search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tomorrow"

    • இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வானது தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.
    • இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

    சேலம்:

    இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீAட் தேர்வானது தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. அதற்காக நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு தேர்வு மைய ஹால் டிக்கெட் இணையதளம் வழியாக வழங்கப்பட்டு வருகிறது.

    மொத்தம் 499 நகரங்க ளில் நடக்கும் இத்தேர்வினை எழுத, 18.72 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்த வரை நடப்பாண்டு 1.50 லட்சம் பேர் நீட் தேர்வினை எழுதுகின்றனர். நாளை மதியம் 2 மணிக்குதொடங்கி, மாலை 5.20 மணிவரை தேர்வு நடக்கிறது.

    சேலம்

    சேலம் மாவட்டத்தில் 10,488 மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர். சேலம் அம்மாபேட்டை சக்திகைலாஷ் மகளிர் கல்லூரி, சின்னதிருப்பதி ஜெய்ராம் பப்ளிக் பள்ளி, ஜாகீர் அம்மாபாளையம், செந்தில் பப்ளிக் பள்ளி, அயோத்தியாபட்டினம் வித்யாமந்திர் மேல்நி லைப்பள்ளி, தேவியாக்கு றிச்சி தாகூர்பப்ளிக் பள்ளி, ஆத்தூர் பாரதியார் ஹைடெக் இன்டர்நேசனல் பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் 17 தேர்வு மையங் கள் அமைக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல்லில் 7 மையங்கள்

    நாமக்கல் மாவட்டத்தில் 7 தேர்வு மையங்களில் 5 ஆயிரத்து 276 பேர் தேர்வு எழுத உள்ளனர். நாமக்கல் ட்ரினிட்டி இன்டர்நேஷனல் பள்ளியில் 668 பேரும், நேஷனல் பப்ளிக் பள்ளியில் 600 பேரும், நவோதயா அகாடமி பள்ளியில் 768 பேரும், ஸ்பெக்ட்ரம் அகா டமி பள்ளியில் 672 பேரும், ராயல் இன்டர்நேஷனல் பள்ளியில் 1,032 பேரும், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். அக்ஷரா அகாடமியில் 432 பேரும், பாவை பொறியியல் கல்லூரியில் 1,104 பேரும் நீட் தேர்வை எழுதுகின்றனர்.

    • உயர் மின் அழுத்த பாதையில் நாளை பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
    • பெருங்குடி, கொட்டையூர், ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

    திருவாரூர்:

    திருவாரூர் உதவி செயற்பொறியாளர் அருள்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உயர்மின் அழுத்த பாதையில் நாளை(புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    எனவே வலங்கைமான் துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் வலங்கைமான், ஆண்டான்கோவில், கீழவிடையல், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, தெற்குபட்டம், வடக்கு பட்டம், மருவத்தூர், வீராணம், கீழஅமராவதி, நார்த்தாங்குடி, திருவோணமங்கலம், தென்குவளைவேலி, பூந்தோட்டம், பெருங்குடி, கொட்டையூர், ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கஸ்பாபேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    ஈரோடு:

    கஸ்பாபேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    இதனால் கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டுவலசு, பொட்டிநாயக்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46புதுார்,

    ரங்கம்பாளையம், குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாய க்கன்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, செங்கரைபாளையம், டி.மேட்டுப்பாளையம்,

    ஆண்டகோத்தாம்பா ளையம், ஆணைக்கல்பாளையம், ஈ.பி.நகர், கே.ஏ.எஸ்.நகர், இந்தியன் நகர், டெலிபோன் நகர், பாரதி நகர், மூலப்பாளையம், செட்டிபாளையம், சடையம்பாளையம்,

    திருப்பதி கார்டன், முத்துகவுண்டன்பாளையம், கருந்தேவன்பா ளையம், சாவடி பாளையம் புதூர், கிளியம்பட்டி, ரகுபதிநாயக்கன்பாளையம், காகத்தான்வலசு போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    • இன்று முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
    • நாளை காலை தேரோட்டம் நடக்கிறது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேர்திருவிழா நேற்று சேவல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    விழாவையொட்டி மலை மேல் உயரத்தில் உள்ள கொடி மரத்தில் சேவல் கொடியை ஏற்றி பங்குனி உத்திர விழாவை தொடங்கி வைத்தனர்.

