என் மலர்tooltip icon

    உலகம்

    தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள்  மீது மோதிய ரெயில் - 11 பேர் உயிரிழப்பு
    X

    தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது மோதிய ரெயில் - 11 பேர் உயிரிழப்பு

    • ரெயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
    • மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இ

    தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தின் தலைநகரான குன்மிங் நகரில் ரெயில் மோதி 11 பேர் உயிரிழந்தனர்.

    குன்மிங்கில் உள்ள லுயோயாங்ஜென் ரெயில் நிலையம் அருகே அங்கு இன்று அதிகாலை ரெயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழித்தடத்தில் வந்த சோதனை ரெயில் ஒன்று பராமரிப்பு பணியாளர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

    Next Story
    ×