search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Taj Mahal"

    உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்யப்படும் என உ.பி அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. #TajMahal #UttarPradesh #SupremeCourt
    லக்னோ:

    உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள யமுனா நதிக்கரையில் உள்ளது. முகலாயர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த தாஜ்மகாலை காண்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர்.

    ஆனால், தாஜ்மகால் உத்தரப்பிரதேச மாநில அரசால் முறையாக கவனிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், மாநில அரசின் செயல்பாடுகள் முறையாக இல்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது. மேலும், தாஜ்மகாலை பராமரிப்பதற்கான வரைவு அறிக்கையை மாநில அரசு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று, உலகப்புகழ் பெற்ற தாஜ்மகாலை பராமரிப்பதற்கான வரைவு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் உத்தரப்பிரதேச மாநில அரசு இன்று தாக்கல் செய்தது.



    அந்த அறிக்கையில், தாஜ்மகால் அமைந்திருக்கும் ஆக்ரா நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதையும் பிளாஸ்டிக் இல்லாத பகுதிகளாக மாற்ற உத்தரவாதம் அளித்துள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளும் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தவும் தடை செய்ய இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    மேலும், தாஜ்மகாலை சுற்றி உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இருப்பதாகவும், இதன்மூலம் காற்று மற்றும் சத்தத்தினால் ஏற்படும் மாசுவை குறைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

    மிக முக்கியமாக, தாஜ்மகாலை சுற்றி உள்ள மாசுவை உண்டாக்கும் தொழிற்சாலைகளை மூட இருப்பதாகவும், அதற்கு பதிலாக சுற்றுலா மையம் அமைக்க இருப்பதாகவும் உத்தரப்பிரதேச மாநில அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #TajMahal #UttarPradesh #SupremeCourt
    உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை பாதுகாப்பதில் மத்திய அரசு கடைபிடித்துவரும் மெத்தனப்போக்குக்கு சுப்ரீம் கோர்ட் இன்று கண்டனம் தெரிவித்துள்ளது. #TajMahal
    புதுடெல்லி:

    உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவுக்கு ஆண்டுதோறும் சுமார் 75 லட்சம் வெளிநாட்டினர் சுற்றுலா வருகின்றனர். அவர்களின் முக்கிய சுற்றுலாத்தலமாக ஆக்ரா நகரில் உள்ள தாஜ் மஹால் திகழ்ந்து வருகின்றது.

    உலகின் அதிசயங்களில் ஒன்றாகவும், சலவைக்கற்களால் வடிக்கப்பட்ட கம்பீரக் கவிதையாகவும் நிமிர்ந்து நிற்கும் தாஜ் மஹால் சமீபகாலமாக நிறம்மங்கி பொலிவிழந்து காணப்படுகிறது.

    இதுதொடர்பாக, சுற்றுச்சூழல் ஆர்வலரான எம்.சி. மேத்தா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தொழிற்சாலைகள் வெளியிடும் புகையால் தாஜ் மஹாலின் பொலிவும், கவர்ச்சியும் மேலும் மங்கிவிடாதவாறு பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தாஜ் மஹாலை ஒட்டியுள்ள யமுனை ஆற்றுப் பகுதியில் உள்ள மரங்களை இனியாவது வெட்டாமல் தடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எம்.கே.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தபோது, எம்.சி. மேத்தா சமர்ப்பித்த புகைப்படங்களை பார்வையிட்ட நீதிபதிகள், முதலில் தாஜ் மஹால் பழுப்பு நிறமாக மாறியது. இப்போது பச்சையாகவும், அடர்சிவப்பு நிறமாகவும் காணப்படுகிறது என்று வேதனை தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞரிடம் அவர்கள் கேள்வி எழுப்பியபோது, தாஜ் மஹாலை பராமரிக்கும் நிர்வாக பொறுப்பு இந்திய தொல்லியல் துறையிடம் உள்ளதாக குறிப்பிட்டார்.

    தாஜ் மஹாலை மாசுப்பாட்டில் இருந்து பாதுகாக்க உங்களிடம் தேவையான நிபுணர்கள் இல்லையா? அல்லது, இருந்தும் இதுதொடர்பாக நீங்கள் அக்கறை எடுக்கவில்லையா? தாஜ் மஹால் எப்படியாவது போகட்டும் என்று முடிவெடுத்து விட்டீர்களா?

