search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில்24 மையங்களில் நாளை நீட் தேர்வு
    X

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில்24 மையங்களில் நாளை நீட் தேர்வு

    • இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வானது தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.
    • இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

    சேலம்:

    இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீAட் தேர்வானது தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. அதற்காக நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு தேர்வு மைய ஹால் டிக்கெட் இணையதளம் வழியாக வழங்கப்பட்டு வருகிறது.

    மொத்தம் 499 நகரங்க ளில் நடக்கும் இத்தேர்வினை எழுத, 18.72 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்த வரை நடப்பாண்டு 1.50 லட்சம் பேர் நீட் தேர்வினை எழுதுகின்றனர். நாளை மதியம் 2 மணிக்குதொடங்கி, மாலை 5.20 மணிவரை தேர்வு நடக்கிறது.

    சேலம்

    சேலம் மாவட்டத்தில் 10,488 மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர். சேலம் அம்மாபேட்டை சக்திகைலாஷ் மகளிர் கல்லூரி, சின்னதிருப்பதி ஜெய்ராம் பப்ளிக் பள்ளி, ஜாகீர் அம்மாபாளையம், செந்தில் பப்ளிக் பள்ளி, அயோத்தியாபட்டினம் வித்யாமந்திர் மேல்நி லைப்பள்ளி, தேவியாக்கு றிச்சி தாகூர்பப்ளிக் பள்ளி, ஆத்தூர் பாரதியார் ஹைடெக் இன்டர்நேசனல் பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் 17 தேர்வு மையங் கள் அமைக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல்லில் 7 மையங்கள்

    நாமக்கல் மாவட்டத்தில் 7 தேர்வு மையங்களில் 5 ஆயிரத்து 276 பேர் தேர்வு எழுத உள்ளனர். நாமக்கல் ட்ரினிட்டி இன்டர்நேஷனல் பள்ளியில் 668 பேரும், நேஷனல் பப்ளிக் பள்ளியில் 600 பேரும், நவோதயா அகாடமி பள்ளியில் 768 பேரும், ஸ்பெக்ட்ரம் அகா டமி பள்ளியில் 672 பேரும், ராயல் இன்டர்நேஷனல் பள்ளியில் 1,032 பேரும், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். அக்ஷரா அகாடமியில் 432 பேரும், பாவை பொறியியல் கல்லூரியில் 1,104 பேரும் நீட் தேர்வை எழுதுகின்றனர்.

    Next Story
    ×