search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் 2022"

    தெண்டுல்கரின் ஐ.பி.எல். அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய அணியில் இருந்து ஒருவர் கூட இடம் பெறவில்லை.
    மும்பை:

    கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கர் சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியின் அடிப்படையில் 11 வீரர்களை தேர்வு செய்து உள்ளார்.

    சச்சின் தெண்டுல்கர் தேர்வு செய்த ஐ.பி.எல். லெவனில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட்கோலி ஆகியோருக்கு இடமில்லை. இருவரது ஆட்டமும் இந்த ஐ.பி.எல். போட்டியில் மோசமாக இருந்ததால் அவர்களை தேர்வு செய்யவில்லை.

    விராட்கோலி 341 ரன் எடுத்து இருந்தார். சராசரி 22.73 ஆகும். ரோகித் சர்மாவின் சராசரி 19.14 ஆக இருந்தது. அவர் 14 ஆட்டத்தில் மொத்தம் 268 ரன்களே எடுத்தார்.

    ஐ.பி.எல். கோப்பையை வென்ற குஜராத் டைடன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தெண்டுல்கர் அணிக்கு தேர்வு செய்த லெவனுக்கு கேப்டனாக உள்ளார்.

    ஜஸ்பட்லர், ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாகவும், 3-வது வரிசைக்கு லோகேஷ் ராகுலையும் அவர் தேர்வு செய்துள்ளார்.

    தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக்குக்கு இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது. வெஸ்ட்இண்டீஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாட்டு வீரர்களுக்கு அவரது அணியில் இடமில்லை.

    தெண்டுல்கர் தேர்வு செய்த ஐ.பி.எல். லெவன் வீரர்கள் வருமாறு:-

    ஜாஸ் பட்லர் (இங்கிலாந்து), ஷிகர்தவான், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), டேவிட் மில்லர் (தென்ஆப்பிரிக்கா), லிவிங்ஸ்டோன் (இங்கிலாந்து), தினேஷ் கார்த்திக், ரஷீத்கான், முகமது ஷமி, பும்ரா, யசுவேந்திர சாஹல்.

    குஜராத் அணியில் 4 பேரும், ராஜஸ்தான், பஞ்சாப் அணியில் தலா 2 பேரும், லக்னோ, பெங்களூர், மும்பை அணிகளில் தலா ஒருவரும் இடம் பெற்றுள்ளனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய அணியில் இருந்து ஒருவர் கூட இடம் பெறவில்லை. 

    குஜராத் அணி அறிமுக தொடரிலேயே கோப்பையை வென்றது மிகவும் சிறப்பு வாய்ந்தது என கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்தார்.
    அகமதாபாத்:

    ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.

    இந்நிலையில், முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற குஜராத் அணியினர் குஜராத் தலைநகர் காந்தி நகரில் வெற்றிக் கோப்பையை ஊர்வலமாக சென்றனர்.

    கோப்பையுடன் சென்ற வண்டியில் குஜராத் அணி வீரர்கள் உடனிருந்து வெற்றி கோஷங்களை எழுப்பினர். வழியெங்கும் ரசிகர்கள் ஆரவாரமாக கோஷமிட்டனர்.
    நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை ஜோஸ் பட்லர் பெற்றார்.
    அகமதாபாத்:

    ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்தது. 

    இதையடுத்து, 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. அந்த அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன் கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. 

    நடப்பு ஐபிஎல் தொடரில் 4 சதங்களுடன் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர் கைப்பற்றினார்.

    இந்நிலையில், நேற்றைய போட்டியில் ஜோஸ் பட்லர் புதிய சாதனை படைத்தார். ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னரை பின்னுக்குத் தள்ளி பட்லர் 2-வது இடத்தை பிடித்தார். பட்லர் இதுவரை 863 ரன்கள் எடுத்துள்ளார்.

    இந்தப் பட்டியலில் பெங்களூரு அணியின் விராட் கோலி (973 ரன்கள் - 2016 ஆம் ஆண்டு ) முதல் இடத்தில் உள்ளார். 3-வது இடத்தில் டேவிட் வார்னர் (848 ரன்கள் - 2016) உள்ளார்.
    நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி ரசிகர்களுக்கு சில மகிழ்ச்சியான தருணங்களை கொடுத்தோம் என ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.
    ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:-

    இந்த சீசன் எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி ரசிகர்களுக்கு சில மகிழ்ச்சியான தருணங்களை கொடுத்தோம்.

