search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvallur"

    திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் சேரும் குப்பை கழிவுகளை பூங்கா திடல் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் கொட்ட நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் சேரும் குப்பைக் கழிவுகள் எடப்பாளையம் கிராமத்தில் கொட்டப்பட்டு வருகிறது. அதனை சுத்திகரிப்பு செய்ய இடம் தேர்வு செய்யப்பட்டதால் அங்கு மலைபோல் குப்பைகள் குவிந்துள்ளன.

    இந்த நிலையில் 15-வது வார்டு எம்.ஜி.எம். நகரில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பூங்கா திடல் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அந்த இடத்தில் பூங்கா திடல் அமைப்பதற்கான எந்த பணியும் நடைபெறவில்லை.

    இதற்கிடையே திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் சேரும் குப்பை கழிவுகளை பூங்கா திடல் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் கொட்ட நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த அந்த பகுதி பெண்கள், குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆவடி, திருவள்ளூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குப்பை கொட்டப்படும் இடம் குறித்து உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொது மக்கள் கலைந்து சென்றனர். #Tamilnews
    திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பழ வியாபாரி பலியானார்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் சரவணன் (வயது 26). பழ வியாபாரி. இந்த நிலையில் நேற்று முன்தினம் சரவணன் தனது மோட்டார் சைக்கிளில் வேலையின் காரணமாக திருவள்ளூருக்கு வந்து கொண்டிருந்தார்.

    அவர் செவ்வாப்பேட்டை துர்க்கையம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்திசையில் பூந்தமல்லி நோக்கி வேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சரவணணுக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்

    அவ்வாறு செல்லும் வழியிலேயே சரவணன் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
    பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. #PlusTwoExamResults #Plus2Result
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 47 ஆயிரம் 461 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 41 ஆயிரத்து 389 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 87.21 சதவீதம் ஆகும்.

    கடந்த ஆண்டு 88.85 சதவீதம் தேர்ச்சி பெற்று இருந்தது. தற்போது காஞ்சீபும் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.

    மாவட்ட அளவில் காஞ்சீபுரம் 24-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 23-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    அரசு பள்ளியில் மொத்தம் 19 ஆயிரத்து 171 பேர் தேர்வு எழுதி இருந்தனர். இதில் 14 ஆயிரத்து 769 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 77 சதவீதம்தேர்ச்சி ஆகும்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 43 ஆயிரத்து 866 பேர் தேர்வு எழுதினர். இதில் 38 ஆயிரத்து 255 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 87.17 ஆகும். கடந்த ஆண்டு 87.57 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது. தற்போது 0.40 சதவீதம் தேர்ச்சி குறைவு.

    மாவட்ட அளவில் திருவள்ளூர் மாவட்டம் 25-வது இடத்தை பிடித்துள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 90 அரசு பள்ளிகள் உள்ளன. இதில் 16 ஆயிரத்து 340 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 11 ஆயிரத்து 944 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 73.10. கடந்த ஆண்டு 74.28 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது.  #PlusTwoExamResults #PlusTwoResults #Plus2Result
    ×