    அப்படி, உங்களிடம் நிபுணர்கள் இல்லாமல் போனாலும் நமது நாட்டில் உள்ள நிபுணர்கள் அல்லது வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனையை பெறலாம் என்று தெரிவித்த நீதிபதிகள் இவ்வழக்கின் விசாரணையை மே 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


    மே 9-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்திய தொல்லியல் ஆய்வு துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தாஜ் மஹாலை சுற்றி தேங்கி நிற்கும் யமுனை ஆற்றின் அசுத்த நீரில் காணப்படும் பூச்சிகளால் தாஜ் மஹால் அரிக்கப்பட்டு, பொலிவிழந்து வருவதாக குறிப்பிட்டார்.

    இதை கேட்டு பொறுமையிழந்த நீதிபதிகள், ’இந்திய தொல்லியல் ஆய்வு துறையினர் தங்கள் பணியை சரியாக செய்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. இதை தடுக்க நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? ஆனால், நீங்கள் பழியில் இருந்து தப்பித்து, உங்களை தற்காத்து கொள்வதில் அக்கறை காட்டுவதை அறிந்து இந்த கோர்ட் ஆச்சரியப்படுகிறது.

    தாஜ் மஹாலின் பராமரிப்பு தொடர்ந்து இந்திய தொல்லியல் ஆய்வு துறையிடம் இருக்க வேண்டுமா? என்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டனர்.

    இதற்கு பதிலளித்த மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர், ‘சுப்ரீம்  கோர்ட் முன்னர் அறிவுறுத்தியபடி, தாஜ் மஹாலை பாதுகாப்பதற்காக வெளிநாட்டு நிபுணர்களை நியமிப்பது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.


    இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.கே.லோகுர், தீபக் குப்தா ஆகியோர்முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    தாஜ் மஹாலை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள மாசுப்பாடு தொடர்பாக கான்பூர் ஐ.ஐ.டி.யை சேர்ந்த குழுவினர் ஆய்வு செய்து வருவதாகவும், இந்த குழுவின் அறிக்கை இன்னும் நான்கு மாதங்களில் சமர்ப்பிக்கப்படும் எனவும் மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இவ்விகாரத்தில் பாராளுமன்ற நிலைக்குழு அளித்த பரிந்துரைகளை ஏற்காமல் தாஜ் மஹாலை பாதுகாப்பதில் மத்திய அரசு கடைபிடித்துவரும் மெத்தனப்போக்குக்கு இன்று கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், தாஜ் மஹாலை பாதுகாக்க மத்திய அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? இனி மேல் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? என்பது தொடர்பாக விரிவான அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டனர்.

    தாஜ் மஹாலை பாதுகாப்பது தொடர்பாக வரைவு திட்டம் ஏதும் தயாரிக்க தவறிய உத்தரப்பிரதேசம் மாநில அரசின் செயல்பாடு குறித்தும் வேதனை தெரிவித்த நீதிபதிகள், வரும் 31-ம் தேதி முதல் இவ்வழக்கில் தினந்தோறும் விசாரணை நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். #SCslamsCentre #protectingTajMahal
    உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மகாலில் வெளியாட்கள் தொழுகை நடத்த உச்ச நீதிமன்றம் இன்று மறுப்பு தெரிவித்துள்ளது.
    லக்னோ :

    உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் அமைந்துள்ள ஆக்ரா பகுதிவாசிகளை தவிர வெளியாட்கள் யாரும் தாஜ் மகாலில் தொழுகை நடத்த கூடாது என ஆக்ரா மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

    இந்த தடையை எதிர்த்து தாஜ் மகால் மஸ்ஜித் மேலாண்மை குழுவை சேர்ந்த சையத் இப்ராகிம் ஹுசைன் சைதி என்பவர் கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்நிலையில், நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்ராவில் வசிப்பவர்களை தவிர மற்ற பகுதியில் இருந்து சுற்றுலா வருபவர்கள் தாஜ்மகாலில் தொழுகை நடத்த அனுமதி அளிக்க மறுத்தனர்.

