என் மலர்
நீங்கள் தேடியது "ரெயில் விபத்து"
- தடம் புரண்ட அந்த ரெயில் பக்கத்து தண்டவாளத்தில் வந்த மற்றொரு ரெயிலின் மீது பயங்கரமாக மோதியது.
- ரெயில்கள் மோதிய விபத்தில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர்
ஜனவரி 18 ஆம் தேதி ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட் நோக்கிச் சென்று கொண்டிருந்த அதிவேக ரெயில, தெற்கு அண்டலூசியாவில் உள்ள அடமுஸ் அருகே திடீரென தடம் புரண்டது.
தடம் புரண்ட அந்த ரெயில் பக்கத்து தண்டவாளத்தில் வந்த மற்றொரு ரெயிலின் மீது பயங்கரமாக மோதியது. இதில் இரண்டு ரெயில்களுமே பலத்த சேதமடைந்தன.
இந்த விபத்தில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 72 பேர் காயமடைந்துள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், ஸ்பெயினின் பார்சிலோனா அருகே மற்றொரு பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் ரெயில் ஓட்டுநர் உயிரிழந்தார். ஏராளமான பயணிகள் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
- மாலகா மற்றும் மாட்ரிட் இடையே 300 பயணிகள் பயணித்த ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
- ரெயில் தடம் புரண்ட விபத்தில் படுகாயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
ஸ்பெயினின் கார்டோபா மாகாணத்தில் மலகா அருகே தனியார் நிறுவனத்தின் அதிவிரைவு ரெயில் ஒன்று தடம் புரண்டு மற்றொரு ரெயில் மீது மோதியதில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மாலகா மற்றும் மாட்ரிட் இடையே 300 பயணிகள் பயணித்த ரெயில் நேற்று இரவு 7:45 மணியளவில் கோர்டோபா அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அப்போது தடம் புரண்ட ரெயில் மீது மாட்ரிட்டிலிருந்து தெற்கு ஸ்பெயின் நகரமான ஹுயல்வாவுக்கு சுமார் 200 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த மற்றொரு ரெயில் மோதியது.
ரெயில் தடம் புரண்ட விபத்தில் படுகாயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- ராட்சத கிரேன் ஒன்று திடீரென்று சரிந்து ரெயில் மீது விழுந்தது.
- கிரேன் விழுந்த வேகத்தில் ரெயில் பெட்டிகள் நொறுங்கின.
பாங்காங்:
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வடகிழக்கில் உள்ள உபோன் ராட்சதானி மாகாணத்திற்கு ரெயில் சென்று கொண்டிருந்தது. அதில் 195 பேர் பயணம் செய்தனர்.
அந்த ரெயில் நக்கோன் ராட்சசிமா மாகாணம் சிக்கியோ மாவட்டத்தில் விபத்தில் சிக்கியது. உயர்த்தப்பட்ட அதிவேக ரெயில் பாதை அமைக்கும் பணிக்காகப் பயன்படுத்தப்பட்ட ராட்சத கிரேன் ஒன்று திடீரென்று சரிந்து ரெயில் மீது விழுந்தது.
இதில் ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தன. கிரேன் விழுந்த வேகத்தில் ரெயில் பெட்டிகள் நொறுங்கின. மேலும் ரெயில் தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்து மீட்புக்குழு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டது.
இந்த விபத்தில் 22 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், ரெயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
- கிரேன் விழுந்த வேகத்தில் ரெயில் பெட்டிகள் நொறுங்கின.
- ரெயிலுக்குள் சிக்கியவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து நாட்டின் வடகிழக்கில் உள்ள உபோன் ராட்சதானி மாகாணத்திற்கு ரெயில் சென்று கொண்டிருந்தது. அதில் 195 பேர் பயணம் செய்தனர்.
அந்த ரெயில் நக்கோன் ராட்சசிமா மாகாணம் சிக்கியோ மாவட்டத்தில் விபத்தில் சிக்கியது. உயர்த்தப்பட்ட அதிவேக ரெயில் பாதை அமைக்கும் பணிக்காகப் பயன்படுத்தப்பட்ட ராட்சத கிரேன் ஒன்று திடீரென்று சரிந்து ரெயில் மீது விழுந்தது.
இதில் ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தன. கிரேன் விழுந்த வேகத்தில் ரெயில் பெட்டிகள் நொறுங்கின. மேலும் ரெயில் தீப்பிடித்து எரிந்தது.
உடனே மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ரெயிலுக்குள் சிக்கியவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் 22 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ரெயிலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டுவிட்டது என்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் போலீசார் தெரிவித்தனர்.
தாய்லாந்தின் பாங்காக்கை லாவோஸ் வழியாக சீனாவின் குன்மிங்குடன் இணைக்கும் அதிவேக ரெயில் திட்டத்தின் ஒரு பகுதியாக சிக்கியோ மாவட்டத்தில் கட்டுமான பணி நடந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. இத்திட்டம் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் கீழ் செயல்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- சுமார் 241 பயணிகள் ரெயிலில் சென்றுகொண்டிருந்தனர்.
