வந்தே பாரத் ரெயில் மோதி விபத்து- 4 பேர் உயிரிழப்பு

ரெயில், அதிகாலை 5 மணியளவில் பூர்னியா நகரத்தின் அருகே சென்று கொண்டு இருந்தபோது விபத்து.இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வந்தே பாரத் ரெயில் மோதி விபத்து- 4 பேர் உயிரிழப்பு
Published on

பீகார் மாநிலம் பூர்ணியாவில் தண்டவாளத்தை கடக்கும்போது வந்தே பாரத் ரெயில் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும், இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாலையில் இருட்டாகவும், பனிமூட்டமாகவும் இருந்ததால் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்துள்ளது முதற்கு கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜோக்பானியிலிருந்து பாடலிபுத்ராவுக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில், அதிகாலை 5 மணியளவில் பூர்னியா நகரத்தின் அருகே சென்று கொண்டு இருந்தபோது விபத்து நடந்துள்ளது.

மேலும், பொது மக்கள் குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில், நியமிக்கப்பட்ட கிராஸிங்கை பயன்படுத்தவும், தண்டவாளங்களில் நடப்பதைத் தவிர்க்கவும் என்ஆர்எப் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com