    மேலும், தாஜ் மகால் உலக அதிசங்களில் ஒன்று எனும் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். தொழுகை நடத்த பல்வேறு இடங்கள் உள்ளன என கூறி  ஹுசைன் சைதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
    தாஜ் மஹாலை மாசுப்பாட்டில் இருந்து பாதுகாக்கும் வகையில் ரூ.50 ஆயிரம் விலையில் சூரிய சக்தியின் மூலம் இயங்கும் நவீன காரை பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். #tajmahal #solarcar
    லக்னோ:

    உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவுக்கு ஆண்டுதோறும் சுமார் 75 லட்சம் வெளிநாட்டினர் சுற்றுலா வருகின்றனர். அவர்களின் முக்கிய சுற்றுலாத்தலமாக ஆக்ரா நகரில் உள்ள தாஜ் மஹால் திகழ்ந்து வருகின்றது.

    உலகின் அதிசயங்களில் ஒன்றாகவும், சலவைக்கற்களால் வடிக்கப்பட்ட கம்பீரக் கவிதையாகவும் நிமிர்ந்து நிற்கும் தாஜ் மஹால் சமீபகாலமாக நிறம்மங்கி பொலிவிழந்து காணப்படுகிறது.

    இதுதொடர்பாக, சுற்றுச்சூழல் ஆர்வலரான எம்.சி. மேத்தா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தொழிற்சாலைகள் வெளியிடும் புகையால் தாஜ் மஹாலின் பொலிவும், கவர்ச்சியும் மேலும் மங்கிவிடாதவாறு பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், ஆக்ரா பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் தாஜ்மஹாலை மாசுப்பாட்டில் இருந்து பாதுகாக்கும் வகையில் சூரிய சக்தியின் மூலம் இயங்கும் நவீன காரை கண்டுபிடித்துள்ளனர்.

    ஆக்ரா நகரின் நெரிசல் மிகுந்த சாலையில் மணிக்கு அதிகபட்சமாக 30 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாளொரு மேனியாய் உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலையை கருத்தில் கொண்டும், வாகனங்கள் வெளியிடும் புகையால் தாஜ் மஹால் மேலும் மாசுபடாமல் தடுக்கும் வகையிலும் இந்த கார் உருவாக்கப்பட்டதாக தெரிவித்துள்ள மாணவர்கள், நமது நாட்டில் ஆண்டுதோறும் சூரிய ஒளி கிடைப்பதாலும், இந்த காருக்கான உதிரிபாகங்கள் சுலபமாக கிடைக்கும் என்பதாலும் இந்த திட்டம் நல்ல பலனைத் தரும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

    நான்கு பேர் அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த “நெக்ஸ்ஜென்”  (Nexgen)  காரின் விலை 50 ஆயிரம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.  #tajmahal #solarcar
    தாஜ்மகால் வளாகத்தில் குரங்குகள் தாக்கியதில் இரண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் காயம் அடைந்துள்ளனர். #TajMahal
    லக்னோ : 

    ஆக்ரா நகரில் உள்ள சுற்றுலா தலமான தாஜ்மகாலில் கடந்த சில மாதமாக நாய்கள் மற்றும் குரங்குகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. தாஜ்மகாலை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளையும் அவை அவ்வப்போது பயமுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இன்று தாஜ்மகாலை பார்வையிட வந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகளை குரங்குகள் கூட்டமாக தாக்கியது. 

    அவர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் குரங்குகளிடம் இருந்து காப்பாற்றினர். குரங்குகள் தாக்கியதில் அவர்களுக்கு கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

    தாஜ்மகால் வளாகத்தில் அதிகரித்து வரும் குரங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஆக்ரா நகராட்சியிடம் பலமுறை முறையிடப்பட்டுள்ளது. ஆனால் நகராட்சி தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குரங்குகளுக்கு மொத்தமாக ஆண்மை நீக்கம் செய்தால் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும் என பொதுநல அமைப்பு யோசனையை முன்வைத்தது.

    ஆனால் போதிய நிதிபற்றாக்குறை காரணம் காட்டி பொதுநல அமைப்பின் யோசனையையும் மாநகராட்சி தட்டிகழித்து விட்டது. அதிகரித்துவரும் குரங்குகளின் எண்ணிக்கையால் சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாது தாஜ்மகாலை சுற்றியுள்ள குடியிருப்புவாசிகளும் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #TajMahal
    ×