறேன்.

    இங்கிலாந்தை சேர்ந்த மான்செஸ்டர் யுனைடெட்ஸ் அணியின் பயிற்சியாளர் அலெக்ஸ் பெர்குசன் தனது உதவி பயிற்சியாளர்களை மாற்றி புதிய யுக்திகளை புகுத்தி அணியை வெற்றிகரமாக செயல்பட வைப்பார். அந்த பாணியை தான் நானும் கடைப்பிடித்து வருகிறேன். அதன்படி சென்னை அணியின் உதவி பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். புதிய உதவி பயிற்சியாளர்களாக பால் குரோவ்ஸ், கெவின் கிச்ஹாக் (கோல் கீப்பிங்) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒரே வகையான உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் சலிப்பு ஏற்பட்டு விடும். அதேபோல் தான் ஒரே உதவி பயிற்சியாளர்களை தொடர்ச்சியாக பயன்படுத்துவதும். புதிய உதவி பயிற்சியாளர்களை சேர்ப்பதன் மூலம் புதிய யோசனைகள் கிட்டும். அந்த மாதிரியான மாற்றத்தின் மூலம் தான் கடந்த ஆண்டு நாங்கள் கோப்பையை வென்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ChennaiyinFC #JohnGregory

    ×