search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முத்து மாரியம்மன்"

    • டாணாப்புதூர் முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டி அடுத்துள்ள டாணாப்புதூ ரில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று காலை 10 அளவில் திருக்குடமுழுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி யாகசாலையில் பெண்கள் முளைப்பாரி வைத்தனர். 26-ந் தேதி புளியம்பட்டி ஊத்துக்குளி அம்மன் கோவிலில் இருந்து நம்பியூர் ரோடு மற்றும் கோவை மெயின் ரோடு வழியாக தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர்.

    நேற்று யாகசாலையில் முதற்கால வேள்வி பூஜை நடைபெற்றது.

    தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு 2-ம் கால வேள்வி பூஜை நடந்தது. காலை 10 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீரூற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்பு அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது கலச தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து முத்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்க ளுக்கு அருள் பாலித்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • அந்தியூர் தவிட்டுப்பாளையம் அழகு முத்து மாரியம்மன், ஆனந்த விநாயகர் கோவில் புனராவர்த்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • அதனை தொடர்ந்து அழகு முத்து மாரியம்மன் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த தவிட்டுப்பாளையம் பிரம்மதேசம் சாலையில் அழகு முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு புதியதாக திருப்பணிகள் நடைபெற்று கும்பா பிஷேகம் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து 12-ம் ஆண்டு நிறைவ டைந்ததை தொடர்ந்து அழகு முத்து மாரியம்மன், ஆனந்த விநாயகர் கோவில் புனராவர்த்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதற்காக பக்தர்கள் ராமேஸ்வரம் பவானி கூடுதுறை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து புனித நீர் ஆகியவைகளை அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து அழைத்து வரப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து அனைத்து வேலைகளும் நன்மையாக நடைபெற வேண்டி ஆனந்த விநாயகர் யாகம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சியும், 2-ம் கால யாக பூஜைகள், துவார பூஜை பலவித திரவியங்கள், கனிவகைகள் யாக பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் நேற்று காலை கும்பாபிஷேகம் நடை–பெற்றது. தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அழகு முத்து மாரியம்மன் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

    ×