search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Temple Kumbabhishekam"

    • கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது
    • பக்தர்களுக்கு அன்னதானம்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் ஆத்துமேடு பகுதியில் அமைந்துள்ள 100 ஆண்டு பழமை வாய்ந்த மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    விழாவில் முதல் கால பூஜை கணபதி ஹோமம் தொடங்கி மாரியம்மனுக்கு அஷ்டபந்தனை சாற்றுதல் தாய் வீட்டு சீர்வரிசை யாகசாலை வேள்வி நடைபெற்று பூர்ணாஹூதி நிறைவேற்றி மேல தாளங்கள் முழங்க கலச புறப்பாடு செய்து கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

    கோவிலில் உள்ள கோட்டை மாரியம்மன் க்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    கும்பாபிஷேகம் விழாவை காண நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆத்துமேடு ஊர் பொதுமக்கள் மிகவும் செய்து இருந்தனர்.

    • டாணாப்புதூர் முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டி அடுத்துள்ள டாணாப்புதூ ரில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று காலை 10 அளவில் திருக்குடமுழுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி யாகசாலையில் பெண்கள் முளைப்பாரி வைத்தனர். 26-ந் தேதி புளியம்பட்டி ஊத்துக்குளி அம்மன் கோவிலில் இருந்து நம்பியூர் ரோடு மற்றும் கோவை மெயின் ரோடு வழியாக தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர்.

    நேற்று யாகசாலையில் முதற்கால வேள்வி பூஜை நடைபெற்றது.

    தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு 2-ம் கால வேள்வி பூஜை நடந்தது. காலை 10 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீரூற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்பு அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது கலச தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து முத்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்க ளுக்கு அருள் பாலித்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் தரிசனம்

    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் அருகே உள்ள துரிஞ்சிக்குப்பம் கிராமத்தில் மேற்கு குளக்கரையில் 500 ஆண்டு கால திரவுபதியம்மன் கோயில் அவ்வூரில் உள்ள பொதுமக்கள் மற்றும் ஆலய திருப்பணி குழுவினர் சார்பில் சீரமைத்து கட்டி உள்ளனர். இக்கோயிலின் மகாகும்பாபிசேக விழா கடந்த 10-ந்தேதி காலை சிறப்பாக நடைபெற்றது.

    இந்த விழாவில் மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் சேகரன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயசுதா, போளூர் ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெருமாள், உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தீர்த்தப்பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    கும்பாபிஷேகத்தையும் யாகபூஜைகளையும் போளூர் கைலாசநாதர் கோயில் கிருத்திகானந்த சிவாச்சாரியார், சென்னை சந்திரசேகர சிவாச்சாரியார், கைலாஷ், மணிகண்ட சிவாச்சாரியார் மற்றும் குழுவினர் நடத்தி வைத்தனர்.

    • சிறப்பு அபிஷேகம் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஜப்திகாரணி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ரேணுகாம்பாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    சிவாச்சாரியார்கள் கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். இதை தொடர்ந்து கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் மகாலட்சுமி ஹோமங்கள் நடைபெற்றது.

    பின்னர் சிவாச்சாரியார்கள் கலசங்களை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்து கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீரை ஊற்றி வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் அந்தப் புனித நீரை பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது இதைத் தொடர்ந்து ஸ்ரீ ரேணுகாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் மங்கள மேள வாதியுங்கள் மகா தீபாதரணை காண்பிக்கப்பட்டது.

    இந்த சிறப்பு மிக்க மகா கும்பாபிஷேகத்திற்கான திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ரேணுகாம்பாள் தரிசனம் செய்து சென்றனர்.

    • மஹாபூர்ணஹூதி, தீபாராதனை, யாத்ராதானம், யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்படுதல் நடைபெற்றது.
    • மஹா அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை ,பிரசாதம் வழங்குதல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    திருப்பூர்:

    அவினாசி அருகே சொக்கனூரில் அமைந்துள்ள செங்குந்தர்களின் குல தெய்வமான தேவி ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தையொட்டி இன்று காலை 5மணிக்கு யாகசாலை பூஜை துவக்கம், திரவியயாகம், நான்காம் கால பூஜை, நாடிசந்தானம், மஹாபூர்ணஹூதி, தீபாராதனை, யாத்ராதானம், யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்படுதல் நடைபெற்றது.