    முன்னதாக நேற்று காலை சாமி புறப்பாடு நடந்தது, சென்னிமலை டவுன் கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி அங்கு இருந்து சேவல் கொடியுடன் உற்ச மூர்த்திகள் முருகப்பெ ருமான் சமேதராக புறப்ப ட்டு படி வழியாக மலை கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதை தொடர்ந்து மலை கோவிலில் யாக பூஜை நடந்தது. முருகன், வள்ளி, தெய்வானை, உற்சவ மூர்த்திகளுக்கும். மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கும் பஞ்சாமிருதம், பால், தயிர் உட்பட பல்ேவறு திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    சாமி களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சிகள் நடந்தது. தலைமைக் குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவாச்சா ரியார் கொடி மரத்திற்கும் காப்பு கட்டி சிறப்பு பூஜை செய்ய சேவல் கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

    விழாவையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு டவுன் கிழக்கு ராஜா வீதி கைலாசநாதர் கோவிலில் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

    இதையடுத்த நாளை (புதன்கிழமை) காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    தொடர்ந்து மாலை 5 மணிக்கு தேர் நிலை சேரும் நிகழ்ச்சியும், 6-ந் தேதி காலை பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு தெப்பத்தேர் உற்சவம் நடக்கிறது. 7-ந் தேதி காலை மகா தரிசனம் நடக்கிறது. இரவு மஞ்சள் நீர் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை தக்கார் அன்னகொடி, செயல் அலுவலர் சரவணன் தலைமையில் பணியா ளர்கள், அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.

    ஈரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் மார்க்கெட் மின்பாதையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் வினியோகம் இருக்காது.

    ஈரோடு:

    ஈரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் மார்க்கெட் மின்பாதையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் ஹவுஸ் ரோடு, எஸ்.கே.சி.ரோடு, முத்துவேலப்பாவீதி, மீனாட்சிசுந்தரனார் ரோடு பகுதி, கைகோளன்தோட்டம், வாமலை வீதி, டி.வி.எஸ். வீதி, என்.எம்.எஸ். காம்பவுண்ட் மற்றும் ஈஸ்வரன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை ஈரோடு மின்வாரிய செயற்பொறியாளர் ராமசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 

    • வாடிப்பட்டி பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
    • வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி, அய்யங்கோட்டை துணைமின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

    மதுரை

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி, அய்யங்கோட்டை துணைமின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (15-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    வாடிப்பட்டி, பைபாஸ், பழனியாண்டவர் கோவில், பாலமரத்தான் நகர், வி.எஸ்.நகர், ஜவுளிபூங்கா, பூச்சம்பட்டி, கச்சைகட்டி, குலசேகரன்கோட்டை, கோட்டைமேடு, விராலி ப்பட்டி, சாணாம்பட்டி, முருகன் கோவில் லைன், சொக்கலிங்கபுரம், ராமையன்பட்டி, நரிமேடு, நாதம்பட்டி, தாதப்ப நாயக்கன்பட்டி, போடி நாயக்கன்பட்டி.

    ராம நாயக்கன்பட்டி, கள்ளர்ம டம், வல்லப கணபதிநகர், மகாராணிநகர், ஆர்.வி.நகர், பொட்டுலுபட்டி, எல்லையூர், ராமராஜபுரம். கூலாண்டிப்பட்டி, செம்மினிபட்டி, அங்கப்பன்கோட்டை, சமத்து வபுரம், தடாக நாச்சிபுரம், சொக்கலிங்கபுரம், மோகன் பிளாட், குட்லாடம்பட்டி, ரிசபம், திருமால்நத்தம், ஆலங்கொட்டாரம்; ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டு நீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிப்ப ட்டி பங்களா, கொண்டையம்பட்டி, கல்வேலி ப்பட்டி, மரியம்மாள்குளம், அமரடக்கி.

    சம்பக்குளம், அய்யன கவுண்டம்பட்டி, செம்புகுடிபட்டி. தனிச்சியம் கார்னர், வடுகப்பட்டி, கட்டக்குளம், தாதகவுண்டன்பட்டி, பெரியஇலந்தைக்குளம் நடுப்பட்டி, கீழக்கரை, குட்டிமேய்க்கிப்பட்டி, அய்யங்கோட்டை, சி.புதூர், சித்தாலங்குடி, குத்தாலங்குடி, முலக்கு றிச்சி, வைரவநத்தம், யானைக்குளம், நகரி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்பகிர்மான செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்தார்.

    • நெடுஞ்சாலைத்துறை சார்பில் நாளை சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது.
    • இதனால் ஈங்கூர் துணை மின் நிலையம் பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின்சாரம் இருக்காது.

    ஈரோடு:

    நெடுஞ்சாலைத்துறை சார்பில் நாளை (வியாழக்கிழமை) சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது.

    இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஈங்கூர் துணை மின் நிலையம் பாலப்பாளையம், நெசவாளர் காலனி மற்றும் புலவனூர் மின் பாதை பகுதிகளான ஈங்கூர், பாலப்பாளையம், முகாசி பிடாரியூர், வேலாயுதம்பாளையம், புலவனூர், கூரபாளையம், கோவில்பாளையம், கொளத்துப்பாளையம், சென்னியங்கிரிவலசு, நெசவாளர் காலனி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • தெற்கு அவிநாசிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
    • மின் விநியோகம் இருக்காது

        காங்கயம்:

    காங்கயம் கோட்டம் பெரியாா் நகா், புதுப்பை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 23-ந்தேதி(புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று காங்கயம் மின்வாரிய செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

    பெரியாா் நகா் துணை மின் நிலையம்: தீத்தாம்பாளையம், சிவனாதபுரம், லக்கமநாயக்கன்பட்டி, எல்.கே.சி.நகா், அண்ணா நகா், ஏ.பி.புதூா், எஸ்.ஆா்.ஜி.வலசு ரோடு, சேரன் நகா், கரட்டுப்பாளையம், செந்தலையாம்பாளையம்.