    இளம் வீரர்கள், சீனியர்கள் என அனைவரும் ஒரு அணியாக சிறப்பாக விளையாடினர். அணி வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். போட்டியில் பந்து வீச்சாளர்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

    இதனால் ஏலத்தில் அவர்கள் மீது முதலீடு செய்து எடுத்தோம். இன்றைய நாள் (நேற்று) எங்களுக்கு சிறப்பாக அமையவில்லை. கோப்பையை வென்ற குஜராத் அணிக்கு வாழ்த்துக்கள் என்றார்.
    போட்டிகளில் நாங்கள் தவற விட்ட விஷயங்கள் என்ன, எவ்வாறு சிறப்பாக செயல்படுவது என்பதை பற்றி எப்போதும் பேசினோம் என ஹர்த்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.
    கோப்பையை வென்றது குறித்து குஜராத் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    ஒரு அணியாக விளையாடினால் அற்புதங்களை செய்ய முடியும் என்பதற்கு இந்த அணியே சரியான உதாரணம்.

    நானும், பயிற்சியாளர் ஆசிஷ் நெக்ராவும் சிந்தனையில் ஒரே மாதிரியானவர்கள். போட்டிகளை வெல்லக் கூடிய சரியான பந்து வீச்சாளர்களை விளையாட வைக்க விரும்பினோம். 20 ஓவர் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் விளையாட்டாக இருக்கலாம்.

    ஆனால் பந்து வீச்சாளர்கள் உங்களை வெற்றி பெற வைப்பார்கள். வீரர்களுக்கு அணி ஊழியர்கள் வழங்கிய ஆதரவு அற்புதமானது. போட்டிகளில் நாங்கள் தவற விட்ட விஷயங்கள் என்ன, எவ்வாறு சிறப்பாக செயல்படுவது என்பதை பற்றி எப்போதும் பேசினோம்.

    5 இறுதிப்போட்டிகளில் (மும்பை அணியில் விளையாடிய போது) வெற்றி பெற்றதால் நான் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன்.

    குஜராத் அணி அறிமுக தொடரிலேயே கோப்பையை வென்றது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    ஏனென்றால் நாங்கள் ஒரு பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளோம். வரும் தலைமுறையினர் இதை பற்றி பேசுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஐபிஎல் 2022 போட்டி தொடரில் வளர்ந்து வரும் வீரர் விருதுக்கு வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.
    அகமதாபாத்:

    15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இறுதிப்போட்டியில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 133 ரன்னே எடுத்தது. அதிகபட்சமாக ஜோஸ்பட்லர் 39 ரன் எடுத்தார்.

    குஜராத் தரப்பில் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா 3 விக்கெட்டும், சாய் கிஷோர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் விளையாடிய குஜராத் 18.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 133 ரன் எடுத்து வென்றது. சுப்மன் கில் 45 ரன்னும் ஹர்த்திக் பாண்ட்யா 34 ரன்னும், டேவிட் மில்லர் 32 ரன்னும் எடுத்தனர்.

    புதுமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் அறிமுக தொடரிலேயே கோப்பையை வென்று அசத்தி உள்ளது.

    கோப்பை வென்ற குஜராத் அணிக்கு ரூ.20½ கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

    இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரூ.12½ கோடி வழங்கப்பட்டது.

    3-ம் இடம் பெற்ற பெங்களுரு அணிக்கு ரூ.7 கோடி, 4-வது இடத்தை பிடித்த லக்னோ அணிக்கு ரூ.6.5 கோடி வழங்கப்பட்டது.

    இத்தொடரில் அதிக ரன் (863) குவித்த ராஜஸ்தானின் ஜோஸ்பட்லருக்கு ரூ.10 லட்சமும், அதிக விக்கெட் (26) கைப்பற்றிய ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர சாகலுக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்பட்டது.

    அதிக சிக்சர் (45) அடித்த ஜோஸ் பட்லர் ரூ.10 லட்சம் பெற்றார்.

    ஆட்டத்தை மாற்றுபவர் விருது ஜோஸ் பட்லர் (ரூ.10 லட்சம் பரிசு) பெற்றார்.

    தொடர் நாயகன் விருதையும் ஜோஸ் பட்லர் கைப்பற்றினார்.

    வளர்ந்து வரும் வீரர் விருதுக்கு வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் (ஐதராபாத்) தேர்வு செய்யப்பட்டு அவருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.

    சிறந்த கேட்ச் விருது லக்னோ அணி வீரர் எவன் லீவிஸ் (கொல்கத்தாவுக்கு எதிராக) பெற்றார்.