    காலை 7-30மணிக்கு விமான கும்பாபிஷேகம், விநாயகர் பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம், ஸ்ரீ காமாட்சியம்மன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து காலை 10மணிக்கு மேல் தசதரிசனம், மஹா அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை ,பிரசாதம் வழங்குதல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை நாட்டாமைக்காரர் கந்தசாமி, பெரிய தனக்காரர் கொண்டப்பன், நிர்வாக குழு தலைவர் ரமேஷ் மற்றும் கோவில் அறக்கட்டளை நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேகம் மகா சந்நிதானம் வேதசிவாகம சிரோன்மணி ஸ்ரீலஸ்ரீ ராஜ. சரவண மாணிக்கவாசக சுவாமிகள் தலைமையில் சண்முக சிவாச்சாரியார் சுவாமிகள், ஐராவதீஸ்வரர் சிவம் ஆகியோரின் சர்வசாதக சிறப்போடு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    குழந்தை வரம், திருமணயோகம், தொழில் வளர்ச்சி போன்ற மக்கள் குறைகளை போக்குகின்ற தெய்வமாக இக்கோவில் விளங்குகிறது. மேலும் மாணவர்கள், பொது சேவை செய்பவர்கள், சமூக சேவை செய்பவர்களுக்கு வெற்றிகளை வாரி வழங்கும் அற்புத சக்தி வாய்ந்த தெய்வமாகவும் இக்கோவில் அம்மன் விளங்குவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.  

    • கும்பாபிஷேக விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக கடந்த 28- ந்தேதி கிராம சாந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கோவிலுக்கு வந்த பக்தர்கள், அமைச்சர்கள், உபயதாரர்களுக்கு யானை, குதிரை, பசுக்கள் மூலம் வரவேற்பு குழுவினர் வரவேற்றனர்.

    காங்கயம் :

    காங்கயம் அருகே உள்ள வீரசோழபுரத்தில் நட்டாத்தி வகையறா நாட்டுவ நாடார் குலத்தினரின் குலதெய்வமாகிய அடஞ்சாரம்மன் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். பழமை வாய்ந்த இந்த கோவிலின் புனரமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கும்பாபிஷேக விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக கடந்த 28- ந்தேதி கிராம சாந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

    29- ந்தேதி இரவு பிரவேச பலி, தசா ஹோமம், சாந்தி் ஹோமம் ஆகியவை நடைபெற்றது.அதைத் தொடர்ந்து, கொடுமுடியில் இருந்து புண்ணிய தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. அப்போது பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். பின்னர் அம்மனுக்கு நான்குகால பூர்ணாகுதி பூஜைகள் நடைபெற்றது. நேற்று பரிவார கலசங்கள் மூலாலயம் அடைதல், மூலவர் கலசம் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    அதைத் தொடர்ந்து காலை 9.15 மணிக்கு ராஜகோபுரம், மூலவர் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது வானில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பூககள் தூவப்பட்டது.அதைத் தொடர்ந்து அடஞ்சாரம்மனுக்கு மகாகும்பிஷேக பூஜைகள் நடைபெற்றது. பின்னர் நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ், மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி இணைச்செயலாளர் ஏ.ஆனந்தகுமார், நட்டாத்தி நாடார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயலாளர் ஜி.கமலக்கண்ணன் ஆகியோர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.

    இதில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், கோவில் திருப்பணி குழு தலைவர் சக்திவேல், செயலாளர் நாச்சிமுத்து, பொருளாளர் மனோகரன், துணைத்தலைவர்கள் சேதுபதி, கூடலரசன், முருகேசன், துணை செயலாளர்கள் குருசாமி, ரமேஷ், இணை செயலாளர்கள் ராஜேந்திரன், கோவிந்தராஜ், பெரியசாமி, காமராஜ், தங்கவேல், கிருஷ்ணன், முத்துச்சாமி, குணசேகரன் மற்றும் வீரசோழபுரம் பஞ்சாயத்து தலைவர் லட்சுமி, ஜெகதீஷ், மடவளாகம் ஈஸ்வரன், பெருமாள் கோவில்களின் நிர்வாக தலைவர் தங்கமுத்து, செயலாளர் ராமசாமி, பாப்பினி அம்மன் கோவில் திருப்பணி கமிட்டி தலைவர் வி.பி. பழனிசாமி உள்பட குடிபாட்டு மக்கள்,ஊர் பொதுமக்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவிலுக்கு வந்த பக்தர்கள், அமைச்சர்கள், உபயதாரர்களுக்கு யானை, குதிரை, பசுக்கள் மூலம் வரவேற்பு குழுவினர் வரவேற்றனர்.

    கும்பாபிஷேகத்தை தொடர்ந்து இன்று முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜைகள் நடைபெற உள்ளன.

    • 3 காலயாக பூஜை நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு, அடுத்த ஜெகநாதபுரம், கிராமத்தில் மாரியம்மன் கோவில் புதியதாக புதுப்பிக்கப்பட்டு பஞ்ச வர்ணம் பூசி இதன் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

    கோவிலின் முன்பு யாகசாலை பந்தல் அமைத்து. 108 கலசம் வைத்து, பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கலசங்களை வைத்து, ஆனந்தன், சிவாச்சாரியார் தலைமையில் 3 காலயாக பூஜை செய்தனர்.