- பசிபிக் பெருங்கடலையும் மெக்சிகோ வளைகுடாவையும் இணைக்கும் ரெயில் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மெக்சிகோவில் நேற்று ரெயில் தடம் புரண்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பசிபிக் பெருங்கடலையும் மெக்சிகோ வளைகுடாவையும் இணைக்கும் இன்டர்-ஓசியானிக் ரெயில் சுமார் 241 பயணிகள் மற்றும் ஒன்பது பணியாளர்களுடன் சென்றுகொண்டிருந்தது.
அப்போது ஓக்ஸாகா மற்றும் வெராக்ரூஸ் எல்லையில் உள்ள நிஜண்டா நகருக்கு அருகே தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும், 98 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பசிபிக் பெருங்கடலையும் மெக்சிகோ வளைகுடாவையும் இணைக்கும் ரெயில் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.
- கணவன், மனைவி இருவரும் ரெயிலின் வாசல் அருகே நின்று கொண்டு பயணம் செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், பார்வதிபுரம் மன்யம் மாவட்டம், கருகுபில்லி அடுத்த ராவ் பள்ளியை சேர்ந்தவர் சிம்மாசலம் (வயது 25). இவரது மனைவி பவானி (19). இருவரும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
சிம்மாசலம் உள்ள ஜகத்கிரி குட்டாவில் தங்கியிருந்து ரசாயன தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு விஜயவாடாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக செகந்திராபாத்தில் இருந்து மச்சிலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினர்.
கணவன், மனைவி இருவரும் ரெயிலின் வாசல் அருகே நின்று கொண்டு பயணம் செய்தனர். ரெயில் புவனகிரி அடுத்த வாங்க பள்ளி ரெயில் நிலையத்தை கடந்து சென்றது.
அப்போது எதிர்பாராத விதமாக கணவன், மனைவி இருவரும் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரெயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
- மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இ
தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தின் தலைநகரான குன்மிங் நகரில் ரெயில் மோதி 11 பேர் உயிரிழந்தனர்.
குன்மிங்கில் உள்ள லுயோயாங்ஜென் ரெயில் நிலையம் அருகே அங்கு இன்று அதிகாலை ரெயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழித்தடத்தில் வந்த சோதனை ரெயில் ஒன்று பராமரிப்பு பணியாளர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
- ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு பாடிய பாடல் மூலம் குறிவைக்கப்பட்டார்.
- ரெயில்வே வெளியிட்டுள்ள அதிகாரப் பூர்வமாக உண்மை சரிபார்ப்பு அறிக்கை பலரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல 'ஸ்டாண்டு அப்' காமெடியன் குணால் கம்ரா மும்பையில் கடந்த மார்ச் மாதம் நடந்த நிகழ்ச்சியில் பாஜக கூட்டணி சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு பாடிய பாடல் மூலம் குறிவைக்கப்பட்டார்.
இந்த சர்ச்சை தற்போது ஓய்ந்துள்ள நிலையில் அண்மையில் தனது யூடியூப் சேனலில் ரெயில்வே துறை குறித்து பேசிய குணால் கம்ரா, 2023 ஆம் ஆண்டில் சுமார் 25,000 ரெயில் விபத்துகளில் சுமார் 22,000 பேர் இறந்ததாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) புள்ளிவிவரங்கள் கூறுவதாக தெரிவித்தார்.
அவரின் கூற்று குறித்து ரெயில்வே வெளியிட்டுள்ள அதிகாரப் பூர்வமாக உண்மை சரிபார்ப்பு அறிக்கை பலரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரெயில்வே வெளியிட்ட உண்மைச் சரிபார்ப்பில், 2023 ஆம் ஆண்டில் சுமார் 25,000 விபத்துகள் நடந்ததாக கூறப்படுவது தவறானது, அந்த ஆண்டில் நடந்த உண்மையான விபத்துகளின் உண்மையான எண்ணிக்கை 24,678 ஆகும். அதேபோல், 22,000 இறப்புகள் என்ற கூற்றுக்கு மாறாக, 21,803 இறப்புகள் மட்டுமே பதிவாகி உள்ளது என தெளிவுபடுத்தியது.
இந்த தெளிவுபடுத்தல் இணையத்தில் கடும் விமர்சனங்களை குவித்து வருகிறது. ரெயில்வேயின் அறிக்கைக்கு உடனடியாக பதிலளித்த காம்ரா, தான் கூறியதில் என்ன தவறு என கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்த தெளிவுபடுத்தல் இணையத்தில் கடும் விமர்சனங்களை குவித்து வருகிறது. ரெயில்வேயின் அறிக்கைக்கு உடனடியாக பதிலளித்த காம்ரா, தான் கூறியதில் என்ன தவறு என கேள்வி எழுப்பி உள்ளார்.
2023 இல் நடந்து மிக மோசமான ரெயில் விபத்து ஒடிசாவில் நிகழ்ந்தது. ஜூன் 2 அன்று பாலசோர் மாவட்டத்தில் பஹானாகா பஜார் ரெயில் நிலையம் அருகே மூன்று ரெயில்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 296 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிக்னல் பிழை காரணமாக இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
- இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.
- இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் 9ஆம் தேதி காலை, தானேவின் கசாராவில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி மஹாராஜ் டெர்மினல் ரெயில் நிலையத்திற்கு புறநகர் ரெயில் சென்றுகொண்டிருந்தது.
மும்பை புறநகர் பகுதியான மும்ப்ரா ரயில் நிலையம் அருகே ரெயில் வந்தபோது பயணிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், படிக்கட்டுகளில் நின்றிருந்த சிலர் ஓடும் ரெயில் இருந்து கீழே விழுந்தனர்.
இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், விபத்து தொடர்பாக ரெயில் போலீசார் நேற்று முன்தினம் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
அதில், 'விபத்துக்கு சில நாட்களுக்கு முன் அந்த வழித்தடத்தில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் முறையாக செய்யப்படவில்லை என்பது தொழில்நுட்ப அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இதில் கவனக்குறைவாக செயல்பட்ட, உதவி கோட்டப் பொறியாளர் விஷால் டோலாஸ் மற்றும் மூத்த பிரிவு பொறியாளர் சமர் யாதவ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்ட்டுள்ளது.
ரெயில்வே வரலாற்றில் அதன் ஊழியர்கள் மீது நேரடியாக வழக்குப்பதிவு செய்திருப்பது இதுவே முதன்முறை ஆகும்.
- ரெயில் மிக வேகமாக நெருங்கி வருவதைக் கண்ட அவர், பைக்கை விட்டுவிட்டு ஓடித் தப்பிக்க முயன்றார்.
- நாட்டில் நடந்த 2,483 ரெயில்வே கிராசிங் விபத்துகளில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 1,025 விபத்துகளும், அதில் 1,007 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் மூடியிருந்த ரெயில்வே கேட்டைக் கடக்க முயன்ற நபர் ரெயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று (அக். 13) கிரேட்டர் நொய்டாவில் தாத்ரி பகுதியைச் சேர்ந்த துஷார் என்ற இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் ரெயில்வே கிராசிங்கிற்கு வந்துள்ளார்.
ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்தும், அவர் சற்றும் யோசிக்காமல் அதன் அடியில் புகுந்து தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தில் சறுக்கி விழுந்தது. இதனால் அவரும் கீழே விழுந்தார்.
அப்போது வேகமாக ரெயில் வந்துகொண்டிருந்த நிலையில் அருகில் வருவதற்குள் தனது பைக்கை தூக்க முயற்சித்துள்ளார்.
ரெயில் மிக வேகமாக நெருங்கி வருவதைக் கண்ட அவர், பைக்கை விட்டுவிட்டு ஓடித் தப்பிக்க முயன்றார். ஆனால், அதற்குள் நேரம் கடந்துவிட்டது.
வேகமாக வந்த ரயில் அவரை பலமாக மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) அறிக்கையின்படி, 2023-ல் நாட்டில் நடந்த 2,483 ரெயில்வே கிராசிங் விபத்துகளில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 1,025 விபத்துகளும், அதில் 1,007 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இது நாட்டிலேயே அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
- ரெயில், அதிகாலை 5 மணியளவில் பூர்னியா நகரத்தின் அருகே சென்று கொண்டு இருந்தபோது விபத்து.
- இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலம் பூர்ணியாவில் தண்டவாளத்தை கடக்கும்போது வந்தே பாரத் ரெயில் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும், இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாலையில் இருட்டாகவும், பனிமூட்டமாகவும் இருந்ததால் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்துள்ளது முதற்கு கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜோக்பானியிலிருந்து பாடலிபுத்ராவுக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில், அதிகாலை 5 மணியளவில் பூர்னியா நகரத்தின் அருகே சென்று கொண்டு இருந்தபோது விபத்து நடந்துள்ளது.
மேலும், பொது மக்கள் குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில், நியமிக்கப்பட்ட கிராஸிங்கை பயன்படுத்தவும், தண்டவாளங்களில் நடப்பதைத் தவிர்க்கவும் என்ஆர்எப் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று மாலை மும்பையில் இருந்து புறப்பட்டு வந்துகொண்டிருந்தது.
- விபத்து காரணமாக பிற ரெயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.
மகாராஷ்டிராவில் மும்பை சென்ட்ரல்-வல்சாத் பயணிகள் ரெயில் இன்ஜினில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று மாலை மும்பையில் இருந்து புறப்பட்டு வந்துகொண்டிருந்த ரெயில் 7.56 மணியளவில் பால்கர் மாவட்டத்தில் உள்ள கெல்வே ரோடு ரெயில் நிலையத்தை அடைந்த போது மின்சார என்ஜினில் தீவிபத்து ஏற்பட்டு புகை கிளம்பியது.
உடனடியாக ரெயிலில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.
பாதுகாப்பு நடவடிக்கையாக எஞ்சினுக்கு மின்சார விநியோகம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது. ரெயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக பிற ரெயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.






