search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முற்றுகையிட்ட"

    குமாரபாளையத்தில் வங்கியை முற்றுகையிட்ட 24 பேரை போலீசார் கைது செய்தனர்.
    குமாரபாளையம்:

    அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றம் சார்பில் குமாரபாளையம் ஸ்டேட் வங்கியை முற்றுகையிடும் போராட்டம் நகர செயலர் அசோகன் தலைமையில் நடந்தது. 

    போராட்டத்தில் மத்திய அரசு பணியில் தமிழக இளைஞர்களுக்கு 90 சதவீதம் வேலை வழங்க வேண்டும்,  தமிழ்நாடு அரசு  காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    இப்போராட்டத்தில் பங்கேற்ற 24 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அடையாள அட்டை வழங்க மறுத்ததால் அ.புதூர் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    மகுடஞ்சாவடி:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஒன்றியம் அ.புதூர் ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 1200-க்கும் மேற்பட்டோர் பணி  செய்து வருகின்றனர்.

    இவர்களுக்கு அடையாள அட்டை புதுப்பிக்கும் பணி கடந்த மாதத்தில் முடிவடைந்த நிலையில் பணிபுரிபவர்களுக்கு புதிய அட்டை வழங்க  ஊராட்சி நிர்வாகம் தாமதப்படுத்தி வந்தனர்.  மேலும், ரூ.1000  கட்டினால் மட்டுமே உங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த   200- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊராட்சி   மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மகுடஞ்சாவடி  போலீசார்  சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். 

    இப்பிரச்சினை குறித்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சம்பந்தப்பட்ட  அதிகாரிகளோ, ஊராட்சி தலைவரோ நேரில் வரவில்லை.  அதுமட்டுமல்லாமல் இந்த ஊராட்சி மன்றத்திற்கு ஊராட்சி செயலர் இல்லாதது பெரும் குறைபாடாக இருந்து வருகிறது. 

     4 மணி நேரத்துக்குப் பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணி தள  பொறுப்பாளர்களை வைத்து புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்கள் கூறியதாவது:-

     அ. புதூர் ஊராட்சி மன்றத்திற்கு ஊராட்சி செயலர் இல்லாததால் இப்பகுதியில் நடைபெறும் ஊராட்சி பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது எனவும், ஏற்கனவே ஜல் ஜீவன் குடிநீர் குழாய் இணைப்பு பெறப்பட்ட வீட்டிற்கு தண்ணீர் வருவதில்லை எனவும், இது குறித்து ஒன்றிய ஆணையாளரிடம்  தெரிவித்தால், அவர் தலைவர் சொல்படி கேளுங்கள் என்கிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்
    ×