    இறுதிப் போட்டியில் 157.3 கி.மீ. வேகத்தில் பந்து வீசிய குஜராத்தின் பெர்குசன் இத்தொடரின் அதிக வேக பந்துவீச்சாளர் விருதை வென்றார்.
    ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் தொடர் இறுதிப்போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
    அகமதாபாத்:

    ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் இறங்கினர். அணியின் எண்ணிக்கை 31 ஆக இருக்கும்போது ஜெய்ஸ்வால் 22 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ரன்னில் நடையை கட்டினார். தேவ்தத் படிக்கல் 2 ரன்னில் ஏமாற்றினார். ஓரளவு தாக்குப் பிடித்து ஆடிய ஜோஸ் பட்லர் 39 ரன்னில் வெளியேறினார். ஹெட்மயர் 11 ரன்னிலும், அஸ்வின் 6 ரன்னிலும், டிரெண்ட் போல்ட் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை எடுத்துள்ளது. 

    குஜராத் சார்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட், சாய் கிஷோர் 2 விக்கெட், ரஷீத் கான், யாஷ் தயாள், ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 131 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்குகிறது.
    டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார்.
    அகமதாபாத்:

    ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

    கொரோனா பரவலால் கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் நிறைவு விழா நடைபெறாத நிலையில், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று ஐபிஎல் நிறைவு விழா மிக பிரம்மாண்டமாக நடந்தது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்வித்தனர். இந்த போட்டியை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டனர்.

    இந்நிலையில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார்.
    ஐபிஎல் நிறைவு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
    அகமதாபாத்:

    ஐபிஎல் தொடரின் 15வது சீசனின் இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. 

    இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன் ஐபிஎல் நிறைவு விழா நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடனமாடி அசத்தினார்.
    விராட் கோலி ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையில் செய்த தவறுகளை விட இந்த ஐ.பி.எல். போட்டிகளில் அதிக தவறுகளை செய்து விட்டதாக முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்தர் ஷேவாக் தெரிவித்துள்ளார்.
    சர்வதேச போட்டியில் 2½ ஆண்டுகளாக சதம் அடிக்காத இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு இந்த ஐ.பி.எல். சீசன் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது.

    33 வயதான விராட் கோலி 16 ஆட்டத்தில் விளையாடி 341 ரன்கள் எடுத்தார். 2 முறை மட்டுமே அரை சதம் அடித்தார். அவரது சராசரி 22.73 ஆகும்.

    பெரும்பாலான ஆட்டங்களில் தொடக்க வீரராக அடி குறைவான ரன்களையே எடுத்தார்.

    இந்த நிலையில் விராட் கோலி ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையில் செய்த தவறுகளை விட இந்த ஐ.பி.எல். போட்டிகளில் அதிக தவறுகளை செய்து விட்டதாக முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்தர் ஷேவாக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இது நமக்கு தெரிந்த விராட் கோலி அல்ல. வேறு விராட் கோலிதான் இந்த சீசனில் விளையாடினார். இந்த சீசனில் செய்த தவறுகளை ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையிலேயே அவர் செய்தது இல்லை.

    ரன்கள் குவிக்காத போது இது போன்று நிகழலாம். மோசமான பேட்டிங் நிலையை மாற்ற பல்வேறு வழிமுறைகளை பின்பற்றலாம். அது பல்வேறு விதமாக ஆட்டம் இழப்பதற்கு வழி வகுக்கும்.

    இந்த சீசனில் அனைத்து விதமான முறையிலும் கோலி அவுட் ஆகி உள்ளார்.

    இவ்வாறு ஷேவாக் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் தோல்வி அடைந்த போதிலும் ரசிகர்கள் தங்களுக்கு ஆதரவாக இருந்தற்காக விராட் கோலி தனது உருக்கமான பதிவில் நன்றி தெரிவித்து உள்ளார்.
    இரண்டாவது தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிச்சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதும்.
    அகமதாபாத்:

    15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் பிளே-ஆப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

    இறுதிப்போட்டிக்கான முதல் தகுதிச்சுற்றில் ராஜஸ்தானை தோற்கடித்து குஜராத் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. வெளியேற்றுதல் சுற்றில் லக்னோவை பெங்களூரு அணி தோற்கடித்தது.
     
    இந்நிலையில், இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார் என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதிச் சுற்று போட்டி இன்று இரவு அகமதாபாத்தில் நடக்கிறது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான், டு பிளசிஸ் தலைமையிலான பெங்களூரு ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, பெங்களூரு அணி முதலில் களமிறங்குகிறது.
    ×