search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Train accident"

    • தண்டவாள பகுதியில் செல்போனில் பேசியபடி நடந்து வந்ததால் கொச்சுவேலி பயணிகள் ரெயில் வந்ததை ஐஸ்வர்யா கவனிக்கவில்லை.
    • சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரணியல்:

    இரணியல்-பள்ளியாடிக்கு இடைப்பட்ட ரெயில்வே தண்டவாள பகுதியில் இளம்பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு கிடப்பதாக நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால் தலைமையிலான ரெயில்வே போலீசார் விரைந்து சென்று ரெயிலில் அடிபட்டு இறந்தவர் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், மேக்கோடு பழவந்தான் கோணம் அய்யாதுரை மகள் ஐஸ்வர்யா (வயது 19) என்பது தெரியவந்தது.

    இவர் நேற்று மாலை தண்டவாள பகுதியில் நடந்து வரும்போது செல்போனில் பேசி கொண்டு வந்ததாகவும், இதனால் அவர் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வந்த கொச்சுவேலி பயணிகள் ரெயில் வந்ததை கவனிக்கவில்லை. இதனால் அந்த ரெயிலில் எதிர்பாராதவிதமாக ஐஸ்வர்யா அடிபட்டு இறந்தது தெரியவந்தது.

    பலியான ஐஸ்வர்யா சுங்கான்கடை அருகே களியங்காட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்ததும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஐஸ்வர்யா உடலை மீட்டு ரெயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தவறி விழுந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஈரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (வயது 55). இவர் சென்னையில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வருகிறார்.

    இவர் ஈரோடுக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து நேற்று மாலை ரெயில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

    ரெயில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்ச குப்பம் அருகே வரும்போது திடீரென ரெயிலில் இருந்து தவறி விழுந்தார்.

    இதில் ராஜீவ் காந்தி ரெயிலில் சிக்கி கால் துண்டானது. படுகாயம் அடைந்து அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
    • மின்சார ரெயில் தடம் புரண்டதில் ரெயிலின் ஒரு பெட்டி மட்டும் கடுமையாக சேதமடைந்துள்ளது.

    டெல்லியல் உள்ள ஜி 20 மாநாடு பிரகதி மைதானத்தில் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், பைரோன் மார்க் பகுதி அருகே ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

    ஹரியானா மாநிலம் பல்வாலில் இருந்து புதுடெல்லி ரெயில் நிலையம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

    இதையடுத்து, ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், ரெயில் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின்சார ரெயில் தடம் புரண்டதில் ரெயிலின் ஒரு பெட்டி மட்டும் கடுமையாக சேதமடைந்துள்ளது.

    • ஈரோடு ரெயில் நிலையத்தின் முதல் நடைமேடை மற்றும் 2-வது நடைமேடையில் தண்டவாளம் மாற்றுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
    • ரெயில் மோதி ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு:

    ஆந்திரா மாநிலம் விஜயநகரம் பகுதியை சேர்ந்தவர் அப்பால ராஜூ (33). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் அப்பால ராஜூக்கு ஈரோடு ரெயில் நிலையத்தில் பாயிண்ட்ஸ் மேனாக வேலை கிடைத்து உள்ளது. 2 மாத பயிற்சியை முடித்து கொண்டு கடந்த ஒரு மாதமாக ஈரோடு ரெயில் நிலையத்தில் பணியாற்றி வந்தார். கொல்லம்பாளையம் பகுதியில் வீடு எடுத்து தங்கி வேலை பார்த்து வந்தார்.

    இன்று காலை 5.15 மணி அளவில் ஈரோடு ரெயில் நிலையத்தின் முதல் நடைமேடை மற்றும் 2-வது நடைமேடையில் தண்டவாளம் மாற்றுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது இருபுறமும் சரக்கு ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த சமயத்தில் அப்பால ராஜூ எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி தண்டவாளத்தில் விழுந்தார். அந்த நேரத்தில் தண்டவாளத்தில் வந்த சரக்கு ரெயில் அவர் மீது மோதியது.

    இதில் உடல் துண்டாகி அப்பால ராஜூ சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அப்பால ராஜூ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் மோதி ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • உடல் சிதறி அடையாளம் தெரியாத வகையில் கிடந்தது

    ஜோலார்பேட்டை:

    காட்பாடி அடுத்த லத்தேரி- காவனூர் ரெயில் நிலையங்க ளுக்கு இடையே சுமார் 40 வயது மதிக்கத்தக்கவர் காட்பாடி ஜோலார்பேட்டை நோக்கி செல்லும் மார்க்கத்தில் ரெயி லில் பயணம் செய்தவர் தவறி விழுந்து இறந்து கிடந்தார். அவரது உடல் சிதறி அடை யாளம் தெரியாத வகையில் கிடந்தது.

    தகவல் அறிந்த ஜோலார் பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் மாநிறம் உடைய வர். இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து ஜோலார் பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு மருத்துவமனையில் சிகிச்சை
    • ரெயில்வே போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    சென்னை சென்டிரலில் இருந்து மங்களூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் - செஞ்சி பனப்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு இடையே வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயிலில் பயணம் செய்ததிருப்பூர் பகுதியை சேர்ந்த நந்தகுமார் (வயது 28) என்பவர் ரெயில் பெட்டியில் இருந்து தவறி விழுந்தார்.

    இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், செந்தில் குமார் தலைமையிலான போலீசார், கை மற்றும் கால்களில் பலத்த காயமடைந்து இருந்த நந்தகுமாரை மீட்டு சிகிச்சைக் காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    வேலூர் மாவட்டம் லத்தேரி காட்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 40 வயதுதக்க ஆண் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அப்போது க சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிப்பட்டு தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இறந்தவர் கருப்பு கலர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என போலிசார் விசாரணை செய்து வருகின்றனர் இறந்தவரின் முகம் முழுவதும் சிதைந்த இருப்பதால் இறந்தவரை அடையாளம் காண்பதில் போலிசாருக்கு சவாலாக உள்ளது.

    • தாய்லாந்தில் லாரிமீது சரக்கு ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது.
    • இந்தக் கோர விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    பாங்காக்:

    தாய்லாந்து நாட்டின் சஷொன்சொ மாகாணம் முவாங் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 3 மணியளவில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியில் தொழிலாளர்கள் பலர் பயணித்தனர்.

    அந்த லாரி ரெயில்வே தண்டவாளத்தைக் கடக்க முற்பட்டபோது, வேகமாக வந்த சரக்கு ரெயில் லாரிமீது மோதியது. இந்தக் கோர விபத்தில் 3 பெண்கள், 5 ஆண்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வின்சென்டின் திருமணம் கிறிஸ்தவ ஆலயத்தில் வருகிற 17-ந்தேதி நடக்க இருந்தது.
    • பெற்றோர் உடல் நலம் பாதித்தவர்கள் என்பதால், உறவினர்களுக்கு திருமண பத்திரிகைகளை, வின்சென்ட் நேரில் சென்று கொடுத்து வந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா அருகே உள்ள அஞ்சுதெங்கு பகுதியை சேர்ந்த சிரில்-புஷ்பத்தா தம்பதியரின் மகன் வின்சென்ட் சிரில்(வயது36). மீனவரான இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவரது திருமணம் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் வருகிற 17-ந்தேதி நடக்க இருந்தது.

    வின்சென்டின் பெற்றோர் உடல் நலம் பாதித்தவர்கள் என்பதால், உறவினர்களுக்கு திருமண பத்திரிகைகளை, அவரே நேரில் சென்று கொடுத்து வந்தார். அதன்படி கொல்லத்துக்கு சென்றிருந்தார். அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றிருக்கிறார். அப்போது அந்த வழியாக வந்த எர்நாடு எக்ஸ்பிரஸ், வின்சென்ட் மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். திருமணம் நடக்க சில நாட்களே உள்ள நிலையில், வின்சென்ட் ரெயில் மோதி பலியான சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    • பலத்த காயம் அடைந்த செல்சியா சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • செல்சியாவின் தோழி யாழினிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    தாம்பரம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், புத்தர் தெருவை சேர்ந்தவர் யாழினி (வயது23).

    இவர் நெருங்கிய தோழியான காரைக்குடியை சேர்ந்த செல்சியா (23) என்பவருடன் ஊரப்பாக்கத்தில் உள்ள ஒரு உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார்.

    நேற்று மாலை தோழிகள் இருவரும் தி.நகரில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்க மின்சார ரெயிலில் செல்ல திட்டமிட்டனர். இதைத்தொடர்ந்து இருவரும் ஊரப்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு நடந்து வந்து கொண்டு இருந்தனர்.

    ரெயில் நிலையம் அருகே தண்டவாளம் ஓரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தபோது, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரெயில் தோழிகள் யாழினி, செல்சியா மீது மோதியது. இதில் அவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்ட னர்.

    இதில் பலத்த காயம் அடைந்த செல்சியா சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தோழி யாழினிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்குள்ள ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    தண்டவாளம் அருகே தோழிகள் இருவரும் பேசிக்கொண்டு நடந்து வந்தபோது மின்சார ரெயில் வருவதை கவனிக்காமல் சென்றதால் அவர்கள் விபத்தில் சிக்கி இருப்பது தெரிந் தது.

    இதுகுறித்து தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • யார் என அடையாளம் தெரியவில்லை
    • பல்வேறு கோணங்களில் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    குடியாத்தம் அடுத்த மேல்பட்டி ரெயில் நிலையம் அருகில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் காட்பாடி- ஜோலார்பேட்டை செல்லும் மார்க்கத்தில் ஏதோ ஒரு ரெயில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார் வாலிபர் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து யார் அவர் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது தவறி விழுந்து இறந்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்டவாளத்தை கடந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    சென்னையிலிருந்து கோவை நோக்கி நேற்று பிற்பகல் வந்தே பாரத்ரெயில் புறப்பட்டு காட்பாடியை நோக்கி வந்து கொண்டிருந்தது.

    வாலாஜாவை கடந்து முகுந்தராயபுரம் நோக்கி வந்தபோது மாலை 3.40 மணியளவில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபர் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.

    அப்போது அதிவேகமாக வந்த வந்தே பாரத் ரெயிலில் அடிபட்டு அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த காட்பாடி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டனர்.

    அவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×