    புதுப்பை துணை மின் நிலையம்: புதுப்பை, கஸ்தூரிபாளையம், தங்கமேடு, மொட்டக்காளிவலசு, மயில்ரங்கம், வெள்ளாத்தங்கரைபுதூா், நாச்சிபாளையம், சுப்பிரமணியக்கவுண்டன்வலசு, நாயக்கன்புதூா், கரைவலசு, செம்மடை, புள்ளசெல்லிபாளையம்.

    பொங்கலூா் ஒன்றியம் தெற்கு அவிநாசிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: கொடுவாய், வெள்ளியம்பாளையம், வினோபா நகா், கொசவம்பாளையம், கருணைபாளையம் பிரிவு, செங்கோடம்பாளையம், அய்யம்பாளையம், பள்ளிபாளையம், கோவில்பாளையம், தொட்டிபாளையம், பொல்லிகாளிபாளையம், தெற்கு அவிநாசிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம் (ஒரு பகுதி), அலகுமலை (ஒரு பகுதி), காட்டூா் (ஒரு பகுதி), உகாயனூா்

    • மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள்
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முதலிபாளையம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மின்தடை.

    திருப்பூர்:

    முதலிபாளையம், பழவஞ்சிபாளையம் நல்லூர், மற்றும் பூமலூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள–தால் நாளை 22-ந் தேதி இந்த துணை மின் நிலையங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பகிறது. அதன்படி அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முதலிபாளையம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியபாளையம், நல்லூர், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் நகர், ஆர்.வி.ஈ. நகர், கூலிபாளையம், காசிபாளையம், சர்க்கார் பெரிய பாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரெங்கேகவுண்டம்பாளையம், விஜயபுரம், மானூர், செவந்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    நல்–லூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட நல்லூர், காளிபாளையம், சாணார்பாளையம், முத்தணம்பாளையம் ராக்கியாபாளையம் பிரிவு ஆகிய இடங்களிலும், பழவங்சிப்பாளையம் துணை மின் நிலைத்துக்குட்பட்ட செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், பூங்கா நகர், பாலாஜி நகர், அய்யப்பா நகர் ஆகிய பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது.

    இது–போல் பூம–லூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட மங்கலம், சுல்தான்பேட்டை, இடுவாய், பாரதிபுரம், கணபதிபாளையம், செட்டிபாளையம், சீரணம்பாளையம், சின்னகாளிபாளையம், சின்னப்புத்தூர், பெரியப்புத்தூர், வேட்டுவபாளையம், மலைக்கோவில், வெள்ளச்செட்டிபாளையம், வடுகாளிப்பாளையம், புக்கிலிப்பாளையம், வேலாயுதம்பாளையம், பூமலூர், கணக்கம்பாளையம், பெருமாப்பாளையம், பள்ளிப்பாளையம், கிடாத்துரை புதூர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர்கள் ராமச்சந்திரன், சபரிராஜன் தெரிவித்துள்ளனர்.

    • தேவகோட்டையில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    தேவகோட்டை,

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (15-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக தேவகோட்டை டவுன், ராம்நகர், உதையாச்சி, உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, கோட்டூர், வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, அனுமந்தக்குடி, ஊரணிக்கோட்டை பனங்குளம், மாவிடுத்திக்கோட்டை, காயாவயல், புளியால், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சனை, மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மின்தடை ஏற்படும் என்று மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்தார்.

    • வெண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    ஈரோடு:

    வெண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டன் பாளையம், கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட், நொச்சி காட்டு வலசு, சோலார், சோலார் புதூர், நகராட்சி நகர், ஜீவா நகர், போக்குவரத்து நகர், லக்காபுரம், புது வலசு, பரிசல் துறை, கருக்கம்பாைளயம், நாடார் மேடு, 46 புதூர், சாஸ்திரி நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெற்கு மின் வாரிய செயற் பொறியாளர் முத்துவேல் தெரிவித்துள்ளார்.

    • திருப்பத்தூரில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஏற்படும்

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மின் பகிர்மான கோட்டத்திற்கு உட்பட்ட கீழசேவல்பட்டி, ஆ.தெக்கூர் ஆகிய மின் பகிர்மான நிலையங்கள் மற்றும் சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஒன்றியங்களில் உள்ள துணை மின்நிலையங்களில் நாளை (15-ந் தேதி) பரா மரிப்பு பணிகள் நடைபெறு கிறது. எனவே நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இப்பகுதி களை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் விநியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை மின் மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    ×