    பின்னர் புனித நீர் கலசத்தை மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வந்து கோவில் விமான கோபுரத்தின் மீது உள்ள கலசத்தின் புனித நீரை ஊற்றினார்கள்.

    பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர். விழாவில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க இளைஞர் அணி தலைவர் செந்தில்குமார், கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு. சாமி தரிசனம் செய்து, பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார். இன்று இரவு தெய்வீக நாடகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் பொதுமக்கள், செய்து இருந்தனர்.

    • 48 நாள் மண்டல பூஜைகள் நடக்கிறது
    • ஏராளமான பக்தர் சாமி தரிசனம் செய்தனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை பச்சையம்மன் மன்னார் சாமி கோவில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலை பச்சையம்மன் மன்னார்சாமி கோவில் புனராவர்த்தன ஜீர்ணோத்தாண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா நேற்று காலையில் நடைபெற்றது.

    விழாவையொட்டி கடந்த 23-ந் தேதி திங்கட்கிழமை முதல் விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம் கோ பூஜை தொடர்ந்து மங்கல இசை கிராம சாந்தி பிரசவ பலி சாந்தி பல்வேறு நிகழ்ச்சிகளும் முதல் கால யாக பூஜையும் தொடர்ந்து நடைபெற்றது.

    முடிவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றன. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை பச்சையம்மன் மன்னார்சாமி கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜைகள் நடக்கிறது.

    • கிளாமடம் கல்யாண சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சிக்கு உட்பட்ட கிளாமடம் கிராமத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கல்யாண சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக 3 நாட்கள் நான்கு கால கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் தொடங்கப்பட்டு பரிகார தெய்வங்களுக்கு மகா பூர்ணாகுதி ஆராதனை நடைபெற்றது அதனை தொடர்ந்து கார்த்திகேயன் சிவாச்சாரியார் தலைமையில் யாக வேள்வி நடத்தப்பட்டு கோவில் கும்பத்தில் புனித அபிஷேக நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேகத்தில் நெற்குப்பை பேரூராட்சி சேர்மன் அ.புசலான், வார்டு உறுப்பினர்கள் கண்ணன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பாதர் வெள்ளை, இளங்கோ, ஆறுமுகம், முருகேசன், கணேசன், ராமன், ஆகியோர் செய்து இருந்தனர். மேலும் விழா குழு ஒருங்கிணைப்பு பணிகளை மங்கைபாகன், சின்னையா, மாரியப்பன் வெள்ளைச்சாமி, சுரேஷ், கணேசன், வசந்த பாரதி, அருள்மதி, பூங்குன்றன், கிராமத்து இளைஞர்கள், ஊர் பொதுமக்கள், ஆகியோர் செய்திருந்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • நவகிரக, மகாலட்சுமி ஹோமங்கள் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த கொட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து சிவனடியார்கள் கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமங்கள் நடைபெற்றது.

    பின்னர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிவனடியார்கள் கைலாய மேளங்கள் முழங்க கலசங்களை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்து கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதை தொடர்ந்து புனித நீரை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்னர் அகத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்ற நிலையில் மங்கள மேள வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ அகத்தீஸ்வரரை தரிசனம் செய்து சென்றனர்.

    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    • கலச திருமஞ்சனம், பூர்ணாஹூதி உள்ளிட்டவையும் நடந்தது

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த மூடூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீஅலர்மேல்மங்கா சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த திங்கள்கிழமை பகவத் அனுக்ஞை, யஜமான சங்கல்பம், புண்யாஹ வாசனம் உள்ளிட்டவையும், செவ்வாய்க்கிழமை சதுஸ்தான அர்ச்சனை ஹோமம், கலச திருமஞ்சனம், பூர்ணாஹூதி உள்ளிட்டவையும் நடந்தது.

    நேற்று காலை கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் கோவில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.

    • மகாகணபதி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது
    • பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகங்கள்

    திருச்சி:

    தா.பேட்டை அருகே மேட்டுப்பாளையம் தெவராயப்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ மகாகணபதி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு புண்யாகவாகனம், அணுக்கை, வாஸ்துசாந்தி, வாஸ்து ஹோமம், கும்ப அலங்காரம், சங்கல்பம், கணபதி ஹோமம், லட்சுமிஹோமம், நாடி சந்தானம், பிம்பசுத்தி, யாகவேள்வி மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். அதனை தொடர்ந்து ஸ்ரீ மகாகணபதி, ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ கருப்புசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு வழிபட்டனர்